Home
News

புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?

உங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.200, ரூ.250, ரூ.325, ரூ.425 தொகை கட்டணமாக பிடிக்கப்பட்டால் குழப்படமடைய வேண்டாம். அதற்கான காரணத்தை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய கட்டண விதிகள் பின்பற்றப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

2024-25 நிதியாண்டில் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு பல்வேறு விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. பேங்க் மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு, வருமான வரி, பிஃஎப் பணம், சிறு சேமிப்பு திட்டங்கள் என்று அனைத்துக்கும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண விதிகளும் இருக்கிறது.

புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்!

டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களை (Debit Card Maintenance Charges) வங்கிகள், அதன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து பிடித்தம் செய்வது வழக்கம். இந்த தொகை ஏப்ரல் 1ஆம் தேதி முன்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) தாறுமாறாக கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. இந்த கட்டணம் மற்ற வங்கிகளுக்கும் கூட குறையாக பொருந்தலாம். இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் இனிமேல் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது என்பதை இப்போது, பார்த்துவிடுவோம்.

எஸ்பிஐ வங்கியின் (SBI Bank) கிளாசிக் கார்டு (Classic Card), சில்வர் கார்டு (Siver Card), குளோபல் கார்டு (Global Card) மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு (Contactless Debti Card) ஆகியவற்றுக்கு முன்னதாக ரூ.125 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்பட்டது. இப்போது, ரூ.200 மற்றும் ஜிஎஸ்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.

புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்!

அதேபோல யுவா கார்டு (Yuva Card), கோல்டு கார்டு (Gold), காம்போ டெபிட் கார்டு (Combo Debit Card) மற்றும் மை கார்டு (My Card) ஆகியவற்றுக்கு முந்தைய நிதியாண்டில் ரூ.175 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ.250 மற்றும் ஜிஎஸ்டியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்பிஐ பிளாட்டினம் டெபிட் கார்டு (SBI Platinum Debit Card) வாடிக்கையாளர்களுக்கு முந்தைய நிதியாண்டில் வசூலிக்கப்பட்டு வந்த ரூ.250 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம், இப்போது ரூ.325 மற்றும் ஜிஎஸ்டியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல எஸ்பிஐ பிரைடு (SBI Pride), எஸ்பிஐ பிரீமியம் (SBI Premium) டெபிட் கார்டுகளுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்டுகளுக்கு முந்தைய நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட ரூ.350 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இப்போது ரூ.425 மற்றும் ஜிஎஸ்டியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணங்கள் அனைத்தும் வருடாந்திர டெபிட் கார்டுகள் பராமரிப்புக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், புதிய டெபிட் கார்டு வழங்குதல், மாற்றுதல், பின் மறுஉருவாக்குதல் ஆகியவற்றுக்கு தனி கட்டணம் உள்ளது.

கிளாசிக், சில்வர், குளோபல் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளை புதிதாக வாங்க வேண்டுமானால் எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், கோல்டு டெபிட் கார்டுக்கு ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அதேபோல பிளாட்டினம் மற்றும் மை கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

மேலும், டெபிட் கார்டு மாற்றுதல் (Debit Card Replacement) செய்தால் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல பின் மறுஉருவாக்குதல் (PIN Regeneration) செய்தால் ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஆகவே, மேற்கூறிய கட்டணங்கள் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துவிட்டன என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Do you know how much annual fee is charged for SBI debit cards from April 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X