Home
Gadgets

தூள் பறக்குது ஆர்டர்.. 2.1" இன்ச் AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. பட்ஜெட்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் Smartwatch..

நாய்ஸ் (Noise) நிறுவனம் வியரப்பில் பிரிவில் அது தான் இந்தியாவின் முன்னிலை பிராண்டு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டது. நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் (Noise ColorFit Ore) என்ற பிரமாண்டமான ஸ்மார்ட்வாட்ச்சை (Smartwatch) நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை என்ன? இந்த புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் (Noise ColorFit Ore) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் சிறப்பம்சங்கள் என்ன? எப்படி சலுகை விலையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை உடனே தட்டி தூக்குவது என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். நாய்ஸ் பிராண்ட் அதன் ஸ்மார்ட்வாட்ச்களை கண்கவர் வடிவமைப்புடன் உருவாக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. சமீபத்தில் நிறுவனம் பெரிய டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட துவங்கியுள்ளது.

தூள் பறக்குது ஆர்டர்.. 2.1

நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் (Noise ColorFit Ore):

இந்த வரிசையில், 2.1" இன்ச் அளவு கொண்ட அமோலேட் (AMOLED) டிஸ்பிளேவுடன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் தான் இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் (Noise ColorFit Ore) டிவைஸ். இந்த வாட்ச் டிஸ்பிளே அல்ட்ரா-தின் பேசல் உடன் வருகிறது. இது உண்மையில் பார்ப்பதற்கே பிரமாண்டமான தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது கிரௌன் பட்டனுடன் ஈஸியான நேவிகேஷன் அமைப்பை வழங்குகிறது.

மெட்டாலிக் சதுர வடிவ டயல் இந்த வாட்சின் தோற்றத்தை பிரீமியம் லுக்கில் வழங்கியுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாக 368 x 448 பிக்சல் குவாலிட்டியுடன் 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது 100+ கிளவுட் அடிப்படையிலான வாட்ச் ஃபேஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் ஸ்மார்ட்வாட்ச் டிவைஸ் ட்ரூ சிங்க் தொழில்நுட்பத்துடன் (TruSync Technology), ப்ளூடூத் v5.3 (Bluetooth v5.3) அம்சத்தை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மிகவும் துல்லியமான ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) அம்சத்தை கிரிஸ்டல் கிளியர் ஆடியோவுடன் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் டயல் பேட் (dial pad), கால் லாக்ஸ் (call logs), 10 காண்டாக்ட் ஸ்டோரேஜ்ஜை (10 Contacts storage) ஆதரிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த Noise ColorFit Ore வாட்ச் 7 நாட்கள் நீடிக்கும் பேட்டரி (Battery) ஆயுளை கொண்டுள்ளது.

நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் விலை மற்றும் சிறப்பம்சம் (Noise ColorFit Ore Price and Specifications):

இதில் ஸ்லீப் மானிட்டர் (sleep monitor), ஹெல்த் மானிட்டர் (health monitor), ஸ்ட்ரெஸ் மெஷர்மென்ட் (stress measurement), SpO2 கண்காணிப்பு, போன்ற அம்சங்களும் உள்ளன. கூடுதலாக இத்துடன் 100 ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் நாய்ஸ் சுய்ட் (Noise Suite) போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த வாட்ச் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது.

நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் (Noise ColorFit Ore) ஸ்மார்ட்வாட்ச் ஏப்ரல் 6, 2024 (இன்று) மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நாய்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் அசல் விலை ரூ. 6,999 என்றாலும் அறிமுக சலுகையாக, இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை நிறுவனம் இப்போது வெறும் ரூ. 2999 விலையில் விற்பனை செய்கிறது.

இந்த சிறப்பு அறிமுக சலுகை விலை அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் நாய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான gonoise.com வழியாக கிடைக்கும். இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஓர் வாட்ச் சாதனம் எலைட் பிளாக், எலைட் சில்வர், ஸ்பேஸ் ப்ளூ, ஜெட் பிளாக் நிறங்களில் வருகிறது. இது தவிர லெதர் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் மாடலாகவும் வருகிறது.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Ore Smartwatch With 2.1 Inch AMOLED Display Bluetooth v5.3 Calling Sale Today Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X