உன் வாய்.. உன் உருட்டு.. ஆனா நாங்க முட்டாள் இல்ல.. 8 யூடியூப் சேனல்கள் தடை!
"10 பைசா செலவு இல்லாம கூகுள்ல ஃப்ரீயா ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்னு ஓப்பன் பண்ணிட்டு.. அதை வச்சி யூட்யூப் சேனல் ஒன்னு ஆரம்பிச்சு.. 1000 சப்ஸ்க்ரைபர்ஸும் 4000 வாட்ச் ஹவர்ஸும் வந்துட்டா.. நீங்க சொல்லுறத எல்லாம் நாங்க கண்ணா மூடிக்கிட்டு நம்பணுமா? எங்களை பார்த்தா எப்படி இருக்கு?" என்று கூறும்படியாக..
இந்திய அரசங்கமானது 8 யூடியூப் சேனல்களை (YouTube Channels) தடை செய்து, அந்த சேனல்களின் பட்டியலையும் வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது. தடை செய்யும் அளவிற்கு குறிப்பிட்ட யூட்யூப் சேனல்கள் என்ன தவறு செய்தன? தடை செய்யப்பட்ட 8 யூட்யூப் சேனல்களின் பெயர்கள் என்ன? இந்த சேனல்களை மொத்தம் எத்தனை பேர் சப்ஸ்க்ரைபர்கலாக உள்ளன? இதோ விவரங்கள்:

லோக்சபா தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்தல் போன்ற பொய்யான செய்திகளை (Fake News) பரப்பியதற்காக 8 யூட்யூப் சேனல்களை முடக்கியுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23 மில்லியன் (23 Million Subscribers) ஆகும்.
தடைசெய்யப்பட்ட யூடியூப் சேனல்களின் பட்டியலில் யஹான் சச் தேகோ (Yahan Sach Dekho), கேபிடல் டிவி (Capital TV), கேபிஎஸ் நியூஸ் (KPS News), சர்காரி வ்லாக் (Sarkari Vlog), எர்ன் டெக் இந்தியா (Earn Tech India), எஸ்பிஎன்9 நியூஸ் (SPN9 New), எஜுகேஷனல் தோஸ்த் ( Educational Dost) மற்றும் வேர்ல்ட் பெஸ்ட் நியூஸ் ( World Best News) ஆகியவைகள் அடங்கும்.
மேற்கான யூட்யூப் சேனல்களில் உள்ள வீடியோக்கள் தவறான செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் பத்திரிகை தகவல் பணியகத்தால் (Press Information Bureau) அந்தந்த செய்திகளின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு, பின்னர் அந்த சேனல்கள் தடை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கண்ட சேனல்கள் பரப்பிய மிகவும் மோசமான பொய்யான செய்திகளில் சில இதோ: ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், 13 கோடி வியூஸ்களையும் கொண்ட 'கேபிஎஸ் நியூஸ்' சேனல் ஆனது சமையல் கேஸ் சிலிண்டர்கள் ரூ.20, பெட்ரோல் ரூ.15க்கு கிடைக்கும் என அரசு தொடர்பான திட்டங்கள், ஆர்டர்கள், முடிவுகள் குறித்து போலியான செய்திகளை பரப்பி வந்துள்ளது.
3.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் 160 கோடி வியூஸ்களை கொண்ட 'கேபிடல் டிவி' சேனல் ஆனது மேற்கு வங்கத்தில் (West Bengal) குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துவது தொடர்பான பிரதமர், அரசாங்கம் மற்றும் உத்தரவுகளைப் பற்றிய போலிச் செய்திகளையும் பரப்பி வந்துள்ளது.
4.8 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் 189 கோடி வியூஸ்களை கொண்ட எஸ்பிஐஎன்9 நியூஸ் யூடியூப் சேனல் ஆனது ஜனாதிபதி (President), பிரதமர் (Prime Minister) மற்றும் பல மத்திய அமைச்சர்கள் (Central ministers) தொடர்பான பொய்யான செய்திகளை தொடர்ந்து பரப்பி வந்தது.
3.43 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் 23 கோடி வியூஸ்களை கொண்ட எஜுகேஷனல் தோஸ்த் என்ற சேனல், அரசின் திட்டங்களை பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. வேர்ல்ட் பெஸ்ட் நியூஸ் யூடியூப் சேனல் ஆனது இந்திய ராணுவத்தை தவறாக சித்தரித்துள்ளது. இது 1.7 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும் 18 கோடிக்கும் அதிகமான வியூஸ்களையும் கொண்டுள்ளது.
4.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் 9.4 கோடி வியூஸ்களை கொண்ட சர்க்காரி வ்லாக் சேனல் ஆனது இந்திய அரசாங்கத்தின் திட்டங்களை (Indian Govt Schemes) பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவது கண்டறியப்பட்டுள்ளது; அதனை தொடர்ந்து இந்த சேனல் தடை செய்யப்பட்டுள்ளது.
3 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை கொண்ட யூடியூப் சேனல் ஆன 'யஹான் சச் தேகோ' ஆனது தேர்தல் ஆணையம் (Election Commission) மற்றும் இந்திய தலைமை நீதிபதியை ( Chief Justice of India) பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடைசியாக 31,000 சந்தாதாரர்கள் மற்றும் 3.6 மில்லியன் வியூஸ்களை கொண்ட எர்ன் இந்தியா டெக் யூட்யூப் சேனல் ஆனது ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பிறவற்றுடன் தொடர்புடைய பொய்யான செய்திகளை பரப்புவது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அரசாங்கம் இந்த சேனலை தடை செய்வதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








