Subscribe to Gizbot

அமேசான் கின்டெல் ஓயாசிஸ்: உண்மையிலேயே ஒரு புதிய கின்டெல் அனுபவத்தை அளிக்கிறது

Posted By: Jijo Gilbert

நவீன கின்டெல் ஓயாசிஸ் 2017-யை இயக்கி, அதனோடு நேரத்தை செலவிட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் அந்த சாதனத்தை குறித்த எங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.

அமேசான் கின்டெல் ஓயாசிஸ்: உண்மையிலேயே ஒரு புதிய கின்டெல் அனுபவத்தை அளி

பல்வேறு பொருட்களை வெளியிடுவதில் அமேசான் விறுவிறுப்பாக உள்ளது. குறிப்பாக, அலெக்ஸா-வின் ஈகோ ஸ்பீக்கர்ஸ், அமேசான் ஃபயர் டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களைக் கூறலாம். அதே நேரத்தில் அமேசான் கின்டெலை பொறுத்த வரை, நீண்டகாலமாக புதிதாக எதையும் காண கிடைக்கவில்லை.

கடந்தாண்டு அதிர்ச்சியூட்டும் வகையில் மெலிந்த மற்றும் ஒளிரும் தன்மைக் கொண்ட கின்டெல் ஓயாசிஸை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இது ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை காட்டிலும், அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதால் ஒரு ஆடம்பர சாதனமாகத் தான் தெரிந்தது.

இ-ரீடர் பகுதியில் புதுமையை அறிமுகம் செய்வது என்பது ஒரு கடினமான பணி என்றாலும், கடந்தாண்டு ஓயாசிஸின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது அமேசான். இந்த சாதனத்தில் பல குறிப்பிடத்தக்க சேர்க்கைகள் அல்லது புதுப்பிப்புகளை இந்நிறுவனம் கொண்டு வந்திருந்தாலும், அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைக் குறித்து மட்டுமே கவலைக் கொள்கிறோம்.

மேலும், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த கின்டெல் ஓயாசிஸில், இதுவரை எந்தொரு கின்டெலிலும் நாம் கண்டிராத அம்சங்களை கொண்டதாக உள்ளது. அதேநேரத்தில் முன்னோடியை விட விலையும் சற்று குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த சாதனத்தை இயக்கி, அதற்காக நேரத்தை செலவிட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததால், அதை குறித்த எங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு

வடிவமைப்பு

இதுவரை வெளியான எல்லா கின்டெல் வகைகளில் இருந்து, அமேசான் கின்டெல் ஓயாசிஸ் 2 வேறுபட்டும் தனித்தன்மைக் கொண்டதாகவும் தோற்றம் அளிக்கிறது. இந்த சாதனம் ஒரு மெலிந்த 3.4 மில்லிமீட்டர் முனையும் 7-இன்ச் 300 பிபிஐ திரையும் கொண்டதாகவும் உள்ளது.

ஆனால் ஒரு கையில் எளிதாக பற்றிக் கொள்ளும் வகையில், தடினமான பக்கம் அல்லது உப்பியதாக உள்ளது. இந்த பகுதியில் பேட்டரி மற்றும் மற்ற உள்ளான காரியங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தவிர, இந்தச் சாதனத்திற்கு அலுமினிய பின்புறம் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவில் சேதமடையாத மற்றும் பிரிமியம் தோற்றம் கிடைக்கிறது. குறிப்பாக திரை ஒரு பகுதியிலும், மீதமுள்ள பகுதியில் கையால் பக்கங்களைத் திருப்ப உதவும் பொத்தான்களின் ஜோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்பை பார்க்கும் போது, குறிப்பாக பாரம்பரிய கின்டெல் வகையை பயன்படுத்தும் பயனர்களை கவருவதற்காக உருவாக்கப்பட்டது என்று தான் கூறுவோம். திரையை சுற்றிலும் கவனிக்கத்தக்க பிடிப்பு பகுதிகளைக் கொண்டு, இரண்டு கைகளால் பிடிப்பதற்கு விகாரமாக உள்ளது. ஆனால் இந்தச் சாதனம் ஒரு கையில் பிடித்து கொண்டு படிக்கும் வகையில் சமநிலை கொண்டதாக, சுமூகமாக உள்ளது.

நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப தானாக ஒளியை மாற்றியமைத்து கொள்ளும் வகையிலான ஒரு முன்பக்க லைட் காணப்படுகிறது. ஒரு இருளான அறையில் அல்லது சூரிய ஒளியில் இருக்கும் போது என்று மாறுபட்ட சூழ்நிலைகளில், திரையின் மீது விழும் சுற்றுப்புற ஒளியின் அடிப்படையில் இயங்குகிறது. இதுதவிர, தனிப்பட்ட முறையில் நம் விருப்பம் போல அம்சங்களை மாற்றியமைக்கவும் செய்யலாம்.

ஒரே வரியில் கூறினால், இதன் வடிவமைப்பு தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆனால் முந்தைய வகைகளுடன் ஒப்பிடும் போது, சற்று முரட்டுத்தனமாகவும் மந்தமாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை கொண்ட சில பிரச்சனைகள் மட்டுமே பெற்றுள்ளது.

மேலும் கின்டெல் ஓயாசிஸ் 2 இல் ஹெட்போன் ஜெக் அல்லது ஸ்பீக்கர் போன்றவை கிடையாது. இதை பயன்படுத்த ப்ளூடூத் ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர் கண்டிப்பாக வேண்டும். ஒரு ப்ளூடூத் சாதனத்துடன் இணைப்பது மட்டுமே ஒரு மார்க்கமாக உள்ளது.

இணைக்கப்பட்ட அம்சங்கள்

இணைக்கப்பட்ட அம்சங்கள்

ஓயாசிஸில் அமைந்துள்ள புதிய அம்சங்களின் பட்டியலில் நீரை மேற்கொள்ளும் தகவமைப்பை (வாட்டர் ரெசிஸ்டென்ஸ்) அமேசான் சேர்த்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. கின்டெல் ஓயாசிஸ் (2017)-க்கு ஐபிஎக்ஸ்8 மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளதால், 2 மணிநேரம் வரை நீருக்குள் இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிய முடிகிறது.

இந்த நீரை மேற்கொள்ளும் அம்சத்தைத் தவிர, அமேசானின் ஆடியோபுக் ஸ்டோர் என்ற ஆடியோ அம்சத்தையும், இந்த புதிய ஓயாசிஸ் (2017) இல் காண முடிகிறது. இந்த கின்டெல் மூலம் முன்னர் வாங்கப்பட்ட ஆடியோபுக்களை வழக்கமான புத்தகங்களுடன் காட்டுகிறது. உங்களிடம் கின்டெல் புக் மற்றும் கேட்கக்கூடிய ஆடியோபுக் என்ற இரண்டு வகையான புத்தகங்களை நீங்கள் வாங்கியிருந்தாலும், இரண்டும் ஒரு இடத்திலேயே காட்டப்படுகிறது.

பொத்தானை தட்டுவதன் மூலம் இரண்டையும் ஒருங்கிணைக்க முடியும். இந்த அம்சம் குறித்து விளம்பரப்படுத்தப்படுகிறது என்றாலும், இதுபோல இரண்டு வகையான பதிப்புகளில் அடங்கிய புத்தகங்களை வாங்குவது செலவை ஏற்படுத்தும் காரியமாகும்.

கேட்கக்கூடிய (ஆடிபிள்) பகுதிக்கு வரும் புதிய பயனர்கள், இணைய பிரவுஸர் மூலம் இதற்குள் நுழைந்து அணுகலாம். இதன்மூலம் நேரடியாக வாங்குதல் மற்றும் மாத சந்தாதாரர்களாக மாறுவது என இரண்டு சேவைகள் வழங்கப்படுகிறது.

முந்தைய கின்டெல் பதிப்புகளில் இல்லாதது என்று பார்த்தால், மேற்கூறிய நீரை மேற்கொள்ளும் தகவமைப்பு மற்றும் கேட்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஆகிய இவ்விரண்டும் முக்கிய அம்சங்களில் உட்படுபவை எனலாம். இவற்றின் சேர்ப்பின் மூலம் புதிய ஓயாசிஸை அதிக சுவாரஸ்சியம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.

