நூதன தண்டனை: டிராபிக் சிக்னலில் ஒருவர் ஹார்ன் அடித்தாலும் மொத்த பேரும் காத்திருங்கள்

|

சாலையில் அமைந்திருக்கும் டிராபிக் சிக்னலில் சிகப்பு, மஞ்சள், பச்சை என்பதை தாண்டி கவுண்டவுன் முறை இந்தியாவில் அனைத்து சிக்னலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாகன ஓட்டிகள் எத்தனை நொடிகள் காத்திருக்க வேண்டும் என்பதை தாண்டி 50 நொடிகளுக்கு மேல் இருந்தால் தங்களது வாகனத்தை அனைத்து வைத்து பெட்ரோல் சேகரிப்பார்கள்.

ஹார்ன் அடித்து ஒலி மாசு

ஹார்ன் அடித்து ஒலி மாசு

சிக்னலில் இறுதி நொடிகளை நெருங்கையில் வாகனத்தை ஆன் செய்வதோடு மட்டுமின்றி முந்தைய வாகனங்களை எச்சரிக்கும் விதமாக ஹார்ன் அடிப்பார்கள். இந்த ஹார்ன் அடிப்பது என்பது ஒரு வாகனத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஹார்ன் அடிப்பார்கள்.

காற்று மாசு போல் ஒலி மாசு

காற்று மாசு போல் ஒலி மாசு

அதிகரிக்கும் வாகனத்தால் காற்று மாசு ஏற்படுவதோடு மட்டுமின்றி ஒலி மாசும் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்த ஒலி மாசை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் அறிமுகப்படுத்திய முறையே டெசிபல் மீட்டர்.

டெசிபல் மீட்டர்

டெசிபல் மீட்டர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் சிக்னலில் நிற்கும் வாகனம் அதிகம் ஒலிகளை எழுப்பினால் டெசிபல் மீட்டர் அதிகரிக்கும். டெசிபல் மீட்டர் என்பது ஒலி கணக்கிடும் கருவியாகும்.

டெசிபல் மீட்டர் முறை அறிமுகம்

டெசிபல் மீட்டர் முறை அறிமுகம்

2016 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் அதிக ஒலி மாசு ஏற்பட்டுள்ள மாநிலம் மும்பை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை குறைக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறையினர் டெசிபல் மீட்டர் முறையை அறிமுகம் செய்துள்ளனர்.

மீண்டும் 90 நொடிகளில் இருந்து தொடங்கும்

மீண்டும் 90 நொடிகளில் இருந்து தொடங்கும்

இந்த டெசிபல் மீட்டர் மூலம் சிக்னலில் உள்ள விநாடிகள் படிப்படியாக குறைந்துக் கொண்டே வரும் நேரத்தில் ஹார்ன் சத்தம் அதிகமாக எழுப்பினால் இந்த டெசிபல் மீட்டர் படிப்படியாக அதிகரிக்கும், டெசிபல் மீட்டர் 90 என்ற அளவை தாண்டினால் சிக்னல் மீண்டும் முதலில் இருந்து அதாவது 90 நொடிகளில் இருந்து தொடங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யாராவது ஹார்ன் எழுப்பினால் அருகில் உள்ளவர்கள் ஹார்ன் அடிக்க வேண்டாம் என எச்சரிப்பார்கள்.

Best Mobiles in India

English summary
Traffic Signals Will Have Decibel Meter, Which Punishes Honking With Longer Wait Time

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X