OnePlus 12 இன் 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜ்ஜர்.. இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா? தனியாக சார்ஜர் என்ன விலை?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் 10ம் ஆண்டு வெற்றி கொண்டாட்டத்துடன், அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங் (வயர்லெஸ் சார்ஜிங்) அம்சத்துடன் வந்துள்ளது. இது பற்றிய விபரம் இதோ.
நீண்ட காலமாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ரசிகர்கள் (OnePlus smartphone fans) எதிர்பார்க்கும் அம்சமாக வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருந்து வருகிறது. ஆப்பிள் ஐபோனில் (Apple iPhone) வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறது. சியோமி (Xiaomi) போனில் கூட வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறது. ஆனால், ஒன்பிளஸ் புது போனில் இன்னும் வயர்லெஸ் சார்ஜிங் இல்லையே என்று குமுறிக் கொண்டிருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒருவழியாக ஒன்பிளஸ் நிறைவேற்றியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் மீண்டும் அதன் ஸ்மார்ட்போன் சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுவந்துள்ளது. தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் இதற்கு முன்பு அதன் ஒன்பிளஸ் 9 ப்ரோ (OnePlus 9 Pro) மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) சாதனங்களில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை வழங்கி வந்தது. ஒன்பிளஸ் திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை. ஒன்பிளஸ் 11 (OnePlus 11) ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை நீக்கியது.
ஒன்பிளஸ் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜ்ர் (OnePlus 50W AIRVOOC Wireless Charger):
திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை வழங்காமல் நிறுத்தியது. இப்போது என்ன நினைத்ததோ தெரியவில்லை, இன்று நிறுவனம் அறிமுகம் செய்த அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தின் 50W ஏர்வூக் (50W AIRVOOC) ஸ்டாண்டர்ட் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் (OnePlus) இன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட் அதிகாரப்பூர்வமாக 'OnePlus AIRVOOC 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜர் A1 (Wireless Flash Charger A1) என்று அழைக்கப்படுகிறது. இது நிறுவனத்தின் பழைய வயர்லெஸ் சார்ஜ்ர் மாடல் போன்ற வைட் மாடல் டிசைனை கொண்டுள்ளது. இந்த புதிய சார்ஜிங் ஆக்சஸ்ஸரீ விலை சீனாவில் ¥299 ஆகும். இது 40 டாலர் விலையாகும். இந்திய மதிப்பில் இது ரூ.3,335 என்ற விலையில் வருகிறது.

இந்த பாஸ்ட் சார்ஜ்ர் இன் ஸ்பீட் எத்தகையது? (What is the speed of this fast charger):
இது குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்பிளஸ் 12 போனுடன் வாங்கும் போது 30 டாலர் விலையில் விற்கப்படும். தனியாக வாங்கினால் குறிப்பிட்ட காலத்திற்கு இது $35 டாலர் விலையை வாங்க கிடைக்கும். OnePlus இன் இந்த புதிய வயர்லெஸ் சார்ஜர் திறனை பற்றி பேசுகையில், இது OnePlus 12 இன் 5,400mAh பேட்டரியை வெறும் 23 மினிட்ங்களில் 50% வரை சார்ஜ் செய்கிறது.
இந்த வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட் டூயல் காயில் வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. மேலும் இது ஸ்மார்ட்போனை ஸ்டாண்டில் கட்சிதமாக பொருந்த செய்ய சரியான 60° சாய்ந்த கோணத்தைக் கொண்டுள்ளது. இதில் பட்டர்ஃபிளை விங் ஏர் கூலிங் தொழில்நுட்பம் (butterfly wing air cooling technology) அமைக்கப்பட்டுள்ளது. இது சாதனம் சார்ஜ் செய்யப்படும் போது ஏற்படும் வெப்பத்தை குறைக்கிறது.
இதில் இன்டெலிஜெண்ட் கோயட் மோட் (intelligent quiet mode) அம்சமும் இடம்பெற்றுள்ளது.இது இரவு நேரங்களில் ஃபேன் வேகம் மற்றும் சார்ஜிங் வேகத்தை குறைக்கும் அறிவார்ந்த அமைதியான பயன்முறைக்கு ஆதரவு வழங்குகிறது. சுவாரஸ்யமாக, இந்த வயர்லெஸ் சார்ஜ்ஜர் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்6 ப்ரோ (Oppo Find X6 Pro) டிவைஸ்களுடன் மட்டுமே இணக்கமானது. இறுதியாக, இது 2 மிமீ தடிமன் கொண்ட கேஸ் வரை சார்ஜ் செய்கிறது.


Click it and Unblock the Notifications








