Home
Gadgets

தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..

உங்கள் ஸ்மார்ட்போனில் (Smartphone) நீங்கள் செய்யக்கூடிய பெரும்பாலான விஷயங்களை இப்போது ஒரு ஸ்மார்ட்வாட்சில் (Smartwatch) செய்யலாம் என்றால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே ஸ்மார்ட்வாட்ச் வடிவில் ஒரு குட்டி ஸ்மார்ட்போன் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. தல தோனி இதற்கு விளம்பரம் செய்துள்ளார்.

ஆம், மக்களே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நன்மதிப்பை பெற்ற தல தோனி இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அவர் கூறிய வாறே இந்த புதிய ஃபையர்-போல்ட் ட்ரீம் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Dream Smartwatch) சாதனம் ஒரு அட்டகாசமான வாட்ச் என்பதில் சந்தேகமே இல்லை. பார்ப்பதற்கு பிரீமியம் லுக்கில் இருந்தாலும் இதன் விலை மிகவும் கம்மி என்று அவரே விளம்பரத்தில் கூறியிருக்கிறார்.

தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு..

இது ஸ்மார்ட்வாட்ச் வடிவில் ஒரு குட்டி ஸ்மார்ட்போன்:

இந்திய சந்தையில் மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் தான் இந்த ஃபையர்-போல்ட் ட்ரீம் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Dream Smartwatch) டிவைஸ். இந்த ஸ்மார்ட்வாட்சில் நீங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளலாம், வாட்ஸ்அப் (WhatsApp) இல் மெசேஜ் செய்யலாம், இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube) யூஸ் செய்யலாம், இன்னும் ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது எல்லாவற்றையும் இதில் செய்யலாம்.

கேட்பதற்கே சூப்பராக இருக்கிறதல்லவா. உண்மையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் கிடைக்கும் மொத்த அம்சங்களை பற்றி பேசவேண்டும் என்றால், இந்த ஒற்றை பதிவு போதாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்போனில் பயன்படுத்த கிடைக்கும் அட்டகாசமான ஹை-டெக் அம்சங்களை எல்லாம் இந்த ஸ்மார்ட்வாட்ச் மொத்தமாக பேக் செய்துள்ளது. ஆகையால் மிக முக்கியமான அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த புதிய ஃபையர்-போல்ட் ட்ரீம் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Dream Smartwatch) சாதனம் 2.02" இன்ச் கொண்ட கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. உண்மையை சொல்ல போனால் இந்த ஸ்மார்ட்வாட்சை நாம் ஃவிரிஸ்ட்போன் (Wristphone) என்று தான் அழைக்க வேண்டும். அந்த அளவிற்கு இதில் அம்சங்கள் கொட்டிக்கிடக்கிறது.

தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு..

ஃபையர்-போல்ட் ட்ரீம் ஸ்மார்ட்வாட்ச்சின் முக்கியான அம்சங்கள் (Fire-Boltt Dream Smartwatch Main Specifications):

இந்த ஸ்மார்ட்வாட்ச் 2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. இது கோர்ட்டெக்ஸ் A7MP குவாட் கோர் CPU சிப்செட் உடன் 4G LTE நானோ சிம் ஆதரவை கொண்டுள்ளது. இது 800mAh பேட்டரியுடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்விகி (Swiggy), ஸ்மோடோ (Zomato), ஓலா (Ola), உபர் (Uber) போன்ற ஆப்ஸ்களை அணுக அனுமதிக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மூலமாகவே உணவு ஆர்டர் மற்றும் கேப்புக்கிங் செய்ய அனுமதிக்கிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள 1000 கணக்கான முக்கியமான ஆஃப்ஸ்களை ஸ்மார்ட்வாட்ச்சில் பயன்படுத்த அனுமதிக்கிறது. கூகுள் சர்ச் என்ஜின் (Google Search Engine), கூகுள் சுய்ட் (Google Suite) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சேவைகளை ஸ்மார்ட்வாட்சில் இருந்து நேரடியாக அணுக அனுமதிக்கிறது. இது 12 வகையான ஸ்ட்ராப் விறுப்பாலுடன் இப்போது விற்பனையில் கிடைக்கிறது.

இந்த Wristphone வாட்ச் விலை என்ன?

இதன் அசல் விலை ரூ. 24,999 என்ற Fire-Boltt வலைப்பக்க தகவல் குறிப்பிடுகிறது. இருப்பினும், தற்போதைய குறுகிய கால சிறப்பு சலுகைக்கு பிறகு, இந்த புதிய ஃபையர்-போல்ட் ட்ரீம் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Dream Smartwatch) சாதனம் வெறும் ரூ. 6,999 விலையில் வாங்க கிடைக்கிறது. கையில் ஸ்மார்ட்வாட்ச்சிற்கு பதிலாக ஒரு குட்டி ஸ்மார்ட்போன் இருங்க வேண்டும் என்று நினைத்தால் இதை உடனே ஆர்டர் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fire-Boltt Dream Wristphone Smartwatch with 4G LTE Nano Sim 2 Inch Display Google Play Store Apps Access
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X