Netflix, YouTube வெச்சுருந்தா இதை மட்டும் பண்ணாதீங்க.. DogeRAT மால்வேர் எச்சரிக்கை!
இந்தியாவில் டோஜ்ராட் (DogeRAT) என்னும் மால்வேர் (Malware) அதிகவேகமாக பரவி வருகிறது. இந்த மால்வேர் காரணமாக நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (Instagram), இன்ஸ்டாகிராம் (YouTube) ஆப்ஸ் (Apps) பயன்படுத்தும் யூசர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் யூசர்கள் ஒன்றை மட்டும் செய்துவிடவே கூடாது. இதுகுறித்த விவரம் இதோ.
இன்றைய காலகட்டத்தில் யூடியூப் பயன்படுத்தாத மக்களே இருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதேபோல நெட்பிளிக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆப்களும் பெரும்பாலான மக்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது. இந்த ஆப்களை தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றாலும், இன்ஸ்டால் (Install) செய்து வைப்பது, லட்சக்கணக்கான மக்களின் இயல்பாக உள்ளது.

சிலர் அவ்வப்போது அன்இன்ஸ்டால் (Uninstall) செய்துவிட்டு, பின்பு தேவைப்படும்போது இன்ஸ்டால் செய்துகொள்வார்கள். இவர்களுக்கு ஷாக் கொடுக்கும்படி, ஒரு மால்வேர் இந்தியாவில் தீயாக பரவிவருகிறது. இந்த மால்வேர் உங்களது போனில் பரவியிருந்தால், நெட்பிளிக்ஸ் மூலம் உங்களது வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அதோடு பணமும் பறிபோகலாம். இதுகுறித்து ஏஐ (AI) பவர்ட் மால்வேர் கண்காணிப்பு நிறுவனமான கிளவுட்செக் (CloudSEK) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்களது போனில் யூடியூப், நெட்பிளிக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பின்வருமாறு. டோஜ்ராட் மால்வேர் என்பது வங்கி விவரங்களை எளிதாக திருடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர் ஒரிஜினல் யூடியூப், நெட்பிளிக்ஸ், இன்ஸ்டாகிராம், ஒபேரா மினி (Opera Mini) ஆகிய ஆப்ஸ்களில் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
ஆனால், இந்த ஆப்களை போலவே சமூக வலைதளங்களில் போலியாக கிடைக்கும் ஆப்கள் மூலம் இந்த மால்வேர் பரவிவருகிறது. அதாவது, உங்களிடம் யூடியூப், நெட்பிளிக்ஸ், இன்ஸ்டாகிராம், ஒபேரா மினி ஆகிய ஆப்கள் இல்லையென்றால், உங்களுக்கு மெசேஜ் மூலமோ, இமெயில் மூலமோ டவுன்லோட் செய்யும் லிங்க் போலியாக அனுப்பப்படும். இது பார்ப்பதற்கு அந்த நிறுவனங்களே அனுப்பியது போல் இருக்கும்.
இதை நம்பி நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களது விவரங்கள் திருடப்படும். அதேபோல நீங்கள் மேற்கூறிய ஆப்களை அன்இன்ஸ்டால் செய்திருந்தால், அதை பிளே ஸ்டோரில் மட்டுமே மீண்டும் டவுன்லோட் செய்ய வேண்டும். வேறு எந்த லிங்கையும் பயன்படுத்தி டவுன்லோட் செய்துவிடக்கூடாது. இந்த போலி ஆப்கள் பார்ப்பதற்கு ஒரிஜினல் ஆப்களைப் போலவே இருக்கும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த மால்வேர் டெலிகிராம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல டெலிகிராமில் இருந்து யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற வீடியோ ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தினால், பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும் என்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விளம்பரங்களை நம்பி யாரும் அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திவிடக் கூடாது.
மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்று கிளவுட்செக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் யூடியூப், நெட்பிளிக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களை அப்டேட் செய்வது மிகுந்த நல்லது, ஏனென்றால் மால்வேர்களில் இருந்து தப்பிக்க அப்டேட் வெர்ஷன்களில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








