கொரோனா வைரஸை கொல்லும் திறன்: 3D முறை முகக்கவசம் அறிமுகம்- இந்த சூழ்நிலைக்கு இது ரொம்ப அவசியம்!

|

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள ThinCr என்ற தனியார் நிறுவனம் ஆன்டிவைரஸ் பண்புகளுடன் கூடிய 3டி அச்சிடப்பட்ட முகமூடிகளை உருவாக்கியுள்ளது. என்-95 மாஸ்க்களுடன் ஒப்பிடும்போது கோவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் இந்த முகமூடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்டார்ட்அப் ThinCr டெக்னாலஜி

ஸ்டார்ட்அப் ThinCr டெக்னாலஜி

புனேவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ThinCr டெக்னாலஜிஸ் 3டி அச்சிடப்பட்ட ஃபேஸ் மாஸ்க்களை கொண்டுள்ளது. இது வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிவைரஸ் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த அம்சம் முகமூடிக்குள் வைரஸ்கள் எதிர்கொள்ளும்போது அதை கொல்லும் திறன் கொண்டுள்ளது.

கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை

கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை

தொற்றுநோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தொற்றுநோய் நாட்டை தாக்கிவரும் நிலையில் கடந்தாண்டு டிடிபி ஆதரித்த ஆரம்பத் திட்டங்களில் ஒன்றுதான் வைரசிடல் மாஸ்க் திட்டம்.

ThinCr என்ற தனியார் நிறுவனம்

ThinCr என்ற தனியார் நிறுவனம்

டிடிபி நிதி ஆதரவை பெற்ற ThinCr என்ற தனியார் நிறுவனம் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த முகமூடிகள் தயாரிப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சாதாரண மாஸ்க், என்-95 மாஸ்க், 3-ப்ளை உள்ளிட்ட மாஸ்க்களை ஒப்பிடும் போது கோவிட்-19 பரவலை தடுக்க தின்சிஆர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தியமான தீர்வுகள்

சாத்தியமான தீர்வுகள்

தொற்றுநோயின் ஆரம்ப காலக்கட்டத்தில் பிரச்சனை மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து சிந்திக்கத் தொடங்கினோம். தொற்றுநோயை தடுப்பதற்கு மிக முக்கியமான கருவியாக இது அமையும் என்பதை நிறுவனம் உணர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த சூழலில் பொதுவான மக்களுக்கு கிடைக்கப்பட்ட முகமூடிகள் வீட்டில் தயாரிக்கப்பட்டவை மேலும் ஒப்பீட்டளவில் குறைந்த தரம் வாயந்ததாக இருந்தது. உயர்தர முகமூடிகளுக்கான ஒரு திட்டத்தை வழிவகுக்க தோன்றியது என ThinCr நிறுவனர் ஷிதல்குமார் ஜம்பாத் தெரிவித்தார்.

3டி அச்சிடும் கொள்கை

3டி அச்சிடும் கொள்கை

இதையடுத்து மெர்க் லைஃப் சயின்ஸ் உதவியுடன் ThinCr வைரஸிடம் இணைந்து சூத்திரங்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இதில் துணி அடுக்கை அமைப்பதற்கும், 3டி அச்சிடும் கொள்கை பூச்சுகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டது. இந்த முகமூடிகள் ஃபில்டர் வழிமுறைகளை தாண்டி கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகின்றன.

SARS-COV-2 வைரஸை செயலிழக்கச் செய்கிறது

SARS-COV-2 வைரஸை செயலிழக்கச் செய்கிறது

இந்த முகக்கவசத்தில் உள்ள பூச்சு SARS-COV-2 வைரஸை செயலிழக்கச் செய்கிறது. முகமூடியில் பூசப்பட்டிருக்கும் பொருள் குறித்து பார்க்கையில், இது சோடியம் ஓலிஃபின் சல்போனேட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது வைரஸ்களுடன் தொடர்பு கொள்ளும்போது வைரஸின் வெளிப்புற தன்மையை சீர்குலைக்கிறது.

பல அடுக்கு துணி வடிப்பான்கள்

பல அடுக்கு துணி வடிப்பான்கள்

இந்த திட்டத்தில் முதன்முறையாக பிளாஸ்டிக் வடிவமைக்கப்பட்ட அல்லது 3டி அச்சிடப்பட்ட மாஸ்க்களோடு வருகிறது. மேலும் இதில் பல அடுக்கு துணி வடிப்பான்களை அமைக்க 3டி அச்சுப்பொறிகளை பயன்படுத்தியாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000 முகமூடிகள் விநியோகம்

6000 முகமூடிகள் விநியோகம்

இந்த மாஸ்க்கானது முப்பரிமாண அச்சிடல் மற்றும் மருந்தியல் ஒருங்கிணைப்போடு வருகிறது. மேலும் இந்த முகக்கவசத்தில் Viricides எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்டுள்ளது. இந்த பூச்சு மூலம் முகக்கவசம் தொடும் கொரோனா வைரஸ் செயலிழந்து விடுகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உறுதியளித்திருக்கிறது. மேலும் முன்னதாகவே வணிக அளவிலான உற்பத்தியை தொடங்க தின்சிஆர் நந்தூர்பார், நாசிக் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு அரசு மருத்துவமனைகளுக்கும் நிறுவனம் மூலம் 6000 முகமூடிகளை விநியோகித்துள்ளது.

Best Mobiles in India

English summary
ThinCR Introduced 3D Printed Antivirus Virucidal face mask

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X