Home
Gadgets

போனை தூக்கி போடுங்க.. ரூ.4999 போதும்.. 4G சிம்.. OTT ஆப்ஸ்.. 2GB ரேம்.. 800mAh பேட்டரி.. எந்த மாடல்?

கூகுள் பிளே ஸ்டோர், ஆண்ட்ராய்டு ஓஎஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, 4ஜி சிம் கனெக்டிவிட்டி என்று கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்களுடன் ஃபயர் போல்ட் ஆரக்கிள் (Fire Boltt Oracle) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவரம் இதோ.

இப்போது, வரும் ஸ்மார்ட்வாட்ச்களில் ஸ்மார்ட்போன்களில் வரும் பெரும்பாலான பீச்சர்கள் மட்டுமல்லாமல், அதில் கிடைக்காத ஹெல்த் சென்சார்கள் மற்றும் மானிட்டர்கள் வருகின்றன. இதனால், ஸ்மார்ட்வாட்ச்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், கம்மி பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்களை ஃபயர் போல்ட் ஆரக்கிள் கொடுத்துள்ளது.

போனை தூக்கி போடுங்க.. ரூ.4999 போதும்.. 4G சிம்.. OTT ஆப்ஸ்.. 2GB ரேம்!

ஃபயர் போல்ட் ஆரக்கிள் அம்சங்கள் (Fire Boltt Oracle Specifications): இந்த ஃபயர் போல்ட் மாடலில் ஜிஎஸ்எம் (GSM) சப்போர்ட் உள்ளது. ஆகவே, நானோ சிம் கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். 4ஜி கனெக்டிவிட்டி, எல்டிஇ காலிங் (LTE Calling) சப்போர்ட் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டி வருகிறது. 1.96 இன்ச் (320 x 360 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆப்களை பயன்படுத்தலாம். அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் முதல் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சோஷியல் மீடியா ஆப்கள் வரையில் இந்த மாடலில் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஜிமெயில், குரோம் போன்ற ஆப்களின் சப்போர்ட்டும் வருகிறது.

போனை தூக்கி போடுங்க.. ரூ.4999 போதும்.. 4G சிம்.. OTT ஆப்ஸ்.. 2GB ரேம்!

குவாட் கோர் சிபியு (Quad-core CPU) சிப் மற்றும் மாலி டி820 எம்பி1 ஜிபியு (Mali T820 MP1 GPU) கிராபிக்ஸ் வருகிறது. ரோடேட்டிங் கிரவுண் (Rotating Crown), ஃபங்ஷன் பட்டன் (Function Button) கன்ட்ரோல் கொண்டிருக்கிறது. கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) வருகின்றன.

வாய்ஸ் காலிங் சப்போர்ட்டுக்காக இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic & Speaker) வருகின்றன. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. மல்டிபிள் ஸ்போர்ட் மோட்கள் (Multiple Sports Modes) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் உள்ளது.

இந்த ஆரக்கிள் மாடலில் ஃபயர்-போல்ட் ஹெல்த் சூட் (Fire-Boltt Health Suite) சப்போர்ட் உடன் ஹெல்த் மானிட்டங்கள் (Health Monitors) வருகின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rrte Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) இருக்கிறது. ஸ்லீப் டிராக்கிங், ஆக்டிவிட்டி டிராக்கிங் சப்போர்ட் வருகிறது.

IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) வருகிறது. 36 மணி நேர பேக்கப் கொண்ட 800mAh பேட்டரி வருகிறது. வாய்ஸ் காலிங், வீடியோ போன்ற அதிகபட்ச யூசேஜிலும் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு நிகராக 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். ஆகவே, பேட்டரி பேக்கப் கவலை இந்த மாடலில் இல்லை.

இந்த மாடலில் பிளாக் குரோம் (Black-Chrome), கிளவுட் விஸ்பர் (Cloud-Whisper), கிளவுடி கிளாஸ்ப் (Cloudy-Clasp), கிரிஸ்டல் டைடு (Crystal-Tide), எலிப்ஸ் பிளெக்ஸ் (Eclipse-Flex), மெரைன் மிராஜ் (Marine-Mirage), ஆரஞ்ச் அரிசோன் (Orange-Horizon) ஆகிய கலர் வேரியண்ட்கள் வருகின்றன. ரூ.4999 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. ஃபயர் போல்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire Boltt Oracle With 2GB RAM, 800mAh Battery LTE Calling Sale Under Rs 5000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X