Home
Gadgets

சூப்பருனு சொல்லுவீங்க! குட்டீஸ்களுக்கான பிரத்யேக டிசைன்! நச்சுனு இருக்கும் இயர்பட்ஸ்! எந்த பிராண்ட்?

இந்தியாவில் கிட்ஸ்களுக்காகவே பிரத்யேக டிசைனில் மட்டுமல்லாமல், காதுகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஸ்டால்கர் இயர்பட்ஸ் (Stalker Earbuds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட், சிங்கிள் இயர் ஸ்விட்ச்சிங் என்று அசத்துகிறது. இதன் மற்ற அம்சங்கள், விலை குறித்த விவரங்கள் இதோ.

இப்போதெல்லாம், குழந்தைகளும் இயர்போன், இயர்பட்ஸ் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், பெரியவர்களின் காதுகளுக்கே இயர்பட்ஸ்களின் அதிகபட்ச வால்யூம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், குழந்தைகளிடம் இயர்பட்ஸ் கொடுக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும். அவற்றின் டெசிபல் அளவில் முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும்.

சூப்பருனு சொல்லுவீங்க! குட்டீஸ்களுக்கான நச் இயர்பட்ஸ்! எந்த பிராண்ட்?

இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும், குழந்தைகளுக்கு ஏற்படியும் 60 டெசிபலுக்கும் குறைவான வால்யூம் அம்சம் கொண்ட இயர்பட்ஸை ஜஸ்ட் கோர்செகா (Just Corseca) என்னும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளுக்கு இயர்பட்ஸ் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டவர்கள், இதை வாங்கிக்கொள்ளலாம்.

ஸ்டால்கர் TWS இயர்பட்ஸ் அம்சங்கள் (Stalker TWS Earbuds Specifications): இந்த இயர்பட்ஸ் மார்க்கெட்டில் வரும் எந்தவொரு இயர்பட்ஸ்களையும் போலல்லாமல், மிகவும் தனித்துவமான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிங்கிள் இயர் ஸ்விட்ச்சிங் (Single Ear Switching) என்னும் பிரத்யேக அம்சத்தையும் கொண்டுள்ளது.

இந்த அம்சம் மூலம் ஏதாவது ஒரு இயர்பட்டை ஆன் அல்லது ஆஃப் செய்துகொள்ள முடியும். வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் கால் கன்ட்ரோல் செய்துகொள்ள முடியும். ப்ளூடூத் வி5.1 (v5.1) சப்போர்ட் உள்ளது. வால்யூம் கன்ட்ரோல் (Volume Control), டிராக் ஸ்கிப்பிங் (Track Skipping), சாங் கன்ட்ரோல் (Song Control) வசதி இருக்கிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 15 மணி நேரம் பயன்படுத்திக் கொள்ள முடியும். 10 நிமிட சார்ஜில் 3 மணி நேரம் பயன்படுத்த முடியும். அதோடு இன்டெலிஜென்ட் பவர் மோட் மூலம் பேட்டரி பவரை நீட்டிக்கலாம். இதுவொரு ரிபிளேஸ் கேப் கொண்ட சார்ஜிங் கேஸ் கொண்டுள்ள இயர்பட்ஸ் என்பதால், எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் பிங்க் (Pink) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த இயர்பட்ஸ்க்கு 12 மாதங்கள் வாரண்ட்டி கொடுக்கப்படுகிறது. இதன் விலை ரூ.6,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஆஃபர் விலையில் பாதிக்குப்பாதி குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜஸ்ட் கோர்செகா, அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Just Corseca Stalker TWS Earbuds Specifications Price in India With Unique Little Pirate Kid Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X