குப்பைகளில் தயாரிக்கப்பட்ட ரோபோ: சமையல் குக்கரில் ரோபோ தலை- கொரோனா நோயாளிகளுக்கு பொது சேவை!

|

இந்தோனேசிய கிராமவாசிகள் மற்றும் விஞ்ஞானிகளால் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோ தொற்றுநோய்களின் போது ஒரு புதிய பயன்பாட்டைக் கண்டறிந்துள்ளது. இந்த ரோபோவானது கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உணவையும், புன்னகையையும் வழங்குகிறது.

வீட்டு உபயோக பொருட்கள்

வீட்டு உபயோக பொருட்கள்

பானைகள், பாத்திரங்கள் மற்றும் பழைய தொலைக்காட்சி மானிட்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் கலவையாக இது இருக்கிறது. இந்த ரோபோவிற்கு டெல்டா ரோபோ என பெயரிடப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று காலத்தில் பெரிதும் பயனுள்ள வகையில் இது இருக்கிறது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு பிரத்யேக முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை இணைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று நோய் காலம் என்பதால் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே.

தனிமைப்படுத்தப்பட்டு தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடாமல் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு அளித்தல், அவர்களின் வீடுகளை சுற்றி கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த பணிகளுக்கு ரோபோவை பயன்படுத்தினால் தனிமைப்படுத்தலில் இருக்கும் விரக்தியை தவிர்க்கலாம்.

கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள்

கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள்

இந்தோனேசியாவில் உள்ள ஒரு கிராமத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவானது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது, அவர்களின் வீடுகளுக்கு இடையே கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த ரோபோ ஆறுதல் வார்த்தைகள் கூறி ஊக்கமளிக்கிறது.

டெல்டா ரோபோ என பெயர்

டெல்டா ரோபோ என பெயர்

இந்த ரோபோவுக்கு டெல்டா ரோபோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த டெல்டா ரோபோவின் மூலம் பல்வேறு வகையிலான பலன்களை பெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த ரோபோவானது கிராம மக்கள் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கினர்.

உணவு வழங்குதல் உள்ளி பணி

உணவு வழங்குதல் உள்ளி பணி

புதிய டெல்டா மாறுபாடு மற்றும் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கிருமி நாசினி தெளித்தல், உணவு வழங்குதல் மற்றும் சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பொது சேவைகளுக்கு ரோபோ பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் குணமடையுங்கள் என்ற ஊக்க வார்த்தை

விரைவில் குணமடையுங்கள் என்ற ஊக்க வார்த்தை

ரோபோவின் தொழில்நுட்பமானது ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோபோவின் பணிகள் குறித்து பார்க்கையில் இது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் "அஸ்ஸலாமு அலைக்கும்" என கூறி செய்தியை வெளியிடுகிறது. விரைவில் குணமடையுங்கள் என்ற ஊக்க வார்த்தையையும் கூறுகிறது. இந்த கிராமமானது கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரமாகவும் சுரபா மற்றும் இந்தோனேஷியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. அங்கு கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

அரிசி குக்கரில் தயாரிக்கப்பட்ட தலை

அரிசி குக்கரில் தயாரிக்கப்பட்ட தலை

ரோபோவின் தயாரிப்பு குறித்து பார்க்கையில் இதன் தலையானது அரிசி குக்கரில் இருந்து தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த ரோபோவை பேட்டரி ஆயுள் மூலம் இயக்கலாம். இது 12 மணிநேர பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. இந்தோனேசிய டெம்போக் கெடே கிராமத்தில் தயாரிக்கப்பட்ட பல ரோபோக்களில் இதுவும் ஒன்றாகும். கோவிட்-19 தொற்று பரவலில் இந்தோனேசியா ஆசியாவின் மையமாகவே மாறியுள்ளது. அங்கு 3.68 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்றுகள் மற்றும் 108000-க்கு அதிகமான இறப்புகளை சந்தித்துள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Indonesia Villagers Made Robot with Unwanted Trash: Robots Help to Isolated Persons

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X