Home
Gadgets

பெற்றோரின் 3ஆம் கண்.. நொடிக்கு நொடி பிள்ளைகள் கண்காணிப்பு.. வீடியோ காலிங்.. ஜிபிஎஸ் டிராக்கிங்.. எந்த வாட்ச்?

நீங்கள் பெற்றோராக இருந்தால், உங்களது பிள்ளைகள் வீட்டைவிட்டு பள்ளிக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ, விளையாடவோ சென்றுவிட்டால் போதும், அவர்கள் திரும்பி வரும் வரையில் அவர்களை பற்றிய சிந்தனையிலேயே இருப்பீர்கள். இந்த பாரத்தை குறைக்கவே வீடியோ கால், ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட வாட்ச்-போன் வந்திருக்கிறது.

இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பெற்றோர்களின் வரவேற்பையும் பெற்றுவிட வாய்ப்புள்ளது. உங்களது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை டிராக் செய்வது முதல் அதை உறுதிப்படுத்த வீடியோ கால் செய்வது வரையில் இதில் பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, பிள்ளைகள் எங்கிருந்தாலும் நிமிடத்துக்கு ஒருமுறை அவர்களை கண்காணிக்க முடியும்.

பெற்றோரின் 3ஆம் கண்.. நொடி நொடி பிள்ளைகள் கண்காணிப்பு.. GPS டிராக்!

இதுபோக பல்வேறு அம்சங்களை இந்த வாட்ச் கொண்டிருக்கிறது. ஐமூ இசட்7 கிட்ஸ் வாட்ச் போன் (imoo Z7 Kids Watch Phone) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் எப்படி பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கப்போகிறது, எங்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன் விலை என்ன உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

ஐமூ இசட்7 அம்சங்கள் (imoo Z7 Specifications): இந்த கிட்ஸ் வாட்ச் 4ஜி சிம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 2 எம்பி செல்பீ கேமரா, 5 எம்பி ரியர் கேமரா சப்போர்ட் கொண்டுள்ளது. 1.3 இன்ச் டிஸ்பிளே வருகிறது. ஆகவே, ஸ்மார்ட்போனை போலவே வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

இதுவொரு 2-வே கனெக்டிவிட்டி மாடலாகும். ஆகவே, பெற்றோர்கள் மட்டுமல்லாமல், பிள்ளைகளும் பெற்றோர்களை அழைக்க முடியும். அதுமட்டுமல்லாமல், எஸ்எம்எஸ், வாய்ஸ் மெசேஜ், போட்டோ மற்றும் ஷார்ட் வீடியோக்களை அனுப்பி கொள்ளளாம். ஆகவே, தொடர் கண்காணிப்பில் பிள்ளைகளை வைத்து கொள்ள முடிகிறது. இந்த வாட்ச்சில் லிமிடெ் கான்டாக்ட் சப்போர்ட் மட்டுமே இருக்கிறது.

பெற்றோரின் 3ஆம் கண்.. நொடி நொடி பிள்ளைகள் கண்காணிப்பு.. GPS டிராக்!

ஆகவே, பெற்றோர்களின் மொபைல் நம்பர்களை மட்டும் அதில் பதிவு செய்து கொள்ளலாம். மற்ற நம்பர்களில் இருந்து அதற்கு கால்கள் சென்றால், தானாகவே ரிஜக்ட் செய்யப்பட்டு விடும். இது பெற்றோர்களுக்கு கூடுதல் பலனாக இருக்கிறது. ரியல்-டைம் ஜிபிஎஸ் டிராக்கிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. உங்களது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நிமிடத்து நிமிடம் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல 14 நாட்கள் ஹிஸ்டரி டிராக்கிங் பீச்சரும் உள்ளது. இதன் மூலம் கடந்த 14 நாட்களில் உங்களது பிள்ளைகள் எங்கே சென்றார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பிள்ளைகளின் ஹெல்த் கண்காணிப்புக்காக பிபிஜி ஹார்ட் ரேட் சென்சார் (PPG Heart Rate Sensor), ஏர் பிரஷர் டூ-இன்-ஒன் சென்சார் (Air pressure two-in-one sensor) வருகிறது.

ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டரிங், பாடி டெம்பரேச்சர் மானிட்டரிங் மற்றும் பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங் செய்து கொள்ளலாம். மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sport Modes) வருகின்றன. அதேபோல பள்ளிகளில் இருக்கும்போது கிளாஸ் மோட் (Class mode), விளையாடும்போது சாட் & ஃபேமிலி சாட் (Chat & Family Chat) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன.

பெற்றோரின் 3ஆம் கண்.. நொடி நொடி பிள்ளைகள் கண்காணிப்பு.. GPS டிராக்!

எமோஷனல் ரெகனைசேஷன் (Emotion Recognition) சப்போர்ட் உள்ளது. இதில் குழந்தைகளின் மூட் கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து சோகத்தில் இருந்தால் கூட இதன் மூலம் கண்காணித்து அதற்கேற்ப முடிவுகளை பெற்றோர்கள் எடுக்கலாம். IPX8 தர ஸ்விம்மிங் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. ஜிபிஎஸ், 4ஜி மட்டுமல்லாமல், குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டி உள்ளது.

அதோடு பிடிஎஸ் (BDS), எல்பிஎஸ் (LBS) சப்போர்ட் உள்ளது. 4 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 740 mAh பேட்டரி வருகிறது. 65 கிராம் எடை வருகிறது. ஸ்ப்ரெட்ட்ரம் டபுள்யூ317 (Spreadtrum W317) சிப்செட் கொண்டுள்ளது. ப்ளூ மற்றும் பிங்க் கலர்களில் கிடைக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட், ஐமூ ஸ்டோர் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்யலாம். ரூ.14,990 விலை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
imoo Z7 Kids Watch Phone With Video Calling, Location Tracking Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X