அடேங்கப்பா Smartwatch.. மிகப்பெரிய AMOLED டிஸ்பிளே.. கலக்கலான அம்சம் ஆனா ரூ.1000 விலை புள்ளி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் மிகப்பெரிய டிஸ்பிளேவுடன் கம்மி விலையில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் தான் இந்த புதிய ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) ஸ்மார்ட்வாட்ச். இதன் விலை மற்றும் முழுவிபர தகவலை இப்போது பார்க்கலாம்.
ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3): ஐடெல் (itel) பிராண்டு இந்த மாத துவக்கத்தில் தான் அதன் புதிய ஐடெல் ஐகான் 2 (Itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்தது. இப்போது நிறுவனம் சைலெண்டாக, இதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் 15 நாள் இடைவெளியில் அறிமுகம் செய்யவுள்ளதாக லீக் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய AMOLED டிஸ்பிளே: ஆம்,மக்களே ஐடெல் நிறுவனம் மிக விரைவில் ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 2.01 இன்ச் அளவு கொண்ட மிகப்பெரிய AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இது மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளே ஸ்மார்ட்வாட்ச்: இந்த ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.. இது தவிர இந்த புதிய ஐடெல் ஐகான் 3 (Itel Icon 3) ஸ்மார்ட்வாட்ச்சில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்வச்சுக்கு முந்தைய மாடலான ஐடெல் ஐகான் 2 அம்சத்தை ஒட்டி சில மேம்படுத்தல்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐடெல் ஐகான் 2 (Itel Icon 2): ஸ்மார்ட்வாட்ச் அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த சதுர வடிவ 1.83" இன்ச் அளவு கொண்ட வளைந்த கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் ஈஸி நேவிகேஷன் அம்சத்தை ஆதரிக்க, ரோடேடிங் கிரௌன் பட்டன் கூட வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட் வாட்ச் சாதனமானது தனிப்பயனாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்களை வழங்குகிறது.
புளூடூத் வாய்ஸ் காலிங்: ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் லேட்டஸ்ட் புளூடூத் v5.3 அம்சத்துடன் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் புளூடூத் வாய்ஸ் காலிங் அம்சத்தை மிகவும் துல்லியமான ஆடியோவுடன் வழங்குகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் குயிக் கான்டக்ட்ஸ், டயல் பேட் மற்றும் கால் ஹிஸ்டோரி போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது.

பேட்டரி: இந்த ஐடெல் ஐகான் 2 (itel Icon 2) ஸ்மார்ட்வாட்ச் 30 நாட்கள் வரை நீடிக்கும் ஸ்டாண்ட்பை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இதில் SpO2, இதயத் துடிப்பு, தூக்கம் மற்றும் பெண் ஆரோக்கியத்திற்கான தொடர்ச்சியான ஆரோக்கிய கண்காணிப்பு உட்பட 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் அம்சங்கள் கூட இடம்பெற்றுள்ளது.
வாய்ஸ் அசிஸ்டன்ட்: இது AI வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது கேமரா, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்வாட்ச் பாக்ஸ் உடன் ஒரு இலவச வாட்ச் ஸ்ட்ராப் கிடைக்கிறது. ஐடெல் ஐகான் 2 ஸ்மார்ட்வாட்ச் கருப்பு, நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
விலை என்ன? இதன் விலை ரூ.1,099 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஐடெல் ஐகான் 3 ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரூ.1,999 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகம் விரைவில் நடைபெறும் என்பதனால், புது ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்புவோர் காத்திருந்த இந்த மாடலை வாங்கலாம்.அடேங்கப்பா Smartwatch.. மிகப்பெரிய AMOLED டிஸ்பிளே.. கலக்கலான அம்சம் ஆனா ரூ.1000 விலை புள்ளி.. எந்த மாடல்?


Click it and Unblock the Notifications








