Home
News

யூடியூப்பில் விளம்பரமே வரக்கூடாதா? இலவசமா இதை ஒரே ஒரு முறை ட்ரை செஞ்சு பாருங்க மக்களே..

யூடியூப் (YouTube) தளத்தில் இருக்கும் பயனர்களுக்கு இருக்கும் மிக பெரிய சோதனையே அந்த தளத்தில் இருக்கும் விளம்பரங்கள் தான். அமெரிக்காவை சேர்ந்த மக்கள் ஒரு நாளுக்கு சுமார் 4,000 முதல் 10,000 விளம்பரங்களை பார்க்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்புங்கள் மக்களே அது தான் உண்மை. இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின் படி, ஒரு நாளுக்கு சராசரியாக முழு நேரமும் யூடியூப் தளத்தில் பொழுது போக்கும் ஒரு நபர், தினமும் சுமார் 4000 விளம்பரங்களை (ads) பார்க்க நேரிடுகிறதாம். இது சில சமயங்களில் 10,000 வரை கூட செல்கிறது என்கிறது புதிய கணக்கெடுப்பு.

யூடியூப்பில் விளம்பரமே வரக்கூடாதா? இலவசமா இதை ஒரு முறை ட்ரை செய்க!

சரி, யூடியூப் தளத்தில் வரும் அதிகப்படியான விளம்பரங்களால் (YouTube ads) நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவை பாருங்கள். யூடியூப் தளத்தில் இலவசமா யூடியூப் பிரீமியம் மெம்பர்ஷிப் (Free YouTube Premium Membership Subscription) சந்தாவை எப்படி பைசா செலவின்றி இலவசமாக குறிப்பிட்ட காலம் வரை பெறலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

யூடியூப் பிரீமியம் சந்தா விளம்பரங்கள் இல்லாத கூடுதல் அம்சங்களை ஆதரிக்கும் வீடியோ (YouTube Video) உள்ளடக்கத்தை வழங்குகிறது. தற்போது இந்திய பயனர்களுக்கு 3 மாத இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை (3 Months Free YouTube Premium Subscription) நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது. யூடியூப் பிரீமியம் சந்தா வழக்கமாக மாதத்திற்கு ரூ. 139 என்ற விலையிலும், மூன்று மாத சந்தாவுக்கு ரூ.399 என்ற கட்டணத்தையும் இந்திய பயனர்களிடமிருந்து வசூலிக்கிறது.

இப்போது இந்த எந்த கட்டணமும் இல்லாமல், யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தாவை 3 மாதத்திற்கு இலவசமாக வழங்குகிறது YouTube நிறுவனம். இந்த சந்தா விளம்பரங்கள் இல்லாத உள்ளடக்கத்துடன் (No ads), பேக்கிரௌண்ட் பிளே (Background Play) மற்றும் ஆஃப்லைன் டவுன்லோட் (Offline download) போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. இந்த இலவச மூன்று மாத சந்தாவைப் பெறுவதற்கு,இதற்கு முன் YouTube Premium-ஐ பயன்படுத்தாத பயனராக இருக்கவேண்டும்.

யூடியூப்பில் விளம்பரமே வரக்கூடாதா? இலவசமா இதை ஒரு முறை ட்ரை செய்க!

சரி, இப்போது எப்படி இந்த யூடியூப் பிரீமியம் சந்தாவை பெறுவதென்று பார்க்கலாமா?
முதலில் உங்கள் YouTube மொபில் ஆப்ஸை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
'Get YouTube Premium' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் இலவச 3 மாத சலுகையைத் தேர்வு செய்யவும்.
உங்கள் வங்கி அட்டை விவரங்களை உள்ளிடவும்.

பயப்பட வேண்டாம் மக்களே.. இது சரிபார்ப்புக்காக மட்டுமே.
ஆரம்பத்தில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.
3 மாத இலவச சோதனைக் காலம் முடியும் வரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
நீங்கள் சந்தாவை ரத்து செய்யத் தேர்வுசெய்யும் வரையில், சந்தா தானாகவே மாதத்திற்கு ரூ.129 செலவில் தானாக அப்டேட் செய்யப்படும்.

யூடியூப்பில் விளம்பரமே வரக்கூடாதா? இலவசமா இதை ஒரு முறை ட்ரை செய்க!

YouTube பிரீமியத்தின் நன்மைகள் பற்றி பார்க்கையில், இதன் முக்கிய அம்சமே இதில் விளம்பரங்கள் கிடையாது. அடுத்தபடியாக YouTube பிரீமியத்திற்கான சந்தா, யூடியூப் மியூசிக் பிரீமியம் (YouTube Music Premium) சந்தாவுக்கான அணுகலையும் உள்ளடக்கியது. இது யூடியூப்பின் பிரத்தியேக மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையாகும். இது மில்லியன் கணக்கான பாடல்களையும் வீடியோக்களையும் விளம்பரமில்லா அமைப்பில் வழங்குகிறது.

YouTube பிரீமியம் உங்களுக்கு பேக்கிரௌண்ட் பிளே பேக் அம்சத்தையும், ஆஃப்லைன் டவுன்லோட் அம்சத்தையும் வழங்குகிறது. இத்துடன் யூடியூப் ஒரிஜினல்களுக்கான (YouTube Original) அணுகலை இந்த சந்தா வழங்குகிறது. இதில் பல்வேறு திரைப்படங்கள், சீரிஸ்கள் மற்றும் டாக்குமெண்டரி படங்கள் பார்க்க கிடைக்கின்றன. இத்தகைய அம்சங்கள் நிறைந்த யூடியூப் பிரீமியம் சந்தா அம்சத்தை இலவசமாக பயன்படுத்த கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

இலவசமாக ஒரு முறை பிரீமியம் மெம்பர்ஷிப் உடன் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பிளே செய்து பார்த்து மகிழ்ந்திடுங்கள். இந்த அம்சம் உண்மையிலேயே 3 மாத காலத்திற்கு இலவசமாக கிடைக்கிறது. நீங்கள் எந்த தேதியில் இருந்து யூடியூப் பிரீமியம் சந்தாவை பெற முயல்கிறீர்களோ, அந்த தேதியில் இருந்து 3 மாத காலம் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Get Free YouTube Premium Membership Subscription For 3 Months Without Spending a Penny
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X