டவுன்லோடு அட் நைட் : யூட்யூப் புதிய அம்சம் நமக்கு பயன் தரும்.!!

By Meganathan
|

யூட்யூப் ஆஃப்லைன் எனும் அம்சத்தினை 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு சேவைகளை வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் தற்சமயம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி யூட்யூப் சேவையில் புதிய அம்சம் ஒன்றினை வழங்கியுள்ளது.

யூட்யூப் புதிய அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் வீடியோக்களை டவுன்லோடு செய்திட முடியும்.

01

01

யூட்யூப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் பழைய ஆஃப்லைன் அம்சம் போன்றே இயங்குகின்றது.

02

02

அதன்படி குறிப்பிட்ட வீடியோவினை தேர்வு செய்து ஆஃப்லைன் கொண்டு செல்ல உதவும் சாம்பல் நிற அம்பு குறியை க்ளிக் செய்ய வேண்டும்.

03

03

ஆஃப்லைன் அம்சத்தை குறிக்கும் பட்டனை க்ளிக் செய்ததும் 'Save overnight' என்ற புதிய ஆப்ஷன் திரையில் காணப்படும், இதனை தேர்வு செய்ய வேண்டும்.

04

04

புதிய அம்சத்தினை சேர்வு செய்ததும் இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீடியோ டவுன்லோடு ஆகும். இதன் மூலம் டவுன்லோடு முடியும் வரை திரையை பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

05

05

பொதுவாக பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களும் இண்டர்நெட் மற்றும் அழைப்பு சார்ந்த சலுகைகளை இரவு நேரத்தில் வழங்குவதால் இந்த அம்சம் நமது மொபைல் டேட்டாவினை அதிகம் சேமிக்கும்.

06

06

குறிப்பாக ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இரவு நேரங்களில் 50 சதவீத டேட்டா சேமிக்கும் திட்டங்களை வழங்கி வருகின்றன.

07

07

ஏர்டெல் திட்டத்தில் இரவு நேரத்தில் 100 எம்பி பயன்படுத்தும் போது சிறிது நேரத்தில் 50 எம்பி டேட்டா திரும்ப வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்க தான் செய்கின்றது.

08

08

இது இல்லாமல் ஏர்டெல் 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் இரவு நேரம் மட்டும் பயன்படுத்தும் சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்த திட்டத்தில் அதிகாலை 12.00 மணி முதல் 6.00 மணி வரை இண்டர்நெட் பயன்படுத்த முடியும்.

09

09

யூட்யூப் புதிய அம்சம் மொபைல் டேட்டா பயன்படுத்துவோருக்கு மட்டுமே வேலை செய்யும். வை-பை மூலம் பயன்படுத்துவோர் இந்த அம்சத்தினை பயன்படுத்த இயலாது.

10

10

இந்த அம்சம் தற்சமயம் ஏர்டெல் மற்றும் டெலிநார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த யூட்யூப் செயலியை அப்டேட் செய்திருத்தல் அவசியமாகும்.

Best Mobiles in India

English summary
YouTube on Android adds an option to reduce data cost Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X