6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் எக்ஸ் ப்ளஸ்; மெய்யாலுமா.?

|

"இரண்டு எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் இரண்டு ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட நான்கு புதிய ஐபோன் மாடல்களை, ஆப்பிள் நிறுவனம் இந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது" என்று டிஜிட்டல்டைம்ஸ் ரிசெர்ச் மூத்த ஆய்வாளர் லூக் லின் கூறியிருந்தார்.

6 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் எக்ஸ் ப்ளஸ்; மெய்யாலுமா.?

கூறப்படும் இரண்டு எல்சிடி ஐபோன் மாதிரிகளானது முறையே 5.7 அங்குல மற்றும் 5.8 அங்குல இன்ச் அளவிலான டிஸ்பிளேக்கள் கொண்டிருக்க மறுகையில் உள்ள ஓஎல்இடி மாடல்கள் ஆனது 6.0 இன்ச் மற்றும் 6.1 அங்குல அளவிலான டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கைவிடக்கூடும்

கைவிடக்கூடும்

இந்நிலைப்பாட்டில் டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனமானது அதன் ஓஎல்இடி ஐபோன்களை கைவிடக்கூடும் என்று கூறுகிறது. அதாவது "அடுத்த தலைமுறை ஐபோன் வரிசையானது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய போர்ட்ஃபோலியோவை தொடரும்.

அடுத்த தலைமுறை ஐபோன் மாதிரி

அடுத்த தலைமுறை ஐபோன் மாதிரி

இரண்டு எல்சிடி பேனல் சாதனங்கள் - ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்; மற்றும் ஓஎல்இடி- அடிப்படையிலான ஐபோன் எக்ஸ்" என்று வெளியான அறிக்கை கூறுகிறது. ஆக அடுத்த தலைமுறை ஐபோன் மாதிரிகளில் 6.5 அங்குல ஐபோன் எக்ஸ் ப்ளஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை

உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை

அது மட்டுமின்றி வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3டி உணர்திறன் அம்சங்களுக்கான ஆதரவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒரு உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்பதால் சிட்டிகை உப்பில் குறிப்பிட்ட அளவை போல் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

கணிப்புகளுக்கு இணங்க

கணிப்புகளுக்கு இணங்க

சமீபத்திய அறிக்கையில் வெளிப்பட்டுள்ள மூன்று புதிய ஐபோன் மாதிரிகளும், கேஜிஐ செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி குவோவின் கணிப்புகளுக்கு இணங்க உள்ளது. இருப்பினும் குவோவின் கூற்றில், இரண்டு ஐபோன் மாதிரிகள் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டும் மற்றும் ஒரு எல்சிடி ஐபோன் மாதிரியையும் காண முடிந்தது.

 ஐபோன் எக்ஸ் பாணி

ஐபோன் எக்ஸ் பாணி

அதில் இரண்டு ஓஎல்இடி ஐபோன் மாதிரிகளும் - ஒரு 5.8 அங்குல (புதிய ஐபோன் எக்ஸ்) மற்றும் ஒரு 6.5 அங்குல (ஐபோன் எக்ஸ் பிளஸ்) - மற்றும் ஐபோன் எக்ஸ் பாணியின் அம்சங்கள் கொண்ட ஒரு 6.1 அங்குல எல்சிடி ஐபோன் மாதிரியும் அடங்கும்.

ஐபோன் எஸ்2

ஐபோன் எஸ்2

கூறப்படும் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாதிரியுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்2 சாதனமும் அறிமுகலாம். ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது சந்தையின் மிட்-ரேன்ஜ் பிரிவை குறிவைத்து களமிறங்கும் ஒரு சாதனம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஐபோன் எக்ஸ் நன்றாக செயல்படவில்லை

ஐபோன் எக்ஸ் நன்றாக செயல்படவில்லை

இதற்கிடையில், ஐபோன் எக்ஸ் மாடலானது 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் நிறுத்தி வைக்கப்படும் என குவோ தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீனா போன்ற சந்தைகளில் கூட, ஐபோன் எக்ஸ் நன்றாக செயல்படவில்லை என்பதால் இது சாத்தியமென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் சிறந்த ஷிப்பிங் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்

உலகின் சிறந்த ஷிப்பிங் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்

மறுகையில் 2017 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் தான், உலகின் சிறந்த ஷிப்பிங் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல் என்று ஆராய்ச்சி நிறுவனமான கேணலிசிஸ் தெரிவித்துள்ளது.

எது நடக்கும், எது நடக்காது

எது நடக்கும், எது நடக்காது

அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனமானது, சீனாவில் மட்டுமே 7 மில்லியன் ஐபோன் எக்ஸ் அலகுகளை ஷிப்பிங் செய்துள்ளது. ஆக எது நடக்கும், எது நடக்காது என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். மேலும் பல ஐபோன் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Apple to launch 6.5-inch iPhone X Plus with OLED display, two LCD models in 2018: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X