எத்தன லட்சம் போச்சோ.. 44 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்.. பிரபல கமெடி யூடியூப் சேனல் ஹேக்.. 473 வீடியோ டெலிட்!
யூடியூப்பில் (YouTube) 44 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட பிரபல காமெடி யூடியூபரின் வளர்ச்சி பிடிக்காத ஒரு ஹேக்கிங் (Hacking) கும்பல், அவரது யூடியூப் சேனலை முடிக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த யூடியூப் சேனலின் அடையாளத்தையே மாற்றி இருக்கிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட யூடியூப், இப்போது கோடிக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத சம்பளம் தரும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம் மாதம் மாதம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் யூடியூபர்களும் நம் நாட்டில் உள்ளனர்.

இப்படிப்பட்ட யூடியூப் சேனலை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதற்கு முதலீடு தேவையில்லை திறமை மட்டுமே போதும். இப்படி திறமையை மட்டுமே வைத்து மெல்ல மெல்ல லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை தங்களது பக்கம் இழுத்து, வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல யூடியூபர்கள், வளர்ந்துவரும் யூடியூபர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர்.
இவர்களின் வளர்ச்சிப் பிடிக்காத சில கும்பல்கள், அவர்களுக்கு எதிராக யூடியூப் சேனல் தொடங்கி கடுமையாக விமர்சனம் செய்வது, போலியான குற்றச்சாட்டுகளை வைப்பது என்று பல சதி வேலைகளை பார்த்து வருகிறது. இப்போது ஒருபடி மேலே போய், யூடியூப் சேனலையே ஹேக் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. அப்படி 44 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட பிரபல காமெடி யூடியூபரின் சேனல் முடக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவரது அனைத்து வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டுவிட்டன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தன்மய் பட் (Tanmay Bhat) என்பவர் அவரது பெயரிலேயே யூடியூப் சேனல் தொடங்கி தனது கடின உழைப்பாலும், தனித்துவமான கமெடி டிராக் மூலமும் 44 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 470-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதில் பல வீடியோக்கள் கோடிக்கணக்கில் பார்வைகளை (Views) பெற்றுள்ளது.
இதன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் அவருக்கு வருமானம் வந்துகொண்டிருந்தது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவரது யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. இந்த சேனலின் பெயர் மாற்றப்பட்டு, டெஸ்லா கார்ப் (Tesla Corp) என வைக்கப்பட்டது. அதோடு லோகோவும் டெஸ்லா கார் வைத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தன்மய் பட் யூடியூப் நிறுவனத்துக்கு புகார் அளிக்க முற்பட்ட வேளையில், அடுத்த சில மணி நேரங்களில் அவரது யூடியூப் சேனலில் பதிவிடப்பட்ட 473 வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டன.
அதன்பின் அவர் யூடியூப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், புகார் அளித்துள்ளார். அதோடு சமூக வலைதளங்கள் மூலம், தனது யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டிருப்பதை அவரது சப்ஸ்கிரைபர்களுக்கு தெரிவித்தார். அதன்பின், அவரது வீடியோக்களையும், யூடியூப் பக்கத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது அவரது யூடியூப் பக்கம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வீடியோக்கள் எதுவும் இடம்பெறவில்லை. நாளடைவில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்படும் என்று அவரது சப்ஸ்கிரைபர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








