100 கோடி எட்டியாச்சு- இந்தியாவுக்கு பாராட்டு., பிரதமர் மோடிக்கு வாழ்த்து: பில்கேட்ஸ் புகழாரம்!

|

கோவின் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை 101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர். 1 பில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது அது தடுப்பூசி உற்பத்தியாளர்களின் முயற்சியாலும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் முயற்சிகளுக்கும் ஒரு சான்றாகும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவன் சாதனை குறித்து மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியை பகிர்ந்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதில்., இந்தியா 1 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது எனவும் இது இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தியாளர்களின் திறன் மற்றும் கோவின் மூலம் ஆதரிக்கப்படும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் முயற்சிகள் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள்

101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள்

கோவின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, நாட்டில் இதுவரை 101 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் எனவும் ஏறக்குறைய 30 கோடி பேர் இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளதாகவும் 71 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், 100 கோடி என்பது வெறும் எண் மட்டுமல்ல, நாட்டின் திறன் மற்றும் புதிய இந்தியாவின் சின்னம் என தெரிவித்தார். அதோடு இந்தியா செய்யுமா என்று கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதுதான் எனவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள்

இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன எனவும் சீனாவை தவிர டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள அடுத்த நாடு இந்தியாதான் எனவும் முன்னதாக பில்கேட்ஸ் இதேபோல் இந்தியாவை பாராட்டி இருந்தார். இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை பெருமளவு அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துகள்

பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துகள்

சிங்கப்பூர் ஃபிண்டெக் விழாவில் பங்கேற்ற பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் கொள்கைகளை பாராட்டி கூறினார். அதோடு அனைத்து வங்கிகளுக்கும், ஸ்மார்ட்போன் செயலிக்கும் இடையே பணத்தை அனுப்புவது உட்பட பண பரிவர்த்தனை தளத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் திறம்பட்ட செயல்பாடானது பண விநியோகத்திற்கான செலவு மற்றும் பண தேக்கத்தை குறைக்கும் எனவும் இந்தியாவின் நிதி பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் அடையாளங்களாக இருக்கும் லட்சிய தளங்களை பில்கேட்ஸ் பாராட்டினார்.

நவீனத்துவத்துடன் தனித்துவமானது

நவீனத்துவத்துடன் தனித்துவமானது

இந்தியாவில் விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அந்த அமைப்புகளில் இருக்கும் நவீனத்துவம் தனித்துவமானது எனவும் சீனாவைத் தவிர அடுத்து ஒரு நாட்டை கூர்மையாக கவனிக்க வேண்டும் என்றால் அது இந்தியாவாகத் தான் இருக்கமுடியும் என தான் கூறுவதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்

அதுமட்டுமின்றி பில்கேட்ஸ் 2015 ஆம் ஆண்டே பெயர் குறிப்பிடாமல் இதுபோன்ற ஒரு வைரஸ் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார். இதுகுறித்து பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைத் தலைவர் பில் கேட்ஸ் கூறுகையில், 2015 ஆம் ஆண்டு தான் எச்சரித்தபோது இறப்புகள் அதிகமாக இருக்கும் என கூறியதாக குறிப்பிட்டார்.மேலும் கூறுகையில், தான் எச்சரித்ததைவிட இந்த வைரஸ் ஆபத்தானது எனவும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பொருளாதார தாக்கம் குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கணித்ததை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Efforts of millions of health workers: Bill Gates Praised India's 1 Billion Vaccine Doses

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X