YouTube வீடியோக்களை இந்த வேகத்தில் தான் பார்ப்பேன்.. சுந்தர் பிச்சை அதிரடி ட்வீட்.!
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூடியூப் போன்ற சேவைகளை மக்கள் அதிகம் என்றே கூறலாம். அதேபோல் கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக யூடியூப் (YouTube) தளத்தை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் யூடியூப்பில் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. நீங்கள் படம் வரைய ஆசைப்பட்டால், யூடியூப்பில் டிராயிங் ஆர்ட்டிஸ்ட் பதிவிட்ட வீடியோக்களை பார்த்து கற்றுக் கொள்ளலாம். சுவையாக மீன் குழம்பு வைக்க வேண்டும் என்றால், கைத்தேர்ந்த செஃப்களின் வீடியோக்களை பார்த்துச் சமைக்கலாம்.

சாதாரண வீடியோக்கள் தொடங்கி தொழில்நுட்பம், விளையாட்டு. சினிமா சார்ந்த வீடியோக்கள் வரை யூடியூப்பில் காணக் கிடைக்கிறது. அதேபோல் இந்த தளம் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில் இப்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு (YouTuber) மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது என்பது தான் உண்மை.
தற்போது இந்த சிறப்பான யூடியூப் சேவையை குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சுந்தர் பிச்சை ஒரு ட்வீட் செய்துள்ளார். அதாவது யூடியூப் பிரிவின் முன்னாள் தலைவர் சுசன் ராஜினாமா செய்த பின்பு, இந்த பதவியில் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டார்.தற்போது இவரின் தலைமையில் இயங்கும் யூடியூப் ஆனது டிக்டாக் உடன் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல டெக் யூடியூபரான மார்க்வெஸ் பிரவுன்லீ தனது எக்ஸ் கணக்கில் எல்லோரும் யூடியூப் வீடியோவை எந்த வேகத்தில் பார்ப்பீர்கள் என வாக்கெடுப்பை நடத்தினார். குறிப்பாக இந்த வாக்கெடுப்பில் 1X, 1.25X, 1.5X, 2X ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
இந்த வாக்கெடுப்புக்கு சுமார் 76.9 சதவீதம் பேர் 1X என்று தேர்வு செய்துள்ளனர். அதேபோல் 7.2 சதவீதம் பேர் 2X என்பதைத் தேர்வு செய்துள்ளனர். மார்க்வெஸ் பிரவுன்லீ பிரவுன்லீ-யின் கேள்விக்குச் சுமார் 245,906 பேர் பதில் அளித்த நிலையில், கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையும் பதில் அளித்துள்ளார்.
அதன்படி சுந்தர் பிச்சை தனது கமெண்டில், இந்த வாக்கெடுப்பு முடிவுகளை காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். மேலும் நான் எதாவது ஒரு வீடியோவை ரசிக்க வேண்டுமென்றாலோ அல்லது யோசிக்க வேண்டும் என்றாலோ 1X முறையில் தான் பார்ப்பேன். மற்றபடி அதிகப்படியான வேகத்தில் தான் பார்ப்பேன் எனச் சுந்தர் பிச்சை டிவீட் செய்துள்ளார்.

அதேபோல லைவ் டிவி அல்லது கேபிள் டிவி போன்றவற்றில் ஃபாஸ்ட் பார்வேட் என்ற அம்சம் இருக்காது. குறிப்பாக யூடியூப்-ல் மட்டுமே இந்த அம்சம் உள்ளது. 20 நிமிடம் பார்க்க வேண்டிய வீடியோவை 10 நிமிடங்களில் எவ்விதமாக கட் இல்லாமல் வேகமாக பார்க்க முடியும். ஆனால் இந்த அம்சம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சுந்தர் பிச்சை தினமும் காலையில் எழுந்த உடன் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் செய்தி ஆர்வலர்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு சிறப்பு இணையதளத்தைப் படிப்பதாகத் தெரிவித்தார். அந்த இணையதளத்தின் பெயர் Techmeme என்று அமெரிக்கப் பத்திரிகையான வயர்டுக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர் பிச்சை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications