Realme ஸ்மார்ட் SLED 4K டிவி அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

ரியல்மி நிறுவனம் தனது வரிசையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை வரும் அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முறை ரியல்மி நிறுவனம் ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவி என்ற புதிய மாடலை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்கிறது. உலகத்தின் முதல் SLED 4K டிவி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் டிவி பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.

ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவி

ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவி

புதிய ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவி முதல் முறையாக பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. என்ன விலையில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவியை வாங்கலாம் என்ற விலையையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவியின் விலை பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவி

உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவி

டிப்ஸ்டர் இஷான் அகர்வாலின் ட்வீட்டின் படி, 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி எஸ்.எல்.இ.டி 4 கே மாடல் SLED தொழில்நுட்பத்துடன் 4K தெளிவுத்திறனுடன் அறிமுகமாகிறது. இது உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியாக இருக்கும் என்றும், சிறந்த கண் பராமரிப்புடன் உயர் வண்ண துல்லியத்தையும் இந்த ஸ்மார்ட் டிவி வழங்குகிறது. SLED 4K ஸ்மார்ட் டிவி ரியல்மி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜான் ரூய்மன்ஸ் குழுவினர் இதை உருவாக்கியுள்ளனர்.

SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!

SLED இன் NTSC மதிப்பு

SLED இன் NTSC மதிப்பு

ரியல்மி நிறுவனத்தைப் பொறுத்தவரை, ரியல்மி ஸ்மார்ட் டிவியில் என்.டி.எஸ்.சி வண்ண வரம்பு மற்றும் டி.யூ.வி ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் 108 சதவீதம் இருக்கிறது. SLED இன் NTSC மதிப்பு நிலையான எல்.ஈ.டி மற்றும் சில கியூ.எல்.இ.டி.களை விட சிறந்தது என்று நிறுவனம் கூறியுள்ளது. இது டிவிக்கு அதிக வண்ணங்களை வழங்க அனுமதிக்கிறது என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

SLED 4K ஸ்மார்ட் டிவி RGB பின்னொளி

SLED 4K ஸ்மார்ட் டிவி RGB பின்னொளி

ரியல்மி SLED 4K ஸ்மார்ட் டிவி RGB பின்னொளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது,இங்கு RGB ஒளி (சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவை இணைந்து) வெள்ளை ஒளியை உருவாக்க பயன்படுகிறது. QLED உள்ளிட்ட பெரும்பாலான எல்.ஈ.டி தொலைக்காட்சிகள் நீல நிற பின்னொளியைப் பயன்படுத்துகின்றன, பின்னர் அவை வெள்ளை நிறமாக மாற்றி திரையில் பிரதிபலிக்கும்.

SLED 4K டிவியின் விலை

SLED 4K டிவியின் விலை

ஆனால், ரியல்மி உருவாகியுள்ள புதிய SLED தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்திற்கே RGB ஐப் பயன்படுத்தி, நீல ஒளியின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்து தூய்மையான அதிக வெள்ளை வண்ண ஒளியை வழங்குகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட் SLED 4K டிவியின் 55' இன்ச் மாடல் வெறும் ரூ.69,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் இதற்கு முன்பு 32' இன்ச் மற்றும் 43' இன்ச் HD டிவிகளை ரூ .12,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்தது.

Best Mobiles in India

English summary
Realme Smart SLED 4K TV to launch in India on October 7 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X