கையில் இது இருந்தா உங்க மதிப்பே வேற: முதன்முதலாக சியோமி அறிமுகம் செய்த டாப் லெவல் சாதனம்!

|

Xiaomi Book S டேப்லெட் ஆனது 12.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 500 நிட்ஸ் பிரகாசத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. உயர்தர லுக் உடன் இருக்கும் இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள குறித்து பார்க்கலாம்.

12.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

12.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே

சியோமி புக் எஸ் சாதனமானது 12.4 இன்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே 2,560 x 1,600 பிக்சல்கள் தீர்மானத்துடன் 500 நிட்ஸ் பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது. டேப்லெட் ஆனது ஸ்னாப்டிராகன் 8cx ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட் உயர்தர பயன்பாட்டு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

சியோமி அறிமுகம் செய்த இந்த டேப்லெட் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. புக் எக்ஸ் ஆனது 13.4 மணிநேர பேட்டரி ஆயுளை கொண்டிருக்கிறது. இதில் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. விண்டோஸ் 11 ஆதரவுடன் கூடிய புக் எஸ் டேப்லெட் ஆனது எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் விலை என்ன என்று தெரியுமா?

Xiaomi Book S விலை விவரங்கள்

Xiaomi Book S விலை விவரங்கள்

Xiaomi Book S விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த டேப்லெட் EUR 700 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ. 57,500 ஆகும். இந்த சாதனம் ஜூன் 30 முதல் ஆர்டருக்கு கிடைக்கும். முதல் இரண்டு நாட்களில் புக் எஸ் ஆர்டர் செய்பவர்கள் இந்த சாதனத்தை ரூ.49,300 என வாங்கலாம். கூடுதல் சலுகைகளும் இந்த சாதனத்துக்கு வழங்கப்படுகிறது.

65W GaN சார்ஜர் இலவசம்

65W GaN சார்ஜர் இலவசம்

அதேபோல் ஆரம்ப சலுகையாக முதல் இரண்டு நாட்களில் இந்த சாதனம் வாங்கும்பட்சத்தில் 65W GaN சார்ஜர் இலவசமாக கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த சாதனம் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் நெதர்லாத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ரூ.50,000 விலைப் பிரிவில் கிடைக்கும் இந்த சாதனத்தில் விலைக்கேற்ற அம்சங்கள் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

Xiaomi Book S சிறப்பம்சங்கள்

Xiaomi Book S சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 2,560 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 16:10 விகிதத்துடன் கூடிய 12.14 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. எல்சிடி ஆதரவுடன் இந்த டிஸ்ப்ளே இருப்பதால் இதன் காட்சி மென்மையாக இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஸ்போர்ட்ஸ் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆதரவு இருக்கிறது. இந்த டேப்லெட் அலுமினியம்-மெக்னீசியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. Snapdragon 8cx Gen 2 வசதியோடு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு இதில் இருக்கிறது. விண்டோஸ் 11 மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது.

குவால்காம் அக்ஸ்டிக் எக்கோ கேன்சலேஷன்

குவால்காம் அக்ஸ்டிக் எக்கோ கேன்சலேஷன்

செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என சியோமியின் இந்த டேப்லெட்டில் 1,080p முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் பிரத்யேக அம்சங்கள் கொண்ட மைக்ரோன்கள் இருக்கிறது. குவால்காம் அக்ஸ்டிக் எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் ரத்து ஆதரவுடன் கூடிய இரட்டை மைக்ரோபோன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் டேப்லெட்டின் இரண்டு பக்கங்களிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கிறது. பிற இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கலாம்.

13.4 மணிநேர பேட்டரி பேக்-அப்

13.4 மணிநேர பேட்டரி பேக்-அப்

சியோமி புக் எஸ் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 3.5mm ஹெட்ஃபோன் ஹேக், ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், வைஃபை, ப்ளூடூத் வி5.1 உள்ளிட்ட வசதி இருக்கிறது. இநத் சாதனத்தின் பேட்டரி பேக்-அப் 13.4 மணிநேரம் ஆகும். இந்த டேப்லெட்டை 65W GaN வேக சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். இதன் எடை 720 கிராம் ஆகும்.

Smart Pen ஆதரவு

Smart Pen ஆதரவு

இரட்டை பயன்முறையை கொண்ட முதல் சியோமி சாதனம் இதுதான். சாதனத்துடன் கீபோர்டை இணைப்பதற்கு Pogo Pin ஆதரவு இருக்கிறது. இந்த சாதனத்தை பொறுத்தவரை கீபோர்ட் என்பது துணைக்கருவி தான். கீபோர்ட் இல்லாமல் இதை டேப்லெட் ஆகவும் இயக்கலாம். சியோமியின் இந்த சாதனத்தில் Smart Pen ஆதரவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Xiaomi Book S Launched With 12.4 inch LCD Display, Windows 11 and More: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X