மீண்டும் கொரோனா காலர் டியூன்: நிரந்தரமாக நிறுத்துவது எப்படி?- எளிய வழிமுறைகள்!

|

கடந்த தசாப்தங்களில் மனிதகுலம் சந்தித்த மிக மோசமான வைரஸ் தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் ஆகும். உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேபோல் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் பின்பற்றுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கும்படி சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயனர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் டயலர் ட்யூன் ஒலிக்கச் செய்யப்பட்டு வருகிறது.

இருமல் ஒலியுடன் தொடங்கும் டயலர் ட்யூன்

இருமல் ஒலியுடன் தொடங்கும் டயலர் ட்யூன்

செல்போன் மூலம் பிறரை தொடர்பு கொள்ளும் அனைவரும் இருமல் ஒலியுடன் தொடங்கும் டயலர் ட்யூன் ஒருமுறையாவது கண்டிப்பாக கேட்டிருப்பார்கள். இருமல் ஒலிக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கைகள் அளிக்கப்படும். இதிலும் சற்று வித்தியாசமாக சில ஆபரேட்டர்கள் அமிதாப் பச்சனின் குரலில் கொரோனா வைரஸ் அழைப்பாளர் பாடலை இசைக்க செய்கின்றனர்.

காலர் ட்யூன் இயங்குவதை நிறுத்த பலர் போராட்டம்

காலர் ட்யூன் இயங்குவதை நிறுத்த பலர் போராட்டம்

இந்த காலர்ட்யூன் ஒலிக்கச் செய்ய தொடங்கி வருடங்கள் ஆகிவிட்டது. இந்த காலர் ட்யூன் இயங்குவதை நிறுத்த பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான சமயங்களில் தொடர்பு அழைப்பு செய்யும்போது தொடர்ந்து இந்த காலர் ட்யூன் கேட்டுக் கொண்டே இருக்கும் போது எரிச்சல் அடையச் செய்வதே ஆகும். ஒவ்வொரு அழைப்புக்கும் தொடர்ந்து இதே காலர் ட்யூன் கேட்டு பலரும் வெறுப்படைகின்றனர். இந்த காலர் டியூனை நிறுத்துவதற்கு பலரும் முயற்சிகள் செய்திருக்கலாம். இதை எப்படி நிரந்தரமா நிறுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். இந்த செயல்முறையான ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க்குகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு பொருந்தும்.

கொரோனா வைரஸ் காலர் ட்யூனை நிறுத்துவது எப்படி

கொரோனா வைரஸ் காலர் ட்யூனை நிறுத்துவது எப்படி

ஏர்டெல் மற்றும் வோடபோன் எண்களில் நிரந்தரமாக கொரோனா வைரஸ் காலர் ட்யூனை நிறுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடபோன் பயனர்கள் இருவரும் கோவிட் காலர் ட்யூனுக்கான ரத்து கோரிக்கையை அனுப்ப ஒரு சிறப்பு எண் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன் பயனர்கள்

ஏர்டெல், வோடபோன் பயனர்கள்

ஏர்டெல் பயனர்கள் போனின் டயலரில் இருந்து *646 *224# என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இந்த எண்ணை டயல் செய்த உடன், ரத்து கோரிக்கை சமர்பிக்க கீபேட்-ல் இருந்து எண் 1-ஐ அழுத்த வேண்டும்.

அதேபோல் வோடபோன் பயனராக இருக்கும்பட்சத்தில், ரத்து கோரிக்கையை ஒரு மெசேஜ் ஆக அனுப்பலாம். "CANCT" என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதன்பின் கோவிட் காலர் ட்யூனை ரத்து செய்வதற்கான உறுதிப்படுத்தலை நீங்கள் பெறுவீர்கள்.

155223 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்

155223 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் எண்களில் கோவிட் காலர் டியூனை நிறுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடபோன் பயனர்கள் கொரோனா வைரஸ் காலர் டியூனை செயலிழக்க செய்ய டயல் எண் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜியோ எண்ணை பயன்படுத்துபவர்களாக இருந்தால், "STOP" என டைப் செய்து 155223 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்ட உடன் கோவிட் அழைப்பாளர் ட்யூன் செயலிழக்கச் செய்யப்படும்.

சிறப்பு எண் அறிமுகம்

சிறப்பு எண் அறிமுகம்

பிஎஸ்என்எல் நுகர்வோர்கள் சிறப்பு எண் 56700 அல்லது 5699 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பலாம். கொரோனா காலர் ட்யூனை ரத்து செய்ய "UNSUB" என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

அதேபோல் கொரோனா வைரஸ் ரத்து செய்ய விரைவான வழிமுறைகள் இருக்கிறது. ஏர்டெல், ஜியோ, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் பயனர்கள் நிரந்தரமார காலர் டியூனை நிறுத்த இதுவே ஒரு வழியாகும். இதற்கான தற்காலிக தீர்வும் இருக்கிறது. கொரோனா வைரஸ் அழைப்பாளர் டியூனை தவிர்த்து நேரடியாக அழைப்புகளை இணைக்கச் செய்யலாம்.

கோவிட் அழைப்பாளர்கள் டியூன்

கோவிட் அழைப்பாளர்கள் டியூன்

நீங்கள் எந்த ஒரு எண்ணையும் டயல் செய்து அழைத்த உடன் கோவிட் அழைப்பாளர்கள் டியூன் கேட்டவுன் # என்ற விசையை அழுத்தவும். குறிப்பிடத்தக்க வகையில் எந்த சீரற்ற விசையையும் அழுத்தலாம். அழைப்பாளர் ட்யூனை தவிர்க்க * அழுத்தவும். மேலே குறிப்பிட்டுள்ளபடி கொரோனா காலர் ட்யூன்களை தவிர்க்கலாம்.

காலர் ட்யூனை நிறுத்துவதற்கான வழிமுறைகள்

காலர் ட்யூனை நிறுத்துவதற்கான வழிமுறைகள்

இருப்பினும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது கொரோனா காலர் ட்யூனை நிறுத்துவதற்கான வழிமுறைகளே ஆகும். கொரோனாவை முழுமையாக ஒழிக்க அனைவரும் முறையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Stop Corona Caller Tune Permanently?- Tips For Jio, Airtel, VI Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X