ரூ.1000 பட்ஜெட்டில் ஸ்டீரியோ இயர்பட்ஸ்.. வேறே சாய்ஸ் தேவைப்படாது!
போர்ட்ரானிக்ஸ் (Portronics) நிறுவனத்தின் போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் ட்வின்ஸ் எஸ்6 இயர்பட்ஸ் (Portronics Harmonics Twins S6 Earbuds) பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது, அறிமுக விலையாக பாதிக்குப்பாதி விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.
இப்போது மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான இயர்பட்ஸ்கள் என்னதான் இஎன்சி (ENC), லோ லேட்டன்சி (Low Lattency) என்று பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உடன் விற்பனைக்கு வந்தாலும், பேட்டரி விஷயத்தில் மண்ணை கவ்வுகின்றன. ஏனென்றால், ப்ளூடூத் இயர்பட்ஸ்களுக்கு முக்கிய அம்சமே பேட்டரி மட்டுமே. இதனால், பேட்டரி பேக்கப் சிறப்பாக உள்ள இயர்பட்ஸ்களை வாங்குவதில் மக்களின் கவனம் சென்றுள்ளது.

இதனை புரிந்துகொண்ட நிறுவனங்களுகம் அதிக மணி நேரம் பேக்கப் கிடைக்கும் வகையிலான, இயர்பட்ஸ்களை உருவாக்கி விற்பனைக்கு களமிறக்கி வருகிறது. அந்த வகையில், போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் 50 மணி நேரம் பேக்கப் கிடைக்கக்கூடிய இயர்பட்ஸ்களை உருவாக்கி அசத்திவருகிறது. இந்த வரிசையில், போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் ட்வின்ஸ் எஸ்6 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போர்ட்ரானிக்ஸ் ட்வின்ஸ் எஸ்6 இயர்பட்ஸ் அம்சங்கள்: இந்த இயர்பட்ஸ் மார்க்கெட்டில் வரும் மற்ற இயர்பட்ஸ்களை விட லைட் வெயிட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 10 மிமீ டைனமிக் டிரைவர்கள் (Dynamic Drivers) வருகிறது. பேலன்ஸ்ட் பேஸ் (Balanced Bass) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேஸ் சவுண்ட் பிரியர்களுக்கு மிகுந்த விருப்பமுள்ளதாக இருக்கும்.
ப்ளூடூத் v5.3 இணைப்புத்திறன் வருகிறது. அதோடு குயிக் கனெக்ட் சப்போர்ட் (Quick Connect Support) உள்ளது. கிரிஸ்டல் கிளியர் காலிங் அனுபத்திற்காக இஎன்சி (ENC) தொழில்நுட்பத்துடன் கூடிய குவாட் மைக் (Quad Mic) வருகிறது. 650 mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 50 மணி நேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும். டீப் பேஸ் (Deep Bass) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மைக்ரோபோன்கள் (Microphones) வருகிறது.
அதேபோல 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 10 மணி நேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கேற்ப ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப் சி போர்ட் வருகிறது. அதேபோல வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் மற்றும் டைக் கன்ட்ரோல்ஸ் ( Touch Controls) வருகிறது.
பிளாக் (Black) மற்றும் வைட் (White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் ட்வின்ஸ் எஸ்6 இயர்பட்ஸ் விலை ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்போது அறிமுக விலையாக ரூ.1,999 க்கு கிடைக்கிறது. ஒரு வருட வாராண்டி (Warranty) வருகிறது. IPX4 தர ஸ்பிளாஸ் (Splash) மற்றும் ஸ்வெட் ரெஸிஸ்டென்ட் (Sweat Resistance) வருகிறது.
போர்ட்ரானிக்ஸ் (Portronics), அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த விலை அடுத்த சில வாரங்களே இருக்க வாய்ப்புள்ளது. . மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications