புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்வாட்ச் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் பில்ட்-இன் மேப் நேவிகேஷன் சிஸ்டம், எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், 230mAh பேட்டரி, டயல் பேட் போன்ற பீச்சர்களுடன் போட் ஸ்டார்ம் கால் 3 (boAt Storm Call 3) மாடல் வெளியாகி இருக்கிறது.
ரூ.1000 பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்கள் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த போட் ஸ்டார்ம் கால் 3 மாடலானது, பக்காவான ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், ஆப் சப்போர்ட், பிரத்யேக ஓஎஸ், ஹெல்த் மானிட்டரிங் சென்சார் உள்ளிட்ட பல பீச்சர்களை இந்த போட் மாடல் கொண்டிருக்கிறது.

போட் ஸ்டார்ம் கால் 3 அம்சங்கள் (boAt Storm Call 3 Specifications): இந்த மாடலில் 1.83 இன்ச் (240 x 296 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். பிரீமியம் ஸ்குவார் டயல் டிசைன் (Premium Square Dial Design) கொண்டிருக்கிறது.
சிலிகான் (Silicone), மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metallic Straps) ஆப்ஷனில் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக் இந்த மாடலில் எதிர்பார்க்கலாம். கிரெஸ்ட்பிளஸ் ஓஎஸ் (Crest+ OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, கிரெஸ்ட் ஆப் (Crest App) பயன்படுத்தலாம். இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கிறது.
ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொண்டிருப்பதால், இன்-பில்ட் மைக் (In-built Mic), குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் கான்டாக்ட்ஸ் (Contacts) வருகிறது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். டிஐஒய் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (DIY Customizable Watch Faces) சப்போர்ட் கொண்டுள்ளது.

ஸ்போர்ட் பிரியர்களுக்கு ஏற்ப ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற 700+ ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Modes) வருகின்றன. இந்த போட் ஸ்டார்ம் கால் 3 மாடலில் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேப்மைஇந்தியா (MapmyIndia) பவர்ட் மேப் நேவிகேஷன் சப்போர்ட் (Map Navigation Support) கொண்டிருக்கிறது.
போட் கிரெஸ்ட் ஆப் (boAt Crest App) மூலம் இந்த மேப் நாவிகேஷனை பயன்படுத்தி கொள்ளலாம். ஹெல்த் மானிட்டர்களை (Health Monitors) பார்க்கையில் ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring) வருகிறது. டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) மற்றும் செடன்டரி ரீமைண்டர் (Sedentary Remainder) உள்ளது.
இந்த போட் ஸ்டார்ம் கால் 3 மாடலில் 230mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி 7 நாட்கள் பேக்கப் கொடுக்கும். அதுவே ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 2 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் (Emergency SOS) சப்போர்ட் உள்ளது. மேலும், கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) வருகிறது.
இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games), வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), கவுண்ட் டவுன் (Countdown), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்டி (DND) போன்ற பீச்சர்கள் கொண்டிருக்கிறது. அதேபோல ஃபைண்ட் மை போன் (Find My Phone) பீச்சரும் இருக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் ரூ.1,099 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.
செர்ரி ப்ளாசம்(Cherry Blossom) , ஆக்டிவ் பிளாக் (Active Black), ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் சில்வர் மெட்டல் (Silver Metal) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். போட் வெப்சைட் (BoAt Website), ஃபிளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிளிங்கிட் (Blinkit) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமேயாகும்.


Click it and Unblock the Notifications