Home
Gadgets

மிரளுது ஆர்டர்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் மானிட்டர்கள்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிளாசிக் டிசைன் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர், கிளவுட் வாட்ச் பேஸ்கள், ப்ளூடூத் காலிங் போன்ற லேட்டஸ்ட் பீச்சர்களுடன் நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 (NoiseFit Active 2) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. விவரம் இதோ.

நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 அம்சங்கள் (NoiseFit Active 2 Specifications): இந்த மாடலானது கிளாசிக் டிசைனில் (Classic Design) மெட்டல் பாடி (Metal Body) கொண்டிருக்கிறது. மெல்லிய பெசல் (Thin Bezel) மற்றும் ஃபங்ஷனல் கிரவுன் (Functional Crown) கன்ட்ரோல் கொண்டுள்ளது. ஆகவே, கிளாசிக் டிசைனில் டிரெண்டிங் பீச்சர்கள் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுங்கள்.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் மானிட்டர்கள்!

இந்த ஆக்டிவ் 2 மாடலில் மெட்டல் (Metal), லெதர் (Leather) மற்றும் சிலிகான் (Silicone) ஸ்ட்ராப் வருகிறது. அவுட்டோருக்கு ஏற்படி பிரீமியம் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 1.46 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) ஹைபர் விஷன் அமோலெட் (Hyper Vision AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ட்ரூசிங்க் (TruSync) டெக்னாலஜி கொண்ட ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொண்டிருக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. 18 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கொடுக்கிறது. கிரிஸ்டல் கிளியர் கால்ஸ் சப்போர்ட் உள்ளது. அதேபோல ஃபாஸ்டர் ஒன்-ஸ்டெப் பேரிங் (Faster One-step Paring) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஐஓஎஸ் 11.0 மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. 150+ கிளவுட்-பேஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) வருகின்றன. அதேபோல ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், வாக்கிங், சைக்கிளிங், கிளம்பிங் போன்ற 100+ வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் மானிட்டர்கள்!

ஹெல்த் மானிட்டர் மற்றும் டிராக்கர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), எஸ்பிஓ2 சென்சார் (SpO2 Sensor) வருகிறது. இதன் மூலம், ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், ஃபீமேல் சைக்கிள் டிராக்கிங் (Female Cycle Tracking) சப்போர்ட் வருகிறது. இந்த டேட்டாக்களை நாய்ஸ் ஃபிட் ஆப் (Noise Fit App) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பானது, ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் பிடிக்கும்.

10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் பேட்டரி வருகிறது. அதுவே ஸ்டாண்ட்பை மோடில் 30 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. IP68 தர வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistance) கொண்டிருக்கிறது. ஆகவே, ஸ்விம்மிங் சப்போர்ட் கிடைக்கும். நோட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display) வருகிறது.

அதேபோல வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) போன்ற பீச்சர்கள் வருகின்றன. வின்டேஜ் பிரவுன் (Vintage Brown), காப்பர் பிளாக் (Copper Black), மிட்நைட் பிளாக் (Midnight Black), காப்பர் பிளாக் (Copper Black), சில்வர் பிளாக் (Silver Black) ஆகிய கலர்களில் சிலிகான் ஸ்ட்ராப் மாடல் வருகிறது.

அதேபோல கிளாசிக் பிரவுன் (Classic Brown), கிளாசிக் பிளாக் (Classic Black) கலர்களிள் லெதர் ஸ்ட்ராப் மாடல் கிடைக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலின் விலை ரூ.3,499ஆக மட்டுமே இருக்கிறது. இது அறிமுக சலுகையென்பதால், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட் மற்றும் நாய்ஸ் தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
NoiseFit Active 2 With AMOLED Display, 10 Days Battery Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X