Home
Mobile

ஏப்ரல் 15 உறுதி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. இரண்டு ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி பி1 5ஜி சீரிஸ் (Realme P1 5G Series) ஸ்மார்ட்போனைகளை வரும் ஏப்ரல் 15-ம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அதேபோல் இந்த இரண்டு போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த அசத்தலான ரியல்மி பி1 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏப்ரல் 15 உறுதி.. இரண்டு ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P1 Pro 5G specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (curved AMOLED display) வசதியுடன் இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch), ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR)2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm's Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஏப்ரல் 15 உறுதி.. இரண்டு ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

3டி விசி கூலிங் சிஸ்டம் (3D VC cooling system) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் இந்த போன் சூடாகாமல் இருக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி பி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC)ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன். குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 விலையில் விற்பனைக்கு வரும்.

ஏப்ரல் 15 உறுதி.. இரண்டு ரியல்மி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

ரியல்மி பி1 5ஜி அம்சங்கள் (Realme P1 5G specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த புதிய ரியல்மி பி1 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. விசி கூலிங் சிஸ்டம்(VC cooling system) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி பி1 5ஜி போன்.

மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 chipset) வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த ரியல்மி பி1 5ஜி போன். மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா, 8ஜிபி ரேம், ஐபி54 ரேட்டிங், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த ரியல்மி பி1 5ஜி போன் ரூ.15,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P1 5G Series India Launch Date Announced: check specifications, price,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X