பல்வேறு தேவைக்கும் இது அவசியம்- கோவின் தளத்தில் பாஸ்போர்ட் இணைக்கலாம்: எப்படி இணைப்பது?

|

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் முழு நாட்டிலும் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருகிறது. குறிப்பாக இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது என்றே கூறலாம். இதையடுத்து கோவின் தடுப்பூசி மூலம் நாடுமுழுவதும் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதோடு சான்றிதழ்களை சரிபார்க்கவும் அதை பதிவிறக்கம் செய்யவும் இந்த பயன்பாடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவின் பயன்பாட்டு தளம்

கோவின் பயன்பாட்டு தளம்

கோவின் பயன்பாட்டின் மூலம் பயனர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை தடுப்பூசி சான்றிதழுடன் இணைக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை அரசு இப்போது அறிவித்துள்ளது. கோவின் தளமானது பல்வேறு தரப்பினரும் தடுப்பூசியை எளிதாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

பாஸ்போர்ட் விவரங்கள்

பாஸ்போர்ட் விவரங்கள்

அதேபோல் பாஸ்போர்ட் விவரங்களை புதுப்பிக்க போட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கோவின் தளத்திற்கு சென்றது தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பாஸ்போர்ட் இணைப்பு வழிமுறைகள்

பாஸ்போர்ட் இணைப்பு வழிமுறைகள்

  • www.cowin.gov.in என்ற இணைதளத்தை பதிவு செய்து உள்நுழைய வேண்டும். ஆன்லைனில் கோவின் போர்ட்டலை பார்வையிடவும், அதனுள் நுழைந்து இணைப்பை கிளிக் செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ கோவின் தளத்தை பார்வையிட்டு உள்நுழை என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில் Raise an Issue என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • பாஸ்போர்ட் விருப்ப வழிமுறை

    பாஸ்போர்ட் விருப்ப வழிமுறை

    • அதில் பாஸ்போர்ட் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் புதிப்பிக்க விரும்பும் போது உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். மெனுவில் நபரை தேர்ந்தெடுக்க சரியான பாஸ்போர்ட் விவரங்களை உள்ளிட வேண்டும்.
    • பாஸ்போர்ட் இணைக்கப்பட்ட உடன் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் சில நொடிகளில் காண்பிக்கப்படும்.
    • பாஸ்போர்ட் பதிவடையாத பட்சத்தில் குழப்பம் அடைய தேவையில்லை. காரணம் தங்களின் உள்ளீடுகளில் சிறு பிழைகள் இருக்கலாம். அதை முறையாக சரிபார்த்து மீண்டும் உள்ளிடவும். கோவின் வலைதளம் என்பது பல்வேறு தேவைகளுக்கு பிரதான பயன்பாடாக இருக்கிறது.
    • கோவிட்-19 தடுப்பூசி Co-WIN செயலி மற்றும் போர்டல் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. இதை எப்படி பதிவு செய்வது மற்றும் அதற்கு எந்தந்த விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
    •  Co-WIN போர்டலை ஓபன் செய்யவும்

      Co-WIN போர்டலை ஓபன் செய்யவும்

      கோவிட் தடுப்பூசி பதிவு செய்யும் வழிமுறைகள், முதலில் Co-WIN போர்டலை ஓபன் செய்யவும், https://www.cowin.gov.in/home. என்ற வலைதளத்தை அணுகலாம். பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக Co-WIN 2.0 செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஐபோன் பயனர்களுக்கான இந்த தகவல் தற்போதுவரை கிடைக்கவில்லை.

      கோவின் 2.0 போர்ட்டலுக்கு சென்றவுடன் முகப்பு பக்கத்தில் உங்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டுபிடி என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

      வசிக்கும் இடம் மற்றும் முகவரி

      வசிக்கும் இடம் மற்றும் முகவரி

      அதன்பின் தாங்கள் வசிக்கும் இடம் மற்றும் முகவரியை முறையாக உள்ளிடவும் அல்லது தடுப்பூசி மைய விவரங்களை நேரடியாக பெறுவதற்கு தற்போதைய இடம் என்ற விருப்பதை தேர்ந்தெடுக்கவும்.

      அதன்பின் தங்களை பதிவு செய்க என்ற தேர்வை தேர்ந்தெடுத்து உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். தொலைபேசி எண்ணை உள்ளிட்டவுடன் ஓடிபி எண் கிடைக்கும்.

      இந்த விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்தவுடன் அடையாள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் அரசு மற்றும் தனியார் அம்சம் மூலம் முன்பதிவுக்கான விருப்பத்தை பெறுவீர்கள்.

      ஒருவேலை கோவின் 2.0 மூலமாக கோவிட்-19 தடுப்பூசி பெற முடியாவிட்டால் ஆரோக்கிய சேது என்ற பயன்பாட்டு பயன்படுத்தலாம். இந்த செயலி தற்போது பலரின் சாதனங்களில் இருக்கும். அதை பயன்படுத்தியும் இருப்போம். இல்லாதவர்கள் இதை பதிவிறக்கம் செய்து மொபைல் எண்ணை பதிவிட்டு ஓடிபியை பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும்.

      தடுப்பூசி பயன்பாட்டை கிளிக் செய்யவும்

      தடுப்பூசி பயன்பாட்டை கிளிக் செய்யவும்

      அதன்பின் இதை பதிவு செய்வதற்கு மேல் மெனு ஆப்ஷனை கிளிக் செய்து கோவிட் புதுப்பிப்பு தேர்வுக்கு அடுத்து இருக்கும் கோவின் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் தடுப்பூசி பயன்பாட்டை கிளிக் செய்யவும், தற்போது பதிவு செய்க என்ற விருப்பம் காண்பிக்கப்படும் இதை தேர்ந்தெடுக்கவும். முன்னதாகவே பதிவு செய்திருக்கும்பட்சத்தில் உள்நுழைவு என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண்ணை பதிவிடவும் இதன்பின் சரிபார்க்க தொடரவும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். குறிப்பு ஆன்-சைட் பதிவு 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி பதிவு செய்ய அனுமதிக்காது. இவர்கள் அனைத்து சந்திப்புகளை கோவின் வலைதளம் மற்றும் ஆரோக்கிய சேது மூலமாக முன்கூட்டிய பதிவு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
CoWin Passport Link- How to Add Passport details for covid vaccination Certificate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X