வருமுன் காப்போம்! Covid-19 Nasal தடுப்பூசி ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

|

பாரத் பயோடெக் நிறுவனத்தின் Covid-19 Nasal தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தடுப்பூசியானது ஒரு பூஸ்டர் டோஸ் ஆக கிடைக்கிறது. தடுப்பூசியை CoWIN இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

கோவிட் தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி

கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் நாசி டோஸ் எடுத்துக் கொள்ளலாம். இந்த நாசி டோஸை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கொரோனாவில் இருந்து ஏறத்தாழ மீண்டு வந்து விட்டோம் என்று சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. மீண்டும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொரோனா பரவல் பழைய நிலையை எட்டத் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு

அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு

சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகவும் 5000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டம்

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் புதுடெல்லியில் நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பலர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நாடுகளின் நிலவரம் மற்றும் உள்நாட்டு நிலவரம் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகள் படுக்கை வசதிகள், மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவைகள் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் விளக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

நாசி தடுப்பூசி பூஸ்டர் டோஸ்

நாசி தடுப்பூசி பூஸ்டர் டோஸ்

இதற்கிடையில், இந்தியாவில் நாசி தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் ஆக பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பயோடெக் இன் இன்ட்ராநாசில் கோவிட் தடுப்பூசிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பூஸ்டர் டோஸ் ஆக பயன்படுத்திக் கொள்ள பச்சைக் கொடி காட்டி இருக்கிறது.

கோவிட்-19 நாசி தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ளலாம்

கோவிட்-19 நாசி தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ளலாம்

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பாரத் பயோடெக் இன் இன்ட்ராநாசில் தடுப்பூசி ஆன iNCOVACC ஐ மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் மருந்தை 2 டோஸ் எடுத்துக் கொண்ட பெரியவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக இது கொடுக்கலாம்.

கோவிட் நாசி தடுப்பூசி எங்கே கிடைக்கும்

கோவிட் நாசி தடுப்பூசி எங்கே கிடைக்கும்

மக்கள் CoWIN தளம் மூலமாக நாசில் தடுப்பூசிகளை முன்பதிவு செய்யலாம். டிசம்பர் 23, 2022 முதல் CoWIN இணையதளம் மற்றும் ஆப்ஸ் மூலமாக கோவிட் நாசி பூஸ்டர் டோஸிற்கான சந்திப்புகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

இந்தியாவில் கோவிட் நாசல் தடுப்பூசியின் விலை

iNCOVACC நாசி தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனைகளில் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தவிர்த்து ரூ.800 செலவாகும்.

கோவிட் நாசி தடுப்பூசியை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

கோவிட் நாசி தடுப்பூசியை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

பாரத் பயோடெக்-இன்கோவாசிசியின் நாசி தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. இருப்பினும், மக்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு முன்பு தடுப்பூசிக்கான முன்பதிவுகளை செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

ஸ்டெப் 1- CoWIN அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஓபன் செய்யவும். (cowin.gov.in/)

ஸ்டெப் 2- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிட்டு உள்நுழையவும்.

ஸ்டெப் 3- நீங்கள் பெறும் ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்.

ஸ்டெப் 4- பின் உங்கள் தடுப்பூசி நிலையை கிளிக் செய்து, பூஸ்டர் அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். மூன்றாவது டோஸ்-க்கு முதல் இரண்டு ஊசிகளை பெற்றிருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

ஸ்டெப் 5- இதில் உங்கள் பின்கோடு அல்லது மாவட்டப் பெயரை பதிவிட்டு உங்கள் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஸ்டெப் 6- தொடர்ந்து உங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் நேரில் சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Book Covid-19 Nasal Vaccine through online in CoWin Portal? Booster Nasal Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X