தடுப்பூசி போடல சிம்கார்ட்கள் பிளாக்: அரசு அதிரடி அறிவிப்பு- எங்கு தெரியுமா?

|

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுக்கும் மக்களின் சிம் கார்ட்கள் பிளாக் செய்யப்படும் என பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சிம் கார்ட்கள் பிளாக்

சிம் கார்ட்கள் பிளாக்

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுக்கும் மக்களின் சிம் கார்ட்கள் பிளாக் செய்யப்படும் என பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்

அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது பிரதானமாக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செயல்முறையை விரைவுப்படுத்த முக்கிய நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

சிம் கார்ட்களின் இணைப்புகள் முடக்கப்படும்

சிம் கார்ட்களின் இணைப்புகள் முடக்கப்படும்

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்ட்களின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக்., பஞ்சாப் சிறப்பு சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் ஹம்மது ராசா இந்த உத்தரவை பிறிப்பித்துள்ளார்.

மொபைல் தடுப்பூசி முகாம்கள் அமைக்க முடிவு

மொபைல் தடுப்பூசி முகாம்கள் அமைக்க முடிவு

பாக்., பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் யாஸ்மீன் ரஷீத் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மாகாணத்தில் ஆலயங்களுக்கு வெளியே மொபைல் தடுப்பூசி முகாம்கள் அமைக்க முடிவு செய்தது. கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்கார்ட்கள் பிளாக் செய்யப்படும்

சிம்கார்ட்கள் பிளாக் செய்யப்படும்

ஆனால் பாகிஸ்தானில் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பெருவாரியான மக்கள் தடுப்பூசி போட முன்வருவதில்லை. இதை கருத்தில் கொண்டு அந்த மாகாண அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. தடுப்பூசி இலக்கை முடிக்கமுடியாத காரணத்தினால் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்நாட்டு மக்கள் முதல் டோஸை செலுத்திக் கொண்ட பிறகு இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி

தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி

அதுமட்டுமின்றி தடுப்பூசி போட்டவர்கள் சினிமா அரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும், திருமண அரங்குகள் திறக்கப்படும், மேலும் எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தீவிரமடையும் தடுப்பூசி செலுத்தும் பணி

மீண்டும் தீவிரமடையும் தடுப்பூசி செலுத்தும் பணி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி இருப்பு மற்றும் பாதுகாக்கப்படும் முறை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசு அனுமதியின்றி வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே தீர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பெரும்வாரியான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருகின்றனர். தடுப்பூசிகளை ஒட்டு மொத்த மக்களுக்கும் கொண்டு சேர்க்க துரிதமாக செயல்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Pakistan's Punjab Govt Decided to Block Sim Cards of People Who Refusing Vaccine

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X