Home
News

கிளிக் பண்ணா 90 நொடிகளில் போட்டோ.. ரொம்ப அட்வான்ஸ்.. ஆனால், விலை கம்மி!

நம்மில் பலருக்கு போட்டோக்களை பிரிண்ட் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இருப்பினும், ஸ்மார்ட்போனில் எளிதாக போட்டோகளை பார்க்கவும், நெருங்கியவர்களுக்கு ஷேர் செய்யவும் முடிவதால், அதை அப்படியே மறந்துவிடுகிறோம். ஆனால், இந்த இன்ஸ்டன்ட் கேமரா அதையெல்லாம் தலைகீழாக மாற்றிவிடும்.

நாம்முடைய ஸ்மார்ட்போன்களில், எடுக்கப்படும் போட்டோக்கள் என்னதான், சூப்பராக இருந்தாலும், அதை கடையில் கொடுத்து பிரிண்ட் எடுக்கும் போது, டிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராவில் கிடைக்கும் குவாலிட்டி கிடைக்காது. அதனாலேயே, கேமராக்கள் மீதான ஈர்ப்பு, சற்றும் குறையாமல் இருக்கிறது. இந்த கேமராவில் இன்ஸ்டன்ட்டாக போட்டோக்கள் வந்தால் எப்படி இருக்கும்?

கிளிக் பண்ணா போதும்.. போட்டோ கையில.. ரொம்ப அட்வான்ஸ்.. விலை வேற கம்மி!

அதுவும் விரும்பிய இடங்களுக்கு செல்லும்போது, இன்ஸ்டன்ட் போட்டோக்கள் கிடைத்தால், அது நமக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும். அன்றைய நாளையே சிறப்பானதாக மாற்றிவிடும். இப்படிப்பட்ட இன்ஸ்டன்ட் கேமரா தயாரிப்பில், சிறந்த விளங்கும் பியூஜிஃபிலிம் (Fujifilm) நிறுவனம் பட்ஜெட் விலையில், அசத்தலான அம்சங்களுடன் கூடிய பியூஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஸ்குவேர் எஸ்கியூ 40 (Fujifilm Instax Square SQ40) கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கேமராவில் கிளிக் செய்தால் போதும் 90 நொடிகளில், உங்களது கையில் போட்டோ இருக்கும். பிரிண்டர் பக்கமே போக வேண்டியதில்லை. அதேபோல பேட்டரியில் இயங்கும் வசதி உள்ளதால், சார்ஜிங் பிரச்சனை இருக்காது. எங்கு வேண்டுமானாலும் தைரியமாக எடுத்து செல்லலாம். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கேமராவின் முழு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் பின்வருமாறு.

பியூஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஸ்குவேர் எஸ்கியூ 40 அம்சங்கள்: இந்த இன்ஸ்டன்ட் கேமராவில் எடுக்கப்படும் போட்டோஸ் 62 மிமீ × 62 மிமீ அளவில் இருக்கும். இந்த கேமரா ரிவர்ஸ் கலிலியன் வியூஃபைண்டர் (Reverse Galilean Viewfinder) கொண்டுள்ளது. அதோடு 0.4× டார்கெட் ஸ்பாட் வருகிறது. சூட்டிங் ரேன்ஞ் (Shooting Range) 0.3 மீட்டர் கிடைக்கும்.

செல்பீ மோடில் 0.3 முதல் 0.5 மீட்டர் வரையில் கிடைக்கும். 1/2 முதல் 1/400 செகண்ட்ஸ் ஸ்பிடூ கொண்ட புரோகிராம்ட் எலக்ட்ரானிக் ஷட்டர் (Programmed Electronic Shutter) வருகிறது. அதோடு லோவ் லைட் சிங்க்ரோ (Synchro) அம்சம் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் எக்ஸ்போஷர் கன்ட்ரோல் (Automatic Exposure Control) மற்றும் ஆட்டோமேட்டிக் ஃபிலிம் எஜெக்ஷன் (Automatic Film Ejection ) வருகிறது.

இந்த கேமராவில் கிளிக் செய்யப்படும் போட்டோக்கள் 90 நொடிகளில் பிரிண்ட்டாகி வெளியே வந்துவிடும். இரவில் போட்டோக்களை எடுக்கும் வகையில் பிளாஷ் லைட் வருகிறது. இந்த கேமராவில் 2 லித்தியம் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் கேமராவை ஆன் செய்துவிட்டு, 5 நிமிடங்கள் எந்த போட்டோவையும் எடுக்கவில்லை என்றால், ஆட்டோமேட்டிக்காக அது ஆஃப் ஆகிவிடும். இதன் மொத்த எடை 453 கிராமாக உள்ளது.

இந்த பியூஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஸ்குவேர் எஸ்கியூ 40 இன்ஸ்டன்ட் கேமராவின் விலையை பொறுத்தவரையில், ரூ.16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Fujifilm Instax Square SQ40 Instant Camera Specifications Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X