Home
News

அடச்சே! இது தெரியாம போச்சே.. YouTube பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 ஷார்ட்கட் கீஸ்!

யூடியூப் (YouTube) பயனர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 ஷார்ட்கட் கீஸ் விபரங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உண்மையில், இந்த சிறிய டிப்ஸ் உங்கள் யூடியூப் அனுபவத்தை பல மடங்கு சிறப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

YouTube ஒவ்வொரு பயனருக்கும் சில கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ்களை வழங்குகிறது. இது விஷயங்களை எளிதாகவும் சிரமமின்றியும் மாற்ற செய்கிறது. இருப்பினும், உங்களில் பெரும்பாலானோர் இதைப் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள் என்பதனால் இந்த பதிவு உங்களுக்கானது. யூடியூப் அதன் தளத்தில் ஆதரிக்கும் கீபோர்ட் ஷார்ட்கட் கீஸ்களை அணுக, பயனர்கள் Shift உடன் மற்ற கீஸ்களை கிளிக் செய்ய வேண்டும்.

அடச்சே! இது தெரியாம போச்சே.. 10 முக்கியமான ஷார்ட்கட் YouTube கீஸ்!

1. வீடியோவைப் பார்க்கும்போது எப்போதாவது உங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததால், அதை முடிந்தவரை விரைவாக பாஸ் செய்ய வேண்டுமென்றால், அடுத்த முறை, உங்கள் கீபோர்டில் "k" என்ற எழுத்தை அழுத்தவும். இது உங்கள் வீடியோவை பாஸ் (Pause) செய்யும். மீண்டும் பிளே (Play) செய்து தொடங்க, அதே கீ-யை அழுத்தவும்.

2. வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டும் ஆனால், அதன் ஆடியோவை கேட்க விரும்பவில்லையா? உங்கள் வீடியோவை மியூட் செய்ய, "m" என்ற கீ-யை ஒரு முறை அழுத்தவும். இது உங்கள் வீடியோவை மியூட் செய்யும். அன்மியூட் செய்ய நீங்கள் மீண்டும் அதே கீ-யை அழுத்த வேண்டும்.

3. நீங்கள் YouTube-ல் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் இருந்து அடுத்த வீடியோவிற்கு செல்ல விரும்பினால், Shift + N என்ற ஷார்ட்கட் கீ-யை அழுத்தலாம். இந்த ஷார்ட்கட் உங்கள் பிளேலிஸ்ட்டில் உள்ள அடுத்த வீடியோவிற்கு உங்களை அழைத்துச் செல்லும், அல்லது உங்களை அடுத்த பரிந்துரைக்கப்பட்ட வீடியோவிற்கு அழைத்துச் செல்லும்.

4. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவை முழு ஸ்கிரீனில் இருந்து, சிறிய டேப் ஆக குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் கீபோர்டில் உள்ள "i" என்ற பட்டனை அழுத்தவும். இது வீடியோவை மட்டும் சிறிய டேப் இல் பிளே செய்து, உங்களை பின்னணியில் இயங்க அனுமதிக்கிறது.

அடச்சே! இது தெரியாம போச்சே.. 10 முக்கியமான ஷார்ட்கட் YouTube கீஸ்!

5. ஒரு வீடியோவைப் பார்க்கும் போது, ​​ஒரு சில நொடிகள் அந்த வீடியோவை நீங்கள் பாஸ்ட்பார்வர்டு அல்லது ரீவைண்ட் செய்ய வேண்டிய அவசியத்தை உணரலாம். இதைச் செய்ய, நீங்கள் "j" என்ற கீயை கிளிக் செய்யலாம். இது 10 வினாடிகளுக்கு முறையை ரீவைண்ட் செய்ய அனுமதிக்கிறது.

6. இதேபோல், ஒருவர் தனது வீடியோவில் சில வினாடிகள் முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கலாம், இதை செய்ய, யூடியூப் பயனர்கள் அவர்களுடைய கீபோர்டில் "l" என்ற கீ-யை அழுத்துவதன் மூலம் பாஸ்ட்பார்வர்ட் செய்யலாம். இதுவும் 10 வினாடிகளுக்கு முன்னோக்கி செல்ல அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

7. குறுகிய காலத்தில் பல வீடியோக்களைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அத்தகைய நிலையில், உங்கள் வீடியோக்களின் வீதத்தை அதிகரிக்க முனைகிறீர்கள் என்றால்,">" அழுத்துவதன் மூலம் இதை எளிதாக செய்யலாம்.

8. மாறாக, "

9. வீடியோவில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை நீங்கள் தவிர்க்க விரும்பினால், ஒன்று முதல் ஒன்பது வரையிலான எந்த எண்ணையும் அழுத்தலாம். இது வீடியோவை 10% அதிகரிக்கும். உதாரணமாக, ஒருவர் வீடியோவில் 80% செல்ல விரும்பினால், அவர்கள் 8 ஐ அழுத்த வேண்டும்.

10. வீடியோவின் தொடக்கப் புள்ளிக்கு ஒருவர் செல்ல விரும்பினால், அவர்கள் 0 ஐ அழுத்தலாம்.

இந்த ஷார்ட்கட் கீஸ்களை நினைவில் வைத்து, உங்கள் யூடியூப் அனுபவத்தை எளிமையாக பயன்படுத்துங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
10 Important YouTube Shortcut Keys That Everyone Should Know Before Watching Videos Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X