மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
ஐசிஐசிஐ (ICICI) வங்கியில் அக்கவுண்ட் வைத்து இருக்கிறீர்கள் என்றால்.. வருகிற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை பற்றி இப்போதே அறிந்துகொள்ளவும். இல்லை என்றால் எதற்காக இவ்வளவு கட்டணம் பிடிக்கப்பட்டுள்ளது என்று குழப்பம் அடைய நேரிடும்.
ஐசிஐசிஐ வங்கியானது ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் (IMPS Transactions), ஹோம் பிரான்ச் மற்றும் நான்-ஹோம் பிரான்ச் பணப்பரிமாற்றம் (Home Branch and Non Home Branch Cash Transaction), லாக்கர் வாடகை (Locker Rent உட்பட தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல வகையான சேவைகளுக்கான சேவை கட்டணங்களை (Service Charges) மாற்றியுள்ளது. மே 1 முதல் என்னென்ன சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற விவரங்கள் இதோ:

ஐஎம்பிஎஸ் அவுட்வார்ட் (IMPS Outward): ரூ.1,000 வரையிலான ஒரு பணப் பரிவர்த்தனைக்கு ரூ.2.50 சேவை கட்டணமும், ரூ.1,001 முதல் ரூ.25,000 வரையிலான ஒரு பணப் பரிவர்த்தனைக்கு ரூ.5 சேவை கட்டணமும் மற்றும் ரூ.25,000 முதல் ரூ.45 லட்சம் வரையிலான ஒரு பணப் பரிவர்த்தனைக்கு ரூ.15 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.
ஹோம் பிரான்ச் பணப் பரிமாற்றம் (Home Branch Cash Transaction): மாதத்திற்கு முதல் 3 இலவச பணப் பரிமாற்றங்கள் கிடைக்கும். அதன் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் மாதத்திற்கு ரூ.1 லட்சம் என்கிற இலவச வரம்பைத் தாண்டி ரூ.1,000 வரையிலான பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.5, மற்றும் ரூ.1000 க்கு மேலான பணப் பரிமாற்றங்கள் ரூ.150 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.
நான் ஹோம் பிரான்ச் பணப் பரிமாற்றம் (Non Home Branch Cash Transaction): ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையிலான பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.5 மற்றும் ரூ.25,000 க்கு மேலான பணப் பரிமாற்றங்கள் ரூ.150 சேவை கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு பணப் பரிவர்த்தனைகளை (Third Party Cash Transaction) பொறுத்தவரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்; இதற்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000 ஆகும்.
இது தவித்து டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணமானது வழக்கமான இடங்களுக்கு ரூ.200, கிராமின் இருப்பிடங்களுக்கு ரூ.99 என்றும், டிடி (DD,) பிஓ கேன்சலேஷன் (PO Cancellation), டூப்ளிகேட் (Duplicate), ரீவேலிடேஷன் (Revalidation) போன்ற சேவைகளுக்கு ஒரு நிகழ்வுக்கு ரூ.100 என்றும். புகைப்படம் மற்றும் கையொப்பம் சான்றளிப்புக்கு ஒரு விண்ணப்பம் / கடிதத்திற்கு ரூ.100 என்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
லாக்கர் வாடகையை (Locke Rent) பொறுத்தவரை, லாக்கரின் அளவு (Locker Size) மற்றும் நீங்கள் எந்த வங்கியில் உள்ள லாக்கர் சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களோ.. அந்த வங்கியின் இருப்பிடத்தின் (Bank Location) அடிப்படையில் வருடாந்திர லாக்கர் வாடகைகள் மாறுபடும்படிஐசிஐசிஐ வங்கி தனது லாக்கர் வாடகைக்கான சேவை கட்டணங்களையும் திருத்தி உள்ளது.
சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கியானது, தீங்கிழைக்கும் லிங்க்குகள் மற்றும் ஃபைல்களிடம் (Malicious links and files) மிகவும் விழிப்புடன் இருக்குமாறு தனது வாடிக்கையாளர்களை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய ஆப்களை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி கேட்டு கொண்டுள்ளது.
மேலும் ஐசிஐசிஐ வங்கி ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு எஸ்எம்எஸ் / வாட்ஸ்அப் மெசேஜையும் (SMS / WhatsApp Message) அனுப்புவது இல்லை. மேலும் குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுக்குமாறும் அல்லது ஏதேனும் ஆப்பை டவுன்லோட் செய்யும்மாறு கேட்கவே கேட்காது என்றும் ஐசிஐசிஐ வங்கி விளக்கமளித்து இருந்தது.


Click it and Unblock the Notifications