முந்தைய பதிப்புகளில் எதிலும் இல்லாத பல்வேறு விருப்பத்தேர்வுகளை இந்த புதிய சாதனத்தில் காணக் கிடைப்பது ஒரு நல்லது காரியம் எனலாம். குறிப்பாக, எழுத்துக்களின் அளவுகள், கூடுதல் தடிமனாக்க கூடிய நிலைகள், இடதுபுறம் சார்ந்த (வலதுகையில்) எழுத்துகள் போன்ற

படிப்பதற்கு என்றே மாற்றியமைக்க கூடிய தனிச்சிறப்பு அமைப்புகள் மற்றும் புதிய அணுகுமுறை அம்சங்களைக் கொண்டுள்ளது. அணுகுமுறையைக் குறித்து கூறும் போது, குறிப்புகளை எளிதில் ஏற்றம் செய்தல் மற்றும் ஒரு புத்தகத்தில் இருந்து முக்கியப்படுத்திக் காட்டி, அதை மின்னஞ்சலுக்கு ஏற்ற வகையில் பதிப்பிடும் பிடிஎஃப் அல்லது ஒரு சாதாரண கோப்பு அமைப்பிற்கு மாற்றுவது ஆகியவற்றை செய்யக்கூடிய ஒரு அம்சத்தைப் பெற்றுள்ளது.

படிக்கும் அனுபவம்

படிக்கும் அனுபவம்

இதில் படிக்கும் அனுபவம் சிறப்பாகவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளது. இந்தச் சாதனத்தில் பக்கத்தை திருப்பும் அம்சத்தின் மூலம் படங்கள், விளக்கப்படங்கள், வரைபடங்கள் மற்றும் குறிப்புகளை கூட எளிதாக கண்டுபிடிக்க முடிவதோடு, ஒரு புத்தகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியத்துவப்படுத்த முடிகிறது.

பொதுவாக, பக்கத்தின் சுருக்கத்தை பார்க்கும் வகையில் பக்கத்தை பெரிதுப்படுத்துவது அல்லது மற்ற பக்கங்களை திருப்புவதற்கு முன் ஒரு கின்டெலை நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்கள்.

பக்கத்தின் திருப்பும் அம்சமானது, நீங்கள் படித்து கொண்டிருக்கும் பக்கத்தை தானாக சேமித்து வைத்து கொள்ளும். உங்கள் திரையின் மற்ற பக்கத்தில் அதை குறித்து வைத்து கொள்ளும் என்பதால், நீங்கள் படித்து கொண்டிருந்த இடத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

இதனால் நாம் மீண்டும் எப்போது படிக்க ஆரம்பித்தாலும், ஒரு பயனுள்ள அம்சமாக இருக்கிறது. அதிகளவில் படிக்கும் வகையில், பிக்ஸல் நிலையை பொறுத்து எழுத்துகளின் அளவை மாற்றியமைக்க கூடியதாக உள்ளது.

மேலும் இந்த புதிய கின்டெல் ஒரு புத்தக அட்டையை விட எடைக்குறைவாகவும் உள்ளதால், ஒற்றை கையில் பிடிக்க எளிதாக உள்ளது. இந்த கின்டெல் படிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சரணாலயமாகத் தோன்றும் வகையில், படிக்கும் புத்தகத்தில் ஒரு பயனர் தன்னையே மறக்க செய்ய வல்லது.

மற்றொரு முக்கியமாக காரியம் என்னவென்றால், டேப்லெட்கள் மற்றும் ஃபோன்களைப் போல, சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் உரைச்செய்திகள் போன்றவற்றால் கின்டெலில் பயனர்களுக்கு சிந்தை சிதறுவதில்லை.

6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் எக்ஸ் ப்ளஸ்; மெய்யாலுமா.?

மென்பொருள் அனுபவம்

மென்பொருள் அனுபவம்

மென்பொருளைப் பொறுத்த வரை, சொல்லும் அளவிற்கு எதுவும் புதிதாக இல்லை எனலாம். முந்தைய பதிப்புடன் ஒப்பிட்டால், சிறிய அளவிலான மாற்றத்தை மட்டுமே பெற்றுள்ளது என்று கூறலாம். கின்டெல் ஓயாசிஸ் 2-லும் அதே அடிப்படை பயனர் இன்டர்பேஸ் தான் காட்டப்படுகிறது.

ஃபயர் டிவி போன்ற மற்ற அமேசான் தயாரிப்புகளைப் போல இந்த சாதனத்தில் அதிக விளம்பரங்களை காண முடிவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம். மற்ற படிப்புகளைக் குறித்த பரிந்துரைகள் மட்டுமே பயனர்களுக்கு அளிக்கப்படுகிறது, இது பிரச்சனை இல்லாத ஒன்று. இது தவிர, கின்டெல் ஸ்டோரில் இருந்து புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பேட்டரி

பேட்டரி

அமேசான் தரப்பில், கின்டெல் ஓயாசிஸ் 2-ல் 6 வாரங்கள் வரை பேட்டரி தாக்குபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும், இந்தச் சாதனத்தில் பேட்டரி தாக்குபிடிப்பு என்பது ஒரு சிக்கலான காரியம் என்பது தான் உண்மை. சுமார் 6 நாட்களுக்கு தொடர்ந்து சில மணிநேரங்கள் இந்த சாதனத்தைப் பயன்படுத்திய போது, பேட்டரியின் அளவு 18 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது.

