Home
News

இது டிசைனா? கிராபிக்ஸா? சரவெடியென வெடிக்கும் புதிய boAt இயர்பட்ஸ்

இந்தியாவில் போட் நிறுவனத்தின் புதிய போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் (boAt Airdopes Genesis) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸின் டிசைனை பார்த்தால் கிராபிக்ஸ் என்று தோன்றும் போல, அப்படி அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய இசைப்பிரியர்களுக்கும், கேமிங் பிரியர்களுக்கும், டிசைன் பிரியர்களுக்கும் ஒன்று சேர ட்ரீட் வைத்தது போல போட் நிறுவனத்தின் (boAt) புதிய போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் இயர்பட்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் விலையில், ஃபாஸ்ட் சார்ஜிங், லோவ் கேமிங் லேட்டன்சி மோட், பெரிய பேட்டரி என்று பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

இது டிசைனா? கிராபிக்ஸா? சரவெடியென வெடிக்கும் புதிய boAt இயர்பட்ஸ்

சவுண்ட் அனுபவத்திலும், ப்ளூடூத் காலிங் அனுபவத்திலும் சிறப்பாக செயல்படும் இயர்பட்ஸ் கிடைக்கலையே என்று பல பிராண்ட் இயர்பட்ஸ்களை வாங்கி பயன்படுத்தி அதிருப்தி அடைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் இயர்பட்ஸ், நல்ல சாய்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் முழு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் பின்வருமாறு.

போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் : காம்பேக்ட் (Compact) டிசைனில் மெட்டாலிக் (Metallic) ஃபினிஷிங் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. v5.3 ப்ளூடூத் (Bluetooth) இணைப்புத்திறன் கொண்டுள்ளது. 13 மிமீ டிரைவர்கள் (Drivers) வருகின்றன. போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் இயர்பட்ஸில் பிரத்யேகமான இசை அனுப்பவத்தை கொடுக்க போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்-இயர் டிடெக்ஷன் (In-ear Detection) வசதி உள்ளது. சிறந்த ப்ளூடூத் காலிங் (Bluethooth Calling) வசதிக்காக இஎன்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் (ENx Technology) குவாட் மைக் (Quad mic) கொடுக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ் கேஸில் (case) 400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்களில் (earbuds) தனித்தனியே 35mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 54 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். டைப் - சி போர்ட் உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging) வசதி உள்ளது.

வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் இயர்பட்ஸ்களை பயன்படுத்த முடியும். அதோடு 65ms லோவ் லேட்டன்சி மோட் வருகிறது. இதற்கு பீஸ்ட் மோட் (BEAST Mode) என்று பெயரிடப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice assistant) அம்சம் உள்ளது. IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Water and Sweat Resistance) உள்ளது. ஒரு வருட வாரண்டி உடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டிவ் பிளாக் (Active Black), வைட் ப்யூரிட்டி (White Purity), ஓசானா (Oceana) ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது.

அமேசான் (Amazon) மற்றும் போட் வெப்சைட்டில் (boAt website) விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் இயர்பட்ஸின் விலை ரூ.1,799ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes Genesis Earbuds Launched in India With 54 hours playback
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X