Home
News

பிச்சுக்குது விற்பனை.. டாப் 5 பெஸ்ட் 20000mAh பவர் பேங்க்.. கம்மி விலையில் இத்தனை Power bank மாடலா? என்ன விலை?

ஸ்மார்ட்போன் (Smartphone) வைத்துள்ள அனைவரிடமும் கட்டாயம் ஒரு பவர் பேங்க் (Power Bank) சாதனம் இருப்பது அவசியம். குறைந்த விலையில் 20000mAh உடன் வாங்க கிடைக்கும் பெஸ்டான டாப் 5 பவர் பேங்க் சாதனங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

மொபைல் சார்ஜ்ர்களை (Mobile charger) செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்து செல்வதற்கு பதிலாக ஒரு பவர் சாதனத்தை கையேடு வைத்திருப்பது சிறந்தது. குறிப்பாக, எந்த வகையான பவர் பேங்க் சாதனம் உங்களுக்கு வேண்டும் என்பதை அறிந்து வாங்குவது கூடுதல் சிறப்பாகும். இப்போது சந்தையில் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் பல பவர் பேங்க் சாதனங்கள் வந்துவிட்டன.

பிச்சுக்குது விற்பனை.. டாப் 5 பெஸ்ட் 20000mAh பவர் பேங்க்..

பவர் பேங்க் சாதனம் 5000mAh, 10,000mAh மற்றும் 20,000mAh, 50,000mAh போன்ற பேட்டரி திறனுடன் இப்போது வாங்க கிடைக்கின்ற. இதில் 20,000mAh திறன் கொண்ட பேட்டரிகளை வாங்குவதே சிறந்ததாகும். காரணம், இதன் பேட்டரி சார்ஜிங் அளவு அதிகமாகவுள்ளது. 20,000mAh பவர் பேங்க் சாதனத்துடன் நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை சுமார் 4 முதல் 5 முறை வரை சார்ஜ் செய்யலாம்.

mAh என்றால் என்ன? (What Does mAh Means):

ஒவ்வொரு பேட்டரியின் mAh ரேட்டிங்கும் அதன் சார்ஜ் திறன் மற்றும் எவ்வளவு நேரம் ஒரு கேஜெட்டை இயக்க முடியும் என்பதைப் பிரதிபலிக்கிறது. mAh என்பது ஒரு மில்லியம்பியர்-மணிநேரம் என்று கூறப்படுகிறது. இது பேட்டரி ஒரு மணிநேரத்திற்கு ஒரு மில்லியம்பியர் (mA) மின்னோட்டத்தை வழங்க முடியும் என்பதை குறிக்கிறது.

மேலும், பெரும்பாலான பேட்டரிகள் கணிசமான அளவு பெரிய கொள்ளளவைக் கொண்டுள்ளன. மேலும் பெரும்பாலான கேஜெட்டுகள் பேட்டரியின் முழுத் திறனுடன் ஒப்பிடும் போது பேட்டரியின் சார்ஜை மிகக் குறைந்த விகிதத்தில் குறைக்கின்றன. இதை நன்கு புரிந்து கொள்ள, இந்த உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வெவ்வேறு பவர் பேங்க்கள் இருக்கின்றன, ஆனால் ,சமமான பேட்டரிகள் மற்றும் ஒரே மாதிரியான பணிச்சுமையைக் கையாளும் பட்சத்தில், 8000 mAh பேட்டரி திறன் கொண்ட பவர் பேங்க், 6,000 mAh பேட்டரியைக் கொண்ட பவர் பேங்கை விட முழு சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் உங்கள் போனை அதிக நேரம் சார்ஜ் செய்யும்.

இதுவே வித்தியாசமாகும். எப்போது உங்கள் கையில் இருக்கும் கேட்ஜெட்களுக்கு சரியான பவர் பேங்க் சாதனத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். இந்த பட்டியலில் 20000mAh திறனுடன் வாங்க கிடைக்கும் பெஸ்டான 5 பவர் பேங்க் சாதனங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

1. சியோமி பவர் பேங்க் 3i 20000mAh (MI Power Bank 3i 20000mAh):
இதன் விலை: ரூ. 2,150 ஆகும்.
2. பிட்ரான் டைனமோ கிளாசிக் 20000mAh 22.5W பவர் பேங்க் (pTron Dynamo Classic 20000mAh 22.5W Power Bank):
இதன் விலை: ரூ. 1,600 ஆகும்.
3. அம்பரேன் 20000mAh பவர் பேங்க் (Ambrane 20000mAh Power Bank):
இதன் விலை ரூ. 1,700 ஆகும்.
4 அர்பன் 20000mAh பிரீமியம் நானோ பவர் பேங்க் (URBN 20000 mAh Premium Nano Power Bank):
இதன் விலை ரூ. 2,500 ஆகும்.
5. Redmi 20000mAh பவர் பேங்க் (Redmi 20000mAh Power Bank):
இதன் விலை ரூ.1,799 ஆகும்.

தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் மூலம் இந்த சாதனங்களின் விலை மிகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் தளத்தில் நாளை முதல் சிறப்பு விற்பனை துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget Friendly Top 5 2000 mAh Power Bank Devices To Buy In India Now Check The List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X