தொடர்ந்து படித்து கொண்டிருக்கும் போது பேட்டரியின் அளவு கரைந்து போகும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் ஆடியோபுக்ஸ் படிக்கும் போது, பேட்டரியின் அளவு வெகு வேகமாக குறைந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, ப்ளூடூத் ஹெட்போன்களின் பயன்பாடு அமைகிறது. ஆனால் ஸ்மார்ட்போன் போன்ற மற்ற சாதனங்களை வைத்து ஒப்பிட்டால், இந்தச் சாதனத்தில் பேட்டரியின் அளவு நீண்டநேரம் தாக்குபிடிக்கிறது.

இந்த சாதனத்திற்கு மிகப்பெரிய அளவிலான பின்னடைவை அளிக்கக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால், இது கேபிள் மூலம் மட்டுமே இயக்க முடியும். £200-க்கும் அதிகமான விலையில் விற்கப்படும் ஒரு சாதனத்திற்கு இது உண்மையிலேயே பெரிய பின்னடைவு தான்.

மேலும் தற்போது பொதுவான பயன்பாட்டில் உள்ள யூஎஸ்பி டைப்-சியை பயன்படுத்துவதற்கு பதிலாக, மைக்ரோ-யூஎஸ்பி-யை அமேசான் பயன்படுத்தியுள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அமேசானின் எந்த தயாரிப்பும் இதுவரை யூஎஸ்பி-சி-க்கு மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பிற்கு எந்தொரு புதுப்பிப்பும் அளிக்கப்படாமல் விடப்பட்டது ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

முடிவு

முடிவு

முடிவாக, ஓயாசிஸில் பல்வேறு சிறு மேம்பாடுகளை அமேசான் ஏற்படுத்தி இருக்கிறது என்று நாம் கூறலாம். தனது முன்னோடியை விட, அதிகளவிலான விரும்பத்தக்க பல அம்சங்களை கொண்ட தயாரிப்பாக கின்டெல் ஓயாசிஸ் 2017 அமைந்துள்ளது.

இவ்வளவு நாட்களாக நீங்கள் காத்திருந்த தகவமைப்பு திரை, எழுத்துக்களின் அளவை மாற்றியமைக்கும் தகவமைப்பு, கேட்கக்கூடிய வகையிலான ஆடியோபுக்ஸ் மூலம் கட்டமைக்கப்பட்டது, ஐபிஎக்ஸ் சான்றிதழ் பெற்றது, பெரிய தரை போன்றவற்றை கொண்ட ஒரு இ-புக்ஸ் ரீடராக இந்த சாதனம் அமைந்துள்ளது.

இந்த சாதனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிக விலை தான், இதற்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்திய சந்தையில் துவக்க விலையாக ரூ.21,999 அமைந்துள்ள நிலையில், கின்டெல் ஓயாசிஸிற்கு நம் நாட்டில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் புத்திசாலித்தனமான இந்திய நுகர்வோர் எதிர்பார்க்கும் விலைக்கு ஏற்ற செயல்பாடு விகிதம் சமநிலையற்றதாக இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

புதிய கின்டெல் ஓயாசிஸின் 8ஜிபி வகைக்கு ரூ.21,999 விலையும் 32ஜிபி வகைக்கு (வைஃபை மற்றும் இலவச 3ஜி) ரூ.28,999 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய வகைகளை காட்டிலும் புதிய ஓயாசிஸின் பேப்பர்வைட் தனித்தன்மையோடு காணப்படுவது, இதற்கு இருக்கும் ஒரே சாதகமான காரியமாக நாங்கள் கருதுகிறோம். இதன்மூலம் முந்தைய வகைகளை விட அதிக விற்பனையை பெற்று தர வாய்ப்புள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
While innovating in the e-reader space maybe a big task, Amazon did come out with a new version of Oasis in 2017. The only thing we were concerned was the price but the company has made some significant additions or upgrades to the device as well.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot