Home
Mobile

யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் சூப்பர் குரு 4ஜி என்ற பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது ஐடெல் சூப்பர் குரு 4ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐடெல் சூப்பர் குரு 4ஜி அம்சங்கள்: அதாவது ஜிஎஸ் பே (GS Pay) மற்றும் என்பிசிஐ ( NPCI) இன் யுபுிஐ 123-ஐ பயன்படுத்தி UPI பேமெண்ட்டுகளுக்கு இந்த போனை பயன்படுத்தலாம். குறிப்பாக யுபிஐ ஆப்ஷன் உடன் இந்த போன் வருவதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யது பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.

யாரு சாமி நீ.. UPI..புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐடெல் சூப்பர் குரு 4ஜி போன் ஆனது யூடியூப் பிளேபேக்கை (YouTube playback) ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயனர்கள் இந்த போனில் யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts)-ஐ ஸ்ட்ரீம் செய்யலாம். இதுதவிர ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் பிபிசி செய்திகளைப் பார்க்கவும் இந்த போனை பயன்படுத்தலாம். அதேபோல் இந்த போனில் விஜிஏ கேமராவும் உள்ளது.

2-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐடெல் சூப்பர் குரு 4ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் தரமான கீபேட் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் Tetris, Sokoban மற்றும் 2048 ஆகிய கேம்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐடெல் நிறுவனம்.

குறிப்பாக 4ஜி வோல்ட்இ வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் சூப்பர் குரு 4ஜி போன். மேலும் 2ஜி மற்றும் 3ஜி ஆதரவையும் இந்த போன் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. தொலைதூர கிராமங்களில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இந்த புதிய ஐடெல் போன் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

1000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐடெல் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்கவே இருக்காது.

நீலம், பச்சை மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் LetsChat-ஐ ஆதரிக்கிறது இந்த புதிய பீச்சர் போன். குறிப்பாக இந்த புதிய சூப்பர் குரு 4ஜி போனின் விலை ரூ.1,799-ஆக உள்ளது. தற்போது அமேசான் மற்றும் ஐடெல் இணையதளங்களில் இந்த பீச்சர் போனை வாங்க முடியும்.

யாரு சாமி நீ.. UPI..புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

அதேபோல் கடந்த மாதம் ஐடெல் நிறுவனம் ஐடெல் ஐகான் 2 எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது புளூடூத் காலிங், 1.83-இன்ச் டிஸ்பிளே, 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஸ்லீப்பிங்க் மானிட்டர் (Sleeping Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), வுமன் ஹெல்த் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த ஐடெல் ஐகான் 2 மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த ஐடெல் ஐகான் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.1,099 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

photo courtesy: itel, mysmartprice

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Super Guru 4G launched in Phone India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X