இதெல்லாம் பாவம் Google.. ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளில் பெரும்பாலும் யூடியூப், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் மிக முக்கியமாக ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப்-ஐ தான் அதிக நேரம் மக்கள் பயன்படுத்துவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பார்க்கும் போது வரும் 30 வினாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை யூடியூப்பில் வீடியோ பார்க்கும்போது உள்ளடக்கத்தை பொறுத்து ஸ்கிப் பட்டன் மூலம் அடுத்தடுத்து இரண்டு 15 வினாடி விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு,கூகுள் தவிர்க்க முடியாத 30 வினாடி NON STOP விளம்பரங்களைக் காண்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த புதிய விளம்பர கொள்கை விரைவில் அமலுக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் புதிய விளம்பர கொள்கை அமெரிக்காவில் YouTube Select உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இது மற்ற நாடுகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்த புதிய விளம்பர கொள்கையை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் இந்தியாவில் 30 வினாடிகள் நீளமான விளம்பரத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், 15 வினாடி விளம்பரங்களை நாம் பார்த்து வருகிறோம். இது பல நேரங்களில் கண்டிப்பாக எரிச்சலூட்டும். இந்த எரிச்சலூட்டும் விளம்பரங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
அதாவது யூடியூப்பில் நீண்ட விளம்பரங்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, அந்நிறுவனத்தின் யூடியூப் பிரீமியம் சந்தாவை வாங்குவதுதான். குறைந்த கட்டணத்தை செலுத்தி இந்த யூடியூப் பிரீமியம் சந்தாவை வாங்க முடியும். யூடியூப் பிரீமியம் சந்தாவின் விலை அமெரிக்காவில் $11.9 மற்றும் இந்தியாவில் மாதம் ரூ.129. இதன் மூலம் விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை மக்கள் பார்க்கலாம். குறிப்பாக இது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயனர்களாக இருந்து வருகின்றனர். யூடியூப்பில் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. நீங்கள் படம் வரைய ஆசைப்பட்டால், யூடியூப்பில் டிராயிங் ஆர்ட்டிஸ்ட் பதிவிட்ட வீடியோக்களை பார்த்து கற்று கொள்ளலாம். சுவையாக மீன் குழம்பு வைக்க வேண்டும் என்றால், கைத்தேர்ந்த செஃப்களின் வீடியோக்களை பார்த்துச் சமைக்கலாம்.
சாதாரண வீடியோக்கள் தொடங்கி, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா சார்ந்த வீடியோக்கள் வரை யூடியூப்பில் காணக் கிடைக்கிறது. முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்பட்ட யூடியூப் தளம், இப்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு (YouTuber) மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. நீங்களும் யூடியூப் சேனல் (YouTube Channel) தொடங்கி பணம் சம்பாதிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








