இரண்டு வருடத்துக்கு பிறகு முடிவு- இப்போ இது அனாவசியம்., விரைவில் ரத்தாகும் காலர் டியூன்!

|

கடந்த 2020 முதல் கொரோனா தொற்று இந்தியாவில் பெருமளவு பரவத் தொடங்கியது. மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்து கொரோனைவைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. கொரோனைக் கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் பெரும்பங்கு ஆற்றியது கொரோனா காலர் டியூன். இந்த கொரோனா காலர் டியூன் ஒலிக்கச் செய்தது அனைவரையும் சென்றடையும் விதமாக இருந்தது. ஒருவருக்கு கால் செய்வது முன்பாக எத்தனை அவசரமாக இருந்தாலும் இந்த கொரோனா காலர் டியூன் ஒலிக்கச் செய்த பின்பே அவருக்கு ரிங் சென்று அவரை தொடர்பு கொள்ள முடியும்.

மீள பல்வேறு நடவடிக்கைகள்

மீள பல்வேறு நடவடிக்கைகள்

கடந்த தசாப்தங்களில் மனிதகுலம் சந்தித்த மிக மோசமான வைரஸ் தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் ஆகும். உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. அதேபோல் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் பின்பற்றுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கும்படி சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயனர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் டயலர் ட்யூன் ஒலிக்கச் செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு காலர் டியூனில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகள் ஏர்படுத்தப்பட்டது.

இருமல் சத்தத்துடன் தொடங்கும் காலர் டியூன்

இருமல் சத்தத்துடன் தொடங்கும் காலர் டியூன்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியது. இந்தியாவில் கொரோனா விழிப்புணர்வில் பெரும் பங்காற்றியது இந்த இருமல் சத்தத்துடன் தொடங்கும் காலர் டியூன் தான். இந்த விழிப்புணர்வு காலர் டியூனில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகள் ஏர்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி போதிய இருப்பு வந்த உடன் அனைவரையும் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்ளும்படியும் காலர் டியூன் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை

மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டு அலை ஓய்ந்து, மூன்றாவது அலை நடக்கிறது. கொரோனா மூன்றாவது அலையில் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. காரணம் பொதுமக்கள் பெரும்பாலானோர் தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொண்டு தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்ததே ஆகும். மேலும் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து நான்காவது அலை வந்தாலும் கூட கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

இன்றளவும் ஒலிக்கச் செய்யப்படும் காலர்டியூன்

இன்றளவும் ஒலிக்கச் செய்யப்படும் காலர்டியூன்

இதையடுத்து கொரோனா காலர்டியூன் அறிவிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் மொபைல் போன் சந்தாதாரர்களிடம் இருந்து மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக கொரோனா அறிவிப்பு காலர் டியூன் இன்றளவும் ஒலிக்கச் செய்யப்பட்டு வருகிறது.

கைவிடும்படி மத்திய சுகாதார அமைச்சத்துக்கு கடிதம்

கைவிடும்படி மத்திய சுகாதார அமைச்சத்துக்கு கடிதம்

இதையடுத்து தொலைபேசி அழைப்புகளுக்கு முன்னதாக வரும் கொரோனா காலர் டியூனை கைவிடும்படி மத்திய சுகாதார அமைச்சத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதில் சுமார் இரண்டு ஆண்டுகளாக தொலைபேசி பயனர்களுக்கு ஒலிக்கச் செய்த கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனின் நோக்கம் நிறைவேறிவிட்டது தற்போது இது அத்தியாவசியமற்ற நிலையில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து விரைவில் கொரோனா விழிப்புணர் காலர் டியூன் விரைவில் ரத்தாகி விடும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Pre Call Audio Covid-19 Awareness Corona Callertune is about to End Soon After 2 Years

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X