Home
News

Apple Vision Pro முன்பதிவு துவங்கியது.. விலைய கேட்டால் ஆடிப்போய்டுவீங்க.. பாக்சுடன் என்னவெல்லாம் கிடைக்கும்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் முதல் ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங் ஹெட்செட் (Spatial computing headset) சாதனமான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) சாதனம் இப்போது அமெரிக்காவில் முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் முழு விபரம் இதோ.

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங் ஹெட்செட் (Spatial computing headset) சாதனமான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) டிவைஸை அறிமுகம் செய்தது. அதற்கு பிறகு, இப்போது US இல் நிறுவனம் இந்த ஹெட்செட்டிற்கான முன்பதிவை துவங்கியுள்ளது.

Apple Vision Pro முன்பதிவு துவங்கியது.. விலைய கேட்டா ஆடிப்போய்டுவீங்க

இப்போது ப்ரீ-புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் ஆப்பிள் விஷன் ப்ரோ வினாயகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் முழு சிறப்பம்ச விபரம் மற்றும் அதன் பாக்ஸ் உடன் என்ன உள்ளடக்கங்கள் இருக்கும் என்ற முழு தகவலையும் ஆப்பிள் இப்போது விலை பட்டியலுடன் வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro):

Apple Vision Pro சாதனத்தை ஆர்டர் செய்ய, ஆப்பிள் பயனர்களிடம் கட்டாயம் ஃபேஸ் ஐடியுடன் செயல்பட கூடிய ஐபோன் (iPhone) ஸ்மார்ட்போன் அல்லது ஐபேட் (iPad) டேப்லெட் போன்ற சாதனங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. காரணம், இதன் மூலம் சரியான அளவைக் கண்டறிய ஃபேஸ் ஸ்கேன் (face scan) செய்யப்படும்.

ஃபேஸ் ஸ்கேன் செய்த பிறகு, கஸ்டமைஸ் செய்யப்பட்ட சரியான அளவில் பொருந்தக்கூடிய ஹெட் பேண்ட் (headband) மற்றும் லைட் சீல் (Light Seal) கருவிகளை ஆப்பிள் வழங்குமாம். ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனத்தினுள் நிறுவனம் என்னென்ன வழங்குகிறது என்ற விபரங்கள் இதோ. ஆப்பிள் விஷன் ப்ரோ பாக்ஸ் உடன் லைட் சீல் (Light Seal), லைட் சீல் குஷன் (Light Seal Cushion) வழங்கப்படும்.

Apple Vision Pro முன்பதிவு துவங்கியது.. விலைய கேட்டா ஆடிப்போய்டுவீங்க

இத்துடன் சோலோ நிட் பேண்ட் (Solo Knit Band), டிஸ்பிளே கவர் (Display Cover), டூயல் லூப் பேண்ட் (Dual Loop Band), எக்ஸ்டர்னல் பேட்டரி (External Battery), பாலிஷ் துணி (Polishing Cloth), 30W USB-C பவர் அடாப்டர் (30W USB-C Power Adapter) மற்றும் USB-C சார்ஜ் கேபிள் (1.5 மீ) ஆகியவை கிடைக்கும்.

ஆப்பிள் விஷன் ப்ரோ சிறப்பம்சம் (Apple Vision Pro Specifications):
23 மில்லியன் பிக்சல்கள் மைக்ரோ‑OLED 3D டிஸ்பிளே அமைப்பு, 92% DCI‑P3, 7.5‑மைக்ரான் பிக்சல் ஆதரிக்கப்படும். இதன் ரெஃப்ரஷ் ரேட் 90Hz, 96Hz, 100Hz வரை செல்கிறது. ஜட்டர் இல்லாத வீடியோவிற்கு 24fps மற்றும் 30fps இல் பல பிளேபேக்கை ஆதரிக்கிறது. 1080p ஏர்ப்ளே வரை Apple Vision Pro இல் உங்கள் பார்வையை எந்த AirPlay-இயக்கப்பட்ட சாதனத்திலும் பிரதிபலிக்கும்

இது visionOS உடன் Apple M2 (8‑core CPU/10‑core GPU/ 16‑core Neural Engine) உடன் Apple R1 டூயல்-சிப், ரியல்டைம் பெர்பார்மென்ஸை வழங்குகிறது. இது 16 ஜிபி ரேம் உடன் 256GB | 512GB | 1TB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் கைகள், கண்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சங்கள் உள்ளது.

Apple Vision Pro முன்பதிவு துவங்கியது.. விலைய கேட்டா ஆடிப்போய்டுவீங்க

இதில் 2 x உயர்-தெளிவுத்திறன் கொண்ட பிரைமரி கேமரா, 6 x வொர்ல்டு பேசிங் ட்ராக்கிங் கேமரா, 4 x கண்-கண்காணிப்பு கேமராக்கள், TrueDepth கேமரா, LiDAR ஸ்கேனர், 4 x IMUs, ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் சுற்றுப்புற ஒளி சென்சார், ஆறு-மைக் அரேய்; டைனமிக் ஹெட் டிராக்கிங்குடன் கூடிய ஸ்பேஷியல் ஆடியோ Wi‑Fi 6 (802.11ax), புளூடூத் 5.3 அம்சத்தை இது கொண்டுள்ளது.

ஆப்பிள் விஷன் ப்ரோ விலை (Apple Vision Pro Price):

இதன் பேட்டரி ஆயுள் 2 மணிநேரம் வரை பொதுப் பயன்பாட்டில் செய்லபடும். 2.5 மணிநேரம் வரை வீடியோவைப் பார்க்க அனுமதிக்கும். பேட்டரியை சார்ஜ் செய்யும் போதும் ஆப்பிள் விஷன் ப்ரொவை பயன்படுத்தலாம். இதன் விலை 256GB மாடலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 2,90,810 ஆகிறது. இதன் 512GB மாடல் ரூ. 3,07,435 விலையிலும் 1TB மாடல் ரூ. 3,24,055 லட்சம் விலையிலும் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Vision Pro Spatial Computing Headset Goes On Pre-Booking In US Check Price and Specs Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X