போடு போடுனா எங்க இருக்கு., இதுல இந்த காலர்டியூன் வேற எரிச்சலாக்குது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

|

மக்களுக்கு போடுவதற்கு போதிய தடுப்பூசி இல்லை ஆனால் தடுப்பூசி போடுங்கள் என விழிப்புணர்வு காலர்டியூன். யார் தடுப்பூசி போடுவார்கள் இந்த அறிவிப்பின் பலன் என்ன., இது எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது என கொரோனா விழிப்புணர்வு காலர்டியூன் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

போதுமான தடுப்பூசி இல்லை

போதுமான தடுப்பூசி இல்லை

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசிக்கு பெரும் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்படி மக்களை கேட்டுக் கொள்ளும் காலர் டியூன் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது என நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. ஒருவரை அழைக்கும் போதெல்லாம் எரிச்சலூட்டும் வகையில் காலர் டியூன் அமைகிறது. காரணம் மக்களை தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது ஆனால் தங்களிடம் அதற்கு போதுமான தடுப்பூசி இல்லை என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு காலர்டியூன்

கொரோனா விழிப்புணர்வு காலர்டியூன்

கொரோனா தொற்று பரவிய காலம் முதல் கொரோனா விழிப்புணர்வு காலர்டியூன் செயலுக்கு வந்தது. இதையடுத்து தடுப்பூசி செயலுக்கு வந்ததும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி காலர் டியூன் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த காலர் டியூன் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லியில் கொரோனா நிலை குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தெரிவித்த நீதிபதிகள், தொலைபேசியில் எப்போது அழைப்பு மேற்கொண்டாலும் எரிச்சலூட்டும் காலர் டியூன்களை ஒலிக்க செய்கிறீர்கள்., உங்களிடம் போதிய தடுப்பூசி இல்லை. தடுப்பூசி இல்லாதபோது எப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் காலர் டியூனின் நோக்கம்தான் என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

அனைவருக்கும் தடுப்பூசி

அனைவருக்கும் தடுப்பூசி

தடுப்பூசி அனைவருக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் பணம் வசூலிக்கப் போகிறீர்கள் என்றாலும் பரவாயில்லை அதைக் கொடுங்கள். அதைத்தான் குழந்தைகள் கூட கூறுகிறார்கள் என அமர்வு கூறியது. அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பக்கூடிய வகையில் குறுகிய கால தொகுப்பாக., ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்களைப் பயன்படுத்துவது, தடுப்பூசி போடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சிகளை உருவாக்க டிவி அறிவிப்பாளர்கள் அல்லது தயாரிப்பாளர்களைப் பயன்படுத்தும்படி அமர்வு பரிந்துரை செய்தது.

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்தது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கிறது.

கோவிட் தடுப்பூசிகள் விலை

கோவிட் தடுப்பூசிகள் விலை

கோவிட் தடுப்பூசிகள் விலை குறித்து பார்க்கையில், கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் இருக்கும் மத்திய அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும். இருப்பினும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் ஒரு டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் செலுத்த வேண்டும் என்றால் விலை நிர்ணயத்தில் கிடைக்கின்றன. கோவிஷீட் தடுப்பூசி மாநிலங்களுக்கு ரூ.400 எனவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கோவாக்சின் விலை இன்னும் தெரியவில்லை.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், ஏப்ரல் 28 முதல் கோவிட்-19 தடுப்பூசி Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. அதேபோல் ஆரோக்கிய சேது பயன்பாட்டின் மூலமாக முன்பதிவு மேற்கொள்ளலாம்.

source: zeenews

Most Read Articles
Best Mobiles in India

English summary
Why Play the Annoying Caller Tune When not getting Enough Vaccine: HC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X