பிக் ஸ்கிரீன்.. Smartwatch-லேயே இதான் பெரிய டிஸ்பிளே வாட்ச்.. கம்மி விலையில் சலுகையுடன் விற்பனை.. என்ன மாடல்?
ஐடெல் (Itel) நிறுவனம் மிகப்பெரிய டிஸ்பிளேவுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவை வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்சாக இந்த டிவைஸ் இப்போது வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சம் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஐடெல் நிறுவனம் ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மிகப் பெரிய அமோலேட் (AMOLED) டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாங்க கிடைக்கும் 2.01" இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்வாட்ச் சாதனமாக இந்த ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) மாறியுள்ளது.

ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3): ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்தியாவில் ரூ.1,699 என்ற அறிமுகம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையில் ஒரு பகுதியாக, இந்த புதிய ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை முன்பதிவு செய்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
இதன் மூலம் ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) சாதனத்தின் விலை ரூ.1,599 ஆக குறைகிறது. இந்த ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்திற்கான முன்பதிவு மார்ச் 24, 2024 ஆம் தேதி முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய குறிப்பு, இந்த ரூ.100 தள்ளுபடி, ஐடெல் ஐகான் 3 வாட்சை முன்பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அமேசான் இந்தியா மற்றும் ஐடெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் அம்சங்கள் பற்றி பேசுகையில், இது 2.01" இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே என்பது கவனிக்கத்தக்கது.

புளூடூத் வாய்ஸ் காலிங் அழைப்பு: இது 150+ வாட்ச் பேஸ் மற்றும் AOD ஆதரவை கொண்டுள்ளது. இது மெட்டாலிக் ஃபினிஷ் மற்றும் டார்க் குரோம், மிட்நைட் ப்ளூ மற்றும் ஷைனி கோல்ட் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஐகான் 3 சிங்கிள் சிப் புளூடூத் வாய்ஸ் காலிங் அழைப்பு இணைப்புக்கான ஆதரவைப் பெறுகிறது. இதில் ரொடேட்டிங் கிரௌன் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அம்சமும் உள்ளது.
இது புளூடூத் 5.3 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 310mAh பேட்டரி உடன் வருகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும் ஆயுளை கொண்டுள்ளது. இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு போன்ற பல வழக்கமான ஸ்மார்ட்வாட்ச் அம்சங்களை இது ஆதரிக்கிறது. இது 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது.
இதில் AI வாய்ஸ் அசிஸ்டன்ட், மியூசிக் கண்ட்ரோல் போன்ற கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது. ஐடெல் ஐகான் 3 ஆனது IP68 மதிப்பீட்டை ஆதரிக்கிறது. இது 1 வருட தயாரிப்பு மற்றும் சேவை உத்தரவாதத்துடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் அதற்கு மேல் உள்ள போன்களுடன் இணக்கமானது. ஐபோன் பற்றி பேசுகையில், iOS 12.0 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுடன் இணக்கமானது.


Click it and Unblock the Notifications








