1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தால் இவ்வளவு பணம் கிடைக்குமா? அசத்தும் Youtube.. விட்றாதீங்க..
யூடியூப் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அதுவும் சாதாரண வீடியோக்கள் தொடங்கி தொழில்நுட்பம், விளையாட்டு. சினிமா சார்ந்த வீடியோக்கள் வரை யூடியூப்பில் நீங்கள் பார்க்க முடியும்.
அதேபோல் இந்த யூடியூப்பில் சேனல்கள் தொடங்கி கிரியேட்டர்களாக மாறுவது மற்றும் அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டுவது தான் தற்போது ட்ரெண்டாக உள்ளன. அதன்படி நீங்கள் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

குறிப்பாக யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களது வீடியோக்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் குறிப்பிட்ட அளவு வருவாயைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீங்கள் உங்கள யூடியூப் சேனல் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் குறைந்தது 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 வாட்ச் அவர்ஸ் இருக்க வேண்டும் என்கிறது கூகுள் நிறுவனம்.
அதேபோல் இந்த இலக்கை எட்டியவர்கள் யூடியூப் ப்ரோக்ராம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் மானிட்டைஸ் செய்யப்பட்டு வருமானம் வழங்கப்படும். குறிப்பாக இதில் எப்படி வருமானம் கிடைக்கும் என்றால், ஒவ்வொரு ஆயிரம் விளம்பர பார்வைக்கும் அந்த குறிப்பிட்ட விளம்பரதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த யூடியூப் நிறுவனத்திற்கு வழங்குகிறார். இதில் 45 சதவீதம் யூடியூப் நிறுவனம் எடுத்துக் கொண்டு மீதம் இருக்கும் 55 சதவீதத்தை கிரியேட்டர்களுக்கு வழங்குகிறது.

மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர்கள் விளம்பரங்கள் மட்டுமல்ல சில பொருட்களை பிரமோஷன் செய்து மற்றும் அஃப்ளியேட் மார்க்கெட்டிங் பணம் சம்பாதிக்கிறார்கள்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருந்தால் சுமார் ரூ.1,98,400 முதல் ரூ.3,30,770 வரை வருமானம் ஈட்ட முடியும். ஆனாலும் இந்த தொகையானது சில காரணங்கள் அடிப்படையாகக் கொண்டு மாறுபடக்கூடும்.
மேலும் யூடியூப் தளத்தில் ஷார்ட் வீடியோக்கள் மூலம் கூட தற்போது பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற்கு 90 நாட்களில் 1000 சப்ஸ்க்ரைபர்கள் மற்றும் 10 மில்லியன் வியூக்களை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இந்த யூடியூப் மூலம் வருமானம் பெற விருப்பம் இருந்தால், முதலில் ஒரு சேனலை தொடங்க வேண்டும். அடுத்து மானிடைஸ் செய்வதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்பு YouTube Partnership Program-க்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். குறிப்பாக இதற்கு YouTube Studio app-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்.
இந்த ஆப்-இல் உள்ள Earn எனும் பட்டனை கிளிக் செய்து Apply என்பதைத் தேர்வு செய்து பின்னர் Start என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள terms-ஐ ஏற்க வேண்டும். அதன்பின்னர் AdSense கணக்கைத் தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள கணக்கை இதில் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து யூடியூப் தளத்தில் உங்களது சேனல் ரிவியூவ் செய்யப்பட்டு, அதில் யூடியூப் நிறுவனத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப சேனல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மானிடைசேசனுக்கு ஒப்புதல் கிடைக்கும். அதன்பின்பு தான் உங்களுக்கு இந்த யூடியூப் மூலம் மாதந்தோறும் வருமானம் கிடைக்கும். குறிப்பாகச் சரியான வீடியோக்களை பதிவிட்டால் தொடர்ந்து இந்த தளத்தில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
அதேபோல் இந்த யூடியூப் தளத்தில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த தளத்தில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








