YouTube செய்த தரமான சம்பவம்.. குளிர்ந்துபோன இந்தியர்கள்.. அவ்ளோ வெறி மாப்பிளைக்கு!
இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் நாள்தோறும் வேலை செய்து கலைத்துப்போய் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில், அவர்கள் ரிலாக்ஸ் செய்ய உதவியாக இருப்பது யூடியூப் (YouTube) வீடியோக்கள் மட்டும்தான். சொல்லப்போனால், யூடியூப்பையும் நம்மையும் பிரித்து பார்க்க முடியாது என்றே சொல்லலாம். அதற்கு சான்றாக நம் நாட்டில் யூடியூப் மிகப்பெரும் சம்பவத்தை சத்தமில்லாமல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயனர்களாக இருந்து வருகின்றனர். யூடியூப்பில் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. நீங்கள் படம் வரைய ஆசைப்பட்டால், யூடியூப்பில் டிராயிங் ஆர்ட்டிஸ்ட் பதிவிட்ட வீடியோக்களை பார்த்து கற்று கொள்ளலாம். சுவையாக மீன் குழம்பு வைக்க வேண்டும் என்றால், கைத்தேர்ந்த செஃப்களின் வீடியோக்களை பார்த்து சமைக்கலாம்.
இப்படி சாதாரண வீடியோக்கள் தொடங்கி, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா சார்ந்த வீடியோக்கள் வரை யூடியூப்பில் காணக் கிடைக்கிறது. இதனாலேயே நாளுக்கு நாள் யூடியூப் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்பட்ட யூடியூப் தளம், இப்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு (YouTuber) மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. நீங்களும் யூடியூப் சேனல் (YouTube Channel) தொடங்கி பணம் சம்பாதிக்க முடியும்.
அதற்கு முதலீடு தேவை கிடையாது. திறமை இருந்தால் மட்டுமே போதும், இப்படி பல வழிகளில் நமக்கு உதவிகரமாக இருக்கும் யூடியூப், இந்தியாவில் பல முன்னணி செய்தி நிறுவனங்களையே பின்னுக்குத்தள்ளி ஆன்லைனில செய்திகள் படிக்கும் மக்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியர்கள் அதிகமாக டிஜிட்டல் செய்திகளை படிக்கும், முதல் தளமாக உருவெடுத்துள்ளது யூடியூப். டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான கந்தர் (Kantar), நாடு முழுவதும் டிஜிட்டல் செய்தி வாசிப்போரின் எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்தது.
இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பிராந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் டிஜிட்டல் செய்திகளை மக்கள் அதிகம் வாசிக்கின்றனர். இவர்களில், 93 சதவிகிதம் பேர் செய்திகளை தெரிந்துகொள்ள யூடியூப் தளத்தை பயன்படுத்துகின்றனர்.
அதேபோல ஃபேஸ்புக் (Facebook), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக வலைதள ஆப்ஸ்களில் வரும் லிங்ஸ் மூலம் 88 சதவிகிதம் பேர் டிஜிட்டல் செய்திகளை வாசிக்கின்றனர். வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சாட் ஆப்ஸ்கள் மூலம் 82 சதவிகிதம் பேர் செய்திகளை படிக்கின்றனர். 45 சதவிகிதம் பேர் செய்தி நிறுவனங்களின் வெப்சைட்களிலும், அதன் ஆப்ஸ்களிலும் செய்திகளை வாசிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், ஆங்கிலத்தில் டிஜிட்டல் செய்திகளை வாசிக்க, நாட்டில் பாரம்பரியமான மிகப்பெரும் செய்தி நிறுவனங்களின் வெப்சைட்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் செய்திகளை வாசிப்போர் மொழி வாரியாக பிரிந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
இந்த பிராந்திய மொழி செய்தி வாசிப்பாளர்கள், பொழுதுபோக்கு, குற்றம், தேசிய மற்றும் மாநில செய்திகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், மலையாளம் மொழி வாசிப்பாளர்கள் சர்வதேசம் மற்றும் கல்வி தொடர்பான செய்திகளை அதிகம் படிக்கின்றனர். அதேபோல, பெங்காலி மொழி வாசிப்பாளர்கள் விளையாட்டு செய்திகளை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








