இனி பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாகும்: நவ.,8 முதல் இதை செய்ய வேண்டும்- மத்திய அரசு உத்தரவு!

|

கொரோனா தொற்றுநோய் பரவியதையடுத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நவம்பர் 8 ஆம் தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகையை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பணியாளர் அமைச்சகம் அதிகாரப்பூர்வ உத்தரவு தெரிவித்துள்ளது.

பயோமெட்ரிக் முறை

பயோமெட்ரிக் முறை

பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்தாலும் பல்வேறு பாதுகாப்பு அம்சமும் கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகும். பயோமெட்ரிக் இயந்திரங்களுக்கு அருகில் சானிடைசர்கள் கட்டாயமாக வைக்கப்படுவது உறுதி செய்வது அந்தந்த துறை தலைவர்களின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் தங்களது ஊழியர்களின் வருகையை உறுதி செய்யும் வகையில் முன்னும் பின்னும் தங்கள் கைகளை சுத்தம் செய்து பதிவு செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு

அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு

கொரோனா தொற்றுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு என்பது அவசியமானதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தால் சமூக இடைவெளியை கடைபிடிக்க பயோமெட்ரிக் பதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மீண்டும் பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டாலும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றியே அரசு ஊழியர்கள் வருகை பதிவை உறுதி செய்ய வேண்டும்.

கூடுதல் பயோமெட்ரிக் இயந்திரம்

கூடுதல் பயோமெட்ரிக் இயந்திரம்

அனைத்து ஊழியர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யும் போது ஆறு அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பயோமெட்ரிக் இயந்திரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ஊழியர்களும் தங்கள் வருகையை பதிவு செய்ய காத்திருக்கும் நேரம் உட்பட அனைத்து நேரங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் மீட்டிங்

வீடியோ கான்பரன்சிங் மூலம் மீட்டிங்

அதேபோல் மீட்டிங் முடிந்தவரை வீடியோ கான்பரன்சிங் மற்றும் பார்வையாளர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களில் இருக்கும் அனைத்து நேரங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவு

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவு

இதுகுறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது. பயோமெட்ரிக் பதிவு கருவி பயன்படுத்தும் போது சானிட்டைஸர் பயன்படுத்துவது கட்டாயம் எனவும் அதேபோல் ஸ்கேனர் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் கட்டாயம் ஒரு பணியாளர் நியமனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வருகை பதிவை உறுதி செய்வதற்கு முன்னும் பின்னும் கைகளை தாராளமாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு ஆனது 1000-த்துக்கு கீழ் குறைந்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக தற்போதைய பாதிப்பு 990 மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பலரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

1000-த்துக்கு கீழ் பாதிப்பு குறைவு

1000-த்துக்கு கீழ் பாதிப்பு குறைவு

தமிழகத்தில் சுமார் 200 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000-த்துக்கு கீழ் குறைந்திருப்பது பலரையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 990 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் ஆனது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது. சமூக இடைவெளி கடைபிடிப்பது என்பது கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

அதிகரிக்கப்படும் தடுப்பூசி உற்பத்தி

அதிகரிக்கப்படும் தடுப்பூசி உற்பத்தி

கொரோனா பரவலை தடுக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணையாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி உற்பத்தியும் முன்பை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் சுமார் 104 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது, இதை பயன்படுத்தும் மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிப்பது என்பது கட்டாயமாகும். எனவே அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்து, சானிட்டைசர் பயன்படுத்தி, முகக்கவசம் அனுபவிப்பது கட்டாயமாகும்.

Best Mobiles in India

English summary
Biometric registration is mandatory for government employees from November 8

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X