யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது! காரணம் என்ன தெரியுமா?

|

கூக்கிபீடியா என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ஏழு யூடியூபர்கள் நள்ளிரவில் சாலையில் செல்லும் பொதுமக்களை பேய் போல வேடமிட்டு கேளிக்கை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் யூடியூப் சேனல் வீடியோவிற்காக இப்படி பொதுமக்களைப் பீதியடைய செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

'ஜலால்ஸ்'-க்கு பொடியாக களமிறங்கிய யூடியூபர்கள்

'ஜலால்ஸ்'-க்கு பொடியாக களமிறங்கிய யூடியூபர்கள்

பெங்களூரில் உள்ள மத்திக்கறே என்ற பகுதியில் தான் இந்த யூடியூபர்கள் நள்ளிரவில் இந்த செயலை செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரான்க்ஸ்டர்ஸ் 'ஜலால்ஸ்' என்ற யூடியூப் சேனல் போன்று, மக்களை பிராங்க் செய்து பிரபலம் அடைய முயன்றுள்ளனர். ஆனால் இவர்களின் முயற்சி போலீசாரிடம் சிக்கவைத்துள்ளது.

காப்பி அடித்து மாட்டிய கூக்கிபீடியா சேனல்

காப்பி அடித்து மாட்டிய கூக்கிபீடியா சேனல்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜலால்ஸ் யூடியூப் சேனலிற்கு இதுவரை சுமார் 3.4 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர், அதேபோல் பேஸ்புக்கிலும் இவர்களுக்கு சுமார் 24 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஐடியாவை காப்பி அடித்து கூக்கிபீடியா சேனலில் 11 வீடியோகள் இதுவரை பதிவிடப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?

பொதுமக்களை பீதி அடையச் செய்த யூடியூபர்கள்

பொதுமக்களை பீதி அடையச் செய்த யூடியூபர்கள்

மத்திக்கறேயில் உள்ள சாந்திநகர் பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் எஸ் மாலிக், நவீத், எஸ் முகமது, சாகிப், எஸ் நபீல், யூசுப் ஏ மற்றும் எம் அக்விப் ஆகியோர் வெள்ளை நிறை கவுன் அணிந்து, தலையில் சவுரி வைத்து பேய் போல் வேடமிட்டு பொதுமக்களை பீதி அடையச் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு, இவர்கள் சம்பவ இடத்திலேயே நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லுபடியாகாத இவர்களின் காரணம்

செல்லுபடியாகாத இவர்களின் காரணம்

யூடியூப் சேனலிற்காகவும், தங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற செயலை செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இவர்கள் செய்யும் செயலினால் விபத்தோ அல்லது யாருக்கேனும் மரைடைப்பு வந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று காவல்துறை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் ! தினசரி 3ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி.! திட்டம்?வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் ! தினசரி 3ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி.! திட்டம்?

காவல்துறையினர் எச்சரிக்கை

காவல்துறையினர் எச்சரிக்கை

பொதுமக்களை நள்ளிரவில் அச்சுறுத்தியதற்காக இவர்களின் மேல் கிரிமினல் மிரட்டல், பொது தொல்லை மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதமாக கூடியிருத்தல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இனிமேல் இதுபோன்ற செயல்களைச் செய்யக் கூடாதென்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
YouTubers Ghost-prank in Bengaluru Ends Behind The Bar : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X