புமா ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்: கூகுள் பே, 2 நாள் பேட்டரி பேக் அப்- விலை தெரியுமா?

|

புமா என்பது ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட தடகள மற்றும் சாதாரணக் காலணிகளை உருவாக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் ஜெர்மனியின் பவேரியாவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனமானது விளையாட்டிற்குத் தேவையான பொருட்களையும் தயாரித்து வருகிறது.

புமா அடிட்டாஸ்

புமா அடிட்டாஸ்

புமா நிறுவனம் 1924 ஆம் ஆண்டு கேப்ருடர் டாஸ்லர் சூஃஆபிரிக், என்று அடால்ஃப் மற்றும் ருடால்ஃப் டாஸ்லர் எனும் சகோதரர்களால் உருவக்கப்பட்டது. சகோதரர்களின் இடையில் பிளவு ஏற்பட 1948 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் புமா மற்றும் அடிட்டாஸ் எனும் இரு நிறுவனங்களாக உருவானது.

இந்தியாவில் முதல் ஸ்மார்ட் வாட்ச்

இந்தியாவில் முதல் ஸ்மார்ட் வாட்ச்

இந்த நிலையில் சமீபத்தில் புமா சர்வதேச சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் புகழ்பெற்ற ஃபாசில் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை புமா வடிவமைத்து இருக்கிறது.

512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி

512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி

புமா ஸ்மார்ட்வாட்ச் மாடல் கூகுளின் வியர் ஒ.எஸ். கொண்டு இயங்குகிறது. இதனுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 வியர் பிராசஸர், 1.19 இன்ச் AMOLED 390x390 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புமா ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்வாட்ச் வொர்க்-அவுட் மோடில் செட்

ஸ்மார்ட்வாட்ச் வொர்க்-அவுட் மோடில் செட்

அலுமினியம் டயல் மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் புமா ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2 மற்றும் பில்ட் இன் ஜி.பி.எஸ். வசதி, பின்புறம் இதய துடிப்பு சென்சார் கொண்டிருக்கிறது. புதிய புமா ஸ்மார்ட்வாட்ச் கூகுள் ஃபிட் மூலம் பல்வேறு உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்ய துவங்கும் போது, ஸ்மார்ட்வாட்ச் வொர்க்-அவுட் மோடில் செட் செய்துவிட்டால் பயனர் இதய துடிப்பையும் தொடர்ச்சியாக டிராக் செய்யும்.

நூதன தண்டனை: டிராபிக் சிக்னலில் ஒருவர் ஹார்ன் அடித்தாலும் மொத்த பேரும் காத்திருங்கள்நூதன தண்டனை: டிராபிக் சிக்னலில் ஒருவர் ஹார்ன் அடித்தாலும் மொத்த பேரும் காத்திருங்கள்

இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்அப்

இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்அப்

வியர் ஒ.எஸ். கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது. இத்துடன் ஸ்விம் ப்ரூஃப் வசதி மற்றும் என்.எஃப்.சி. வசதி இருப்பதால் கூகுள் பே மூலம் பேமண்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

புமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 19,995

புமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 19,995

இந்தியாவில் புமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 19,995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியா முழுக்க புமா விற்பனை மையங்களில் கிடைக்கிறது. ஆன்லைனில் புமா வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலமாகவும் புமா வாட்ச் வாங்க முடியும். புதிய புமா ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Puma smartwatch introduced in india: heres the price and specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X