10 நிமிட சார்ஜிங்! 3 மணி நேர பேக்கப்! பீஸ்ட் மோடில் boAt இயர்பட்ஸ்! விலை வேற கம்மி!
ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் தட்டித்தூக்கும் வகையில், எந்தவொரு இயர்பட்ஸ்களிலும் இல்லாத பல அம்சங்களுடன் போட் (boAt) நிறுவனத்தின் போட் இம்மார்டல் 150 இயர்பட்ஸ் (boAt Immortal 150 Earbuds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியென்ன புதிதாத இருக்கிறது, என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் போட் நிறுவனம் தொடர்ந்து, புதுவிதமான தொழில்நுட்பங்கள் உடன் கூடிய இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில், இப்போது, 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையிலான போட் இம்மார்டல் 150 இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல், மற்ற அம்சங்களும் அள்ளித் தூக்குகிறது. இதன் முழு அம்சங்கள் பின்வருமாறு.

போட் இம்மார்டல் 150 இயர்பட்ஸ் அம்சங்கள்: இந்த இயர்பட்ஸ் கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேன்சி என்இடி லைட்ஸ் வருகிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) இணைப்புத் திறன் கொண்டுள்ளது. 10 மிமீ டிரைவர்கள் வருகிறது. போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ்களில் டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த காலிங் அனுபவத்திற்காக இஎன்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட குவாட் மைக் (Quad Mic) வருகிறது. இந்த இயர்பட்ஸ் கேஸில் 400mAh பேட்டரியும், இயர்பட்ஸ்களில் தலா 40mAh பேட்டரியும் இருக்கிறது. மொத்த பிளே பேக் டைம் 40 மணி நேரத்துக்கும் அதிகமாக கிடைக்கும்.
குறிப்பாக, போட் இம்மார்டல் 150 இயர்பட்ஸில் ஃபாஸ்ட் சார்ஜிகங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 180 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் பயன்படுத்த முடியும். அதேபோல பீஸ்ட் மோட் (BEAST Mode) எனப்படும் 40ms லோவ் லேட்டன்ஸி (Low latency ) வருகிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) வசதி இருக்கிறது. IPX4 தர ஸ்பிளாஸ் (Splash) மற்றும் ஸ்வெட் ரெஸிஸ்டென்ட் (Sweat Resistance) வருகிறது.
இந்த இயர்பட்ஸ்க்கு ஒருவருட வாராண்டி வருகிறது. இந்த போட் இம்மார்டல் 150 இயர்பட்ஸின் விலையை பொறுத்தவரையில், ரூ.1,199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக விலை மட்டுமே ஆகும். அடுத்த சில வாரங்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்போது, ஃபிளிப்கார்ட் மற்றும் போட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பிளாக் சபர் (Black Sabre) மற்றும் வைட் சபர் (White Sabre) ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications