ஏப்.12 காலி.. ரூ.17,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. DUO பேனல்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
சோனி சென்சார் கேமரா, ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro) போனுக்கு லிமிடெட் பிரீயட் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஏற்கனவே, இந்த போனின் எர்லி பேர்ட் விற்பனையானது, அமேசான் (Amazon) தளத்தில் சக்கைப்போடு போட்டது. நிமிடத்துக்கு 300 யூனிட் விற்பனையாகி மிரளவிட்டது. இந்த விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக ரியல்மி நிறுவனம் நம்ப முடியாத லிமிடெட் ப்ரீயட் பேங்க் டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது.

இந்த விற்பனையானது, ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த நாட்களில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ போனை ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு முழுதாக ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இப்போது, இந்த போனின் அம்சங்கள் என்ன? விலை எப்படி? என்பதை பார்ப்போம்.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 70 Pro Specifications): இந்த மாடலில் 6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கொண்ட டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
டூயோ டச் கிளாஸ் பேக் பேனல் (Duo Touch Glass Back Panel) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் வருகிறது. இந்த நார்சோ மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கிறது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.
67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP54 ரெசிஸ்டன்ட், அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி வருகிறது. கிளாஸ் கிரீன் (Glass Green), கிளாஸ் கோல்டு (Glass Gold) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.
இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் 128 ஜிபி மாடலுக்கு ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 256 ஜிபி மாடலுக்கு ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
அமேசான் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் நாளை விற்பனை தொடங்குகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி விற்பனை முடிகிறது. இதற்கிடையில் இந்த போனை வாங்கும் கஸ்டமர்களுக்கே மேற்கூறிய பேங்க் டிஸ்கவுண்ட் பொருந்தும். ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








