தடுப்பூசி போடவே இல்ல., "வெற்றிகரமாக முழுமையானது தடுப்பூசி" என்ற எஸ்எம்எஸ்- அதிர்ச்சி அடைந்த நபர்!

|

இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக சான்றிதழ் அனுப்பப்பட்டதையடுத்து அதிர்ச்சி அடைந்த நபர்.

இரண்டாவது தடுப்பூசி

இரண்டாவது தடுப்பூசி

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் அவுசா தாலுகாவுக்கு உட்பட்ட ஜவல்கா கிராமத்தில் வசித்து வருபவர் விஜயக்குமார். 29 வயதான இவருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தமாலேயே இரண்டாவது டோஸ் நிறைவடைந்தது என்ற எஸ்எம்எஸ் கிடைத்ததையடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் தரப்பு தகவல்

சுகாதார அதிகாரிகள் தரப்பு தகவல்

Human Error (மனிதப் பிழை) காரணமாக இது நடந்திருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இரண்டாவது தடுப்பூசிக்கு தனக்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தடுப்பூசி போடாமலேயே தனது கைப்பேசிக்கு மெஜேஸ் வந்ததாகவும், அதில் உங்களுக்கு மாலை 4:17 மணிக்கு கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் போடப்பட்டது எனவும் உங்களது தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கி செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ்

தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ்

இதில் உள்ள லிங்கை ஓபன் செய்து பார்த்தபோது, தான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை பெற்றதாகவும் குறிப்பிட்டார். அதில் தடுப்பூசி போடப்பட்ட இடம் அவுசா, நாத் சபாக்ரா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம் அன்று தடுப்பூசி முகாமே நடத்தப்படவில்லை என சபாக்ரா நிர்வாகம் குறிப்பிட்டது. மேலும் தடுப்பூசி பதிவு செய்யும் நபர் தவறுதலாக மொபைல் எண்ணை பதிவு செய்திருக்கலாம் எனவும் இதனால் இது நடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யும் இணையதளமாக கோவின் இருக்கறிது. இந்த தளத்தில் பல்வேறு ஆதரவு அம்சங்கள் இணைக்கப்பட்டு வருகிறது.

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவன் சாதனை குறித்து மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியை பகிர்ந்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதில்., இந்தியா 1 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது எனவும் இது இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தியாளர்களின் திறன் மற்றும் கோவின் மூலம் ஆதரிக்கப்படும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் முயற்சிகள் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள்

101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள்

கோவின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, நாட்டில் இதுவரை 101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் எனவும் ஏறக்குறைய 30 கோடி பேர் இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளதாகவும் 71 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், 100 கோடி என்பது வெறும் எண் மட்டுமல்ல, நாட்டின் திறன் மற்றும் புதிய இந்தியாவின் சின்னம் என தெரிவித்தார். அதோடு இந்தியா செய்யுமா என்று கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதுதான் எனவும் குறிப்பிட்டார்.

தடுப்பூசி உற்பத்தியாளர்களின், சுகாதார ஊழியர்களின் முயற்சி

தடுப்பூசி உற்பத்தியாளர்களின், சுகாதார ஊழியர்களின் முயற்சி

கோவின் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை 101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர். 1 பில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது அது தடுப்பூசி உற்பத்தியாளர்களின் முயற்சியாலும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் முயற்சிகளுக்கும் ஒரு சான்றாகும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Certificate of Myself Being Fully Vaccinated Before took second Dose: Maharashtra Man Complaint

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X