வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறும் மற்றும் எடிட் செய்யும் அம்சம்.!?

|

லீக் தகவல்களை சாதாரணமாக நினைக்க கூடாது. சில நம்பகமான லீக் தகவல்கள் அப்படியே நிஜமாகிப் போன சம்பவங்களும் உண்டு. ஆனால் என்ன ஒரு சிறு வித்தியாசம், வழக்கமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அலல்து ஐபோன்கள் அல்லது லேப்டாப்கள் பற்றிய லீக்ஸ் தகவல்கள் தான் வெளியாகி, குறிப்பிட்ட கருவிகளின் அறிமுகம் நோக்கிய ஆர்வத்தை தூண்டும். இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு 'விடயத்தின்' லீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது - அந்த விடயம் வேறொன்றுமில்லை - வாட்ஸ்ஆப் தான்.!

அதுவும் மிகவும் அசாதாரணமான அம்சம் ஒன்று வாட்ஸ்ஆப்பில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறும் அம்சம் மற்றும் எடிட் செய்யும் அம்சம்.!

சென்ட் மெஸேஜ்களில் எடிட்

சென்ட் மெஸேஜ்களில் எடிட்

இந்த 2016-ஆம் ஆண்டில் வாட்ஸ்ஆப் ஆனது புதிய அம்சங்களை அறிமுகம் செய்ததோடு மேலும் பல மாற்றங்களை கொண்டு வரும் என்பது போல் தெரிகிறது. அதற்கு ஆதாரமாக வாபீட்டாஇன்போ-வின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் வெளியான கசிவு தகவல் ஒன்று விரைவில் வாட்ஸ்ஆப்பில் சென்ட் மெஸேஜ்களில் எடிட் மற்றும் அதை ரீவோக் (திரும்ப பெற செய்யும்) அம்சம் கொண்டுவரப்பட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விளக்கும் வீடியோ

விளக்கும் வீடியோ

மேலும் அந்த ட்விட்டர் அக்கவுண்ட்டில் ஐஓஎஸ் பதிப்பின் இன்ஸ்டன்ட் மெஸேஜிங் ஆப் வாயிலாக வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெசஜை ரீவோக் செய்வது எப்படி என்பது விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

படித்த பிறகும் கூட

படித்த பிறகும் கூட

மேலும் கசிவின் படி, இந்த திறன் ஆனது ஐஓஎஸ் 2.17.1.869-க்கான வாட்ஸ்ஆப் பீட்டாவில் உள்ளதாக அறியப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் அனுப்பிய மெஸேஜை பெறுநர் பெற்று, அதை படித்த பிறகும் கூட திரும்பப்பெறலாம். இந்த் திரும்பப்பெறும் அம்சம் க்ரூப் சாட்டிலும் நீட்டிக்கப்படுகிறது என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சிறிது காலம்

சிறிது காலம்

எனினும், வழக்கமான பயனர்களுக்காக இந்த அம்சம் விரைவில் உருவாக்கபப்படுமா அல்லது சில காலம் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது தெளிவாக இல்லை. வழக்கமாக வாட்ஸ்ஆப் அதன் எல்லா பயனர்களுக்குமான புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் முன் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

இதேபோல் ரீவோக் அம்சம் தவிர்த்து வாட்ஸ்ஆப் சென்ட் மெஸேஜ்களில் எடிட் செய்யும் அம்சம் ஒன்றையும், ஸ்டேட்டஸ்-தனை புதிய வழியில் காட்சிப்படுத்தும் வேலைகளிலும் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. அதாவது விரைவில் ஸ்டேட்டஸ் ஆனது ப்ரைவேட் ஆக மாற்றப்படவுள்ளது. அதாவது, எத்தனை வாட்ஸ்ஆப் நண்பர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்டை பார்த்துள்ளார்கள் என்பதை பயனாளிகளால் பார்க்க முடியும், மற்றும் இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்களை டெலிட் செய்யவும் முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்வது எப்படி.?

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp might soon allow users to revoke and edit sent messages. